இப்படிப்பட்ட காருக்கா மத்திய அரசு அனுமதி தரல!! ஜஸ்ட் மிஸ்... கேரளாவில் உருவாக வேண்டிய ஒரு கார் நிறுவனம்
ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில் நமது இந்தியா மிக பெரிய சந்தை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனாலேயே பல்வேறு வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த 20 வருடங்களில் இந்தியாவில் நுழைந்துள்ளன. ஆனால் அதற்கு முன்பு வரையில், அதாவது 1990ஆம் காலக்கட்டங்களில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், மாருதி சுஸுகி போன்ற இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களே அதிகமாக இருந்தன.
இந்தியாவில் பயணிகள் கார்கள் சந்தை அந்த சமயத்தில் தான் வேகமாக வளர்ச்சி கண்டு வந்ததால், புதிய புதிய நிறுவனங்களும் ஆட்டோமொபைல் துறையில் நுழைந்தன. அந்த வகையில் இந்திய கார்கள் சந்தையில் களம்புகுந்த நிறுவனம் தான் ராஜா குழுமம் ஆகும். கேரளாவை சேர்ந்த இந்த குழுமம் அந்த சமயத்தில் பீடி தயாரிப்பிலும், ஆயுர்வேதா சேவைகளை வழங்குவதிலும் ஈடுப்பட்டு வந்தது.
இந்த குழுமத்தில் இருந்தவர்களுக்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது இருந்த ஆர்வத்தின் விளைவாக ராஜா குழுமத்தின் சார்பாக வடிவமைக்கப்பட்ட எம்பிவி காரை மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். 90ஆம் காலக்கட்டங்களில் நமது இந்தியா உள்பட பெரும்பான்மையான நாடுகளில் செடான் கார்களுக்கே வரவேற்பு அதிகமாக இருந்தது. இருப்பினும் அந்த சமயத்திலேயே தைரியமாக அளவில் பெரிய எம்பிவி காரை ராஜா குழுமம் தயாரித்தாலும், சில பல காரணங்களினால் இந்த காரை அவர்களால் விற்பனைக்கு கொண்டுவர முடியவில்லை.
இருப்பினும், கஸ்வா என பெயரிடப்பட்ட இந்த எம்பிவி காரின் 3 மாதிரிகள் தயாரிக்கப்பட்டன. அவற்றை இப்போதும் சிலர் அதிகாரப்பூர்வமாக ஆர்டிஓ-வில் பதிவு செய்து கேரளாவில் பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒருவரிடம் இருக்கும் ராஜா கஸ்வா எம்பிவி கார் குறித்த வீடியோ தான் மேலே பதிவிடப்பட்டு இருப்பதாகும். இந்த வீடியோவில் காரின் வெளிப்பக்க மற்றும் உட்பக்க தோற்றத்தை தெளிவாக காண முடியும்.

பீடி தொழிலில் கோலோச்சி வந்த ராஜா குழுமம் ஆட்டோமொபைலில் காஜா என்ற பிராண்ட் உடன் 1998இல் களமிறங்கியது. இதற்கு 2 வருடம் முன்பு தான் தற்போதும் இந்திய சந்தையில் செயல்பட்டுவரும் டொயோட்டா நிறுவனம் குவாலிஸ் காரின் மூலம் களம்புகுந்தது. முதற்கட்டமாக காஜா பிராண்டின் சார்பில் 4இல் இருந்து 5 மாதிரிகள் அந்த சமயத்தில் வெளியீடு செய்யப்பட்டன. ஆனால் அந்த மாதிரிகள் பல்வேறு காரணங்களினால் அரசாங்கத்திடம் அனுமதி சான்றை பெறவில்லை.
கஸ்வா எம்பிவி காரை காஜா நிறுவனம் அந்த சமயத்தில் இருந்த பல்வேறு வாகனங்களில் இருந்து பெற்று உருவாக்கியது. தாங்களாகவே காருக்கான பேனல்களையும், மற்ற பாகங்களையும் உருவாக்குவதை காட்டிலும் இவ்வாறான முறையில் பாகங்களை பெற்றது காஜா நிறுவனத்திற்கு செலவு குறைந்ததாக இருந்தது. ஃபைபர் கண்ணாடிகள் மற்றும் உலோக பாகங்களை கொண்டு கஸ்வா எம்பிவி காரின் வெளிப்பக்கம் உருவாக்கப்பட்டது.

ஒரு கட்டத்திற்கு மேல் கஸ்வா காரை உருவாக்க முடியாமல் போனாலும், இந்த காரின் உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட ஃபைபர் கண்ணாடிகள் தொழிலில் அதன்பின்பும் காஜா நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட ஆரம்பித்து, தற்போது வரையிலும் ஃபைபர் கிளாஸை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. காஜாவின் ஃபைபர் கிளாஸை டாடா மார்கோ போலோ, அசோக் லேலண்ட் போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூட வாங்கி பயன்படுத்தி உள்ளன.
சரி மீண்டும் காஜா கஸ்வா காருக்கு வருவோம். இதன் முன்பக்க க்ரில்லில் முடிவிலி டிசைனில் உற்பத்தி நிறுவனத்தின் லோகோ பொருத்தப்பட்டுள்ளதை காணலாம். இந்த காரின் முக்கிய சிறப்பம்சமே அதன் பெயிண்ட் தான். ஏனெனில் கஸ்வாவை ஊதா என்ற வித்தியாசமான நிறத்தில் பெயிண்ட் செய்து வெளியிட்டது காஜா நிறுவனம். இந்த காரில் பொருத்தப்பட்ட 13-இன்ச் வயர்-ஸ்போக் சக்கரங்களை காஜா நிறுவனமே சொந்தமாக உற்பத்தி செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








