ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவருக்கு ரூ86,500 அபராதம்! வண்டிய வித்தா கூட இவ்வளவு பணம் வராது!

டூவீலர் வாகன ஓட்டிக்கு 155 முறை சாலை விதிமுறைகளில் ஈடுபட்டதால் அவருக்கு ரூபாய் 86,500 அபராதமாக (Fined For MV Violence) விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமரா (AI Camera) மூலம் இவர் விதிமுறை மீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது சாலைகளில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து விதிமுறை மீறல்களை ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க ஆங்காங்கே கேமராக்களை பொருத்தி வருகின்றனர். இந்த கேமராக்கள் தானியங்கியாக சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அவர்கள் சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபடும் போது அதை புகைப்படம் எடுத்து ஆதாரமாக வைத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

Kerala biker fined rs 86500 for 155 violations

இப்படியாக கேரள மாநிலத்திலும் ஆங்காங்கே இந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இப்படியாக பொருத்தப்பட்ட கேமராக்களில் சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபடும் நபர்கள் வரிசையாக சிக்கி வருகின்றனர். இப்படியாக சிக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த ஆதாரம் மற்றும் தகவல் அவர்களுக்கு அனுப்பப்படுவதால் அதன் பின்பு அப்பகுதியில் சாலை விதிமுறை மீறல்கள் என்பது குறைந்து கொண்டே வருகிறது.

இப்படியாக கண்ணூர் மாவட்டம் மாட்டூல் பகுதியில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தப்பட்டு அங்கு செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த கேமராவில் முக்கியமாக பைக் ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்கள் செல்லும்போது புகைப்படம் எடுத்து அவர்களது வாகனை பதிவு எண்ணிற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இப்படியாக அந்த கேமரா இருக்கும் பகுதியில் வாகன ஓட்டி ஒருவர் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் மற்றும் மற்ற சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Kerala biker fined rs 86500 for 155 violations

இப்படியாக இவருக்கு செயற்கை நுண்ணறிவு கேமரா இதுவரை 155 முறை சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக ரூபாய் 86,500 வரை அபராதமாக விதித்துள்ளது. கேரள மாநில போக்குவரத்து துறை இதற்குரிய செல்லானை அவ்வப்போது அந்த டூவீலர் வாகன ஓட்டிக்கு அனுப்பியும் அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவை அத்தனையும் செயற்கை நுண்ணறிவு கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் இவர் அவ்வப்போது கேமராவை பார்த்து கேலி கிண்டல் செய்யும் வகையில் செய்கைகளை செய்துள்ளார். இதன் மூலம் இவர் கேமரா இருப்பது தெரிந்தும் வேண்டுமென்றே சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. அடுத்து கேரள மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த 155 விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையை செலுத்த கோரி ஒரே நோட்டீஸாக அவருக்கு வீட்டிற்கு சென்று வழங்கினார்கள்.

Kerala biker fined rs 86500 for 155 violations

அப்பொழுது அதில் உள்ள அபராத தொகையான ரூ86,500 ரூபாய் கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் தற்போது அவ்வளவு பணம் இல்லை என்றும் தனது பைக்கை விற்றால் கூட இந்த அபராதத்தை செலுத்த முடியாது என்றும் அவர் அதிகாரிகளுக்கு கூறி அந்த அபராதத்தை கேன்சல் செய்ய சொல்லி கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் எல்லாம் அவர்கள் கையை மீறி சென்று விட்டதாகவும், அவர்களால் எதுவும் செய்ய முடியாது எனவும் பதில் அளித்துள்ளனர்.

மேலும் இந்த குறிப்பிட்ட வாகன ஓட்டியின் டிரைவிங் லைசென்ஸை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளனர். அவரால் அடுத்த ஓராண்டுக்கு இனி வாகனம் ஓட்ட முடியாத சூழ்நிலை இருக்கிறது. கேரளா அரசு மாநில முழுவதும் சுமார் 726 செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இதற்காக மாநில அரசு ரூ232 கோடியை செலவு செய்துள்ளது. இந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்பு கேரள மாநிலத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.

Kerala biker fined rs 86500 for 155 violations

இந்த செயற்கை நுண்ணறிவு கேமரா ஒரு வாகன ஓட்டி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி செல்வதை கண்டுபிடித்தால் அவருக்கு ரூ500 அபராதம் இருக்கிறது. அதேநேரம் ஒரே வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வது கண்டுபிடித்தால் ரூபாய் ஆயிரம் அபராதம் இருக்கிறது. செல்போன் பேசிக்கொண்டே பைக் ஓட்டுவதை கண்டுபிடித்தால் ரூபாய் 2000 அபராதம் இருக்கிறது. இப்படியாக ஆதாரத்துடன் அபராதம் மிதிப்பதால் வாகன ஓட்டிகள் சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்ட பயப்படுகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் என்பது மிக முக்கியமாக எந்த விதிமுறை மீறல்களும் இல்லாமல் பின்பற்றப்பட வேண்டிய சட்டமாகும். ஆனால் இந்தியாவில் பெரும்பாலான நேரங்களில் இது சட்டங்கள் மீறப்படுகிறது. இதற்கான கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் மக்கள் மத்தியில் சட்ட விதிமுறைகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அதே நேரம் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறையும்.

Note: Images are representative purpose only.

More from DriveSpark

Article Published On: Saturday, November 11, 2023, 16:11 [IST]
English summary
Kerala biker fined rs 86500 for 155 violations highest ai fine
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X