Just In
- 11 min ago
புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..
- 2 hrs ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 2 hrs ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Don't Miss!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Movies
விவேக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...தமிழக அரசு உத்தரவு
- News
மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்!
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இரவில் ஆட்டோ ஓட்டுநர், பகலில் கல்லூரி மாணவன்.. 10,12ம் வகுப்புகளில் தேர்ச்சிகூட ஆகாத ஆட்டோ டிரைவரின் சாதனை கதை
10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சிகூட பெறாத ஓர் நபர் பட்ட படிப்பில் கல்லூரியின் முதல் மாணவராக மாறியிருக்கின்றனர். கேரள மாநிலம் திருச்சூரில் அரங்கேறிய ஆச்சரியமிகு சம்பவம் பற்றிய தகவலை இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அபிலாஷ். இவரின் பக்கத்து வீட்டுக்காரர், அவருடைய மகளின் பட்டப் படிப்பிற்காக கேரளா வர்மா கல்லூரியில் பட்டப் படிப்பிற்கான விண்ணப்ப படிவத்தை வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அந்த பெண் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகின்றது.

Source: Mathrubhumi
இதனால், வேறு யாருக்காவது உதவட்டும் என நினைத்து அந்த விண்ணப்ப படிவத்தை மீண்டும் ஆட்டோ ஓட்டுநர் அபிலாஷிடமே அவரது பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்திருக்கின்றார். இதனைப் பெற்றுக் கொண்டு அபிலாஷ், விளையாட்டுத் தனமாக பட்டப் படிப்பிற்காக விண்ணப்பித்திருக்கின்றார்.

இதுவே அவரது வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமைந்திருக்கின்றது. அபிலாஷ், பிஏ தத்துவ படிப்பில் 88 சதவீத மதிப்பெண்ணைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இவர் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தோல்வியைச் சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எனவேதான் இவர் கல்லூரி படிப்பில் முதல் மாணவராக வந்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. ஆட்டோ ஓட்டுநரின் இந்த சாதனைக்கு பேராசிரியர் சங்கரன் நம்பியார் விருது மற்றும் ஷியாம் மெமோரியல் டாப்பர் என்டோவ்மென்ட் பட்டத்தையும் வென்றார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பிஎட் படிப்பில் 100 சதவீத வருகை மற்றும் முதல் வகுப்பில் தேர்ச்சியையும் அவர் பெற்றிருக்கின்றார். இவர், வருமானத்திற்காக இரவில் ஆட்டோவை இயக்கிக் கொண்டு, பகலில் கல்லூரிக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தொடர்ந்து, தற்போது ஆசிரியர் பணியை அவர் மேற்கொண்டு வருகின்றார். அதேசமயம், தாய்காட்டுசேரி எனும் பகுதியில் அவர் ஆட்டோவையும் இயக்கி வருவதாகக் கூறப்படுகின்றது. கோவிட்-19 வைரசால் தற்போது அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருப்பதால் அபிலாஷ் முழு நேர ஆட்டோ ஓட்டுநராக மாறியிருக்கின்றார்.

இதுமட்டுமின்றி உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்று பஞ்சாயத்து அமைப்பிலும் அவர் பங்கு வகித்திருக்கின்றார். ஆகையால், இவர் பல முக அனுபவம் கொண்டவராக மாறியிருக்கின்றார். இவர் திறந்தவெளி பள்ளிக்கூடத்தின் வாயிலாகவே 12ம் வகுப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதையடுத்தே குடும்ப வறுமையின் காரணமாக அவர் ஆட்டோ ஓட்டுநராக மாறியிருக்கின்றார். தொடர்ந்து, இதோடு தனது படிப்பை நிறுத்திக் கொள்ளாமல் அடுத்தடுத்த மேற்படிப்புகளை அவர் தொடர்ந்திருக்கின்றார். இதில் தற்போது அவர் சாதனையும் படைத்திருக்கின்றார்.

தொடர்ந்து தனது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளும் வகையில் இசை வாழ்க்கையிலும் தன்னை அபிலாஷ் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றார். ஆகையால், ஆட்டோவின் மூலம் கிடைப்பதைப் போலவே நாட்டுப்புற பாட்டு, இசை கருவி, பூசாரி, கால் பந்து விளையாட்டு, பேருந்து கிளீனிங், இரவு பாடசாலை மற்றும் கிரேன் ஆபரேட்டர் ஆகியவற்றின் வாயிலாகவும் அவர் வருமானத்தை ஈட்டி வந்திருக்கின்றார்.

ஒற்றை மனிதன் இத்தனை ரோல்களா என மிரள வைக்கும் வகையில் ஓர் வாழ்க்கையை கேரளாவைச் சேர்ந்த இந்த ஆட்டோ ஓட்டுநர் செய்து வருகின்றார். தற்போது பிஜிடிசிஏ-வில் பகுதி நேரமாக இவர் படித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.