இவர் தான் அந்த செம்மனூர் ஜமீனா? இந்தியாவில் இப்படியொரு பணக்காரரை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க!!

கேரளாவின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான பாபி செம்மனூர் தன்னிடம் உள்ள விலையுயர்ந்த ஃபோர்டு எஃப்650 (Ford F650) வாகனத்தை வீடியோ ஒன்றின் மூலமாக வெளியுலகத்திற்கு காட்டி உள்ளார். யார் இந்த தொழிலதிபர் பாபி செம்மனூர்? இவர் வைத்துள்ள வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கேரள மாநில மக்கள் புது, புது பைக் & கார்களை பயன்படுத்துவதை மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பது நமக்கு தெரியும். கேரளாவில் இளம் தலைமுறையினரில் இருந்து வயதான முதியவர்கள் வரையில் ஆட்டோமொபைல் வாகனங்கள் உடன் நெருங்கிய பிணைப்பை கொண்டுள்ளனர். அப்படியிருக்கையில், கேரள பணக்காரர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

boby chemmanur with ford f650

ஏனெனில், பொதுவாகவே பணக்காரர்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கார் & பைக்குகள் இருக்கும். கேரளாவின் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் பாபி செம்மனூர் அவர்களும் விலையுயர்ந்த கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் தன்னிடம் உள்ள பிரம்மாண்டமான ஃபோர்டு எஃப்650 வாகனத்தை வெளி உலகிற்கு வீடியோ ஒன்றின் வாயிலாக காட்டி உள்ளார்.

டாக்டர் பட்டம் பெற்றவரான தொழிலதிபர் பாபி செம்மனூர் தனது அறக்கட்டளை மூலமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். குறிப்பாக, மக்கள் மத்தியில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக 812கிமீ தொலைவிற்கு பாபி செம்மனூர் ஓடியது கேரளாவில் இவரை மேலும் பிரபலமாக்கியது.

boby chemmanur with ford f650

இவர் சமீபத்தில் கேரளாவின் வயநாட்டில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டத்தை வாங்கியுள்ளார். இதனை விளம்பரப்படுத்தும் விதமாக, இந்தியாவில் விற்பனையில் இல்லாத ஃபோர்டு எஃப்650 என்கிற பிரம்மாண்ட பிக்-அப் டிரக் வாகனத்தை இந்தியாவிற்கு பாபி செம்மனூர் கொண்டு வந்துள்ளார். இந்த டிரக் உடன் பாபி செம்மனூர் இருக்கும் வீடியோ நஜீப் ரெஹ்மான் கேபி என்கிற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபோர்டு எஃப்650 பிக்-அப் ட்ரக்கை பொறுத்தவரையில், இப்படியொரு வாகனத்தை உங்களில் பலர் தங்களது வாழ்நாளில் கண்டிருக்க மாட்டீர்கள். அளவில் பெரியதான கனரக லாரிகளை பார்த்திருக்கலாம், ஆனால் இது மொத்தமாக வேற ரகம். பக்கா அமெரிக்கன் ஸ்டைல் பிக்-அப் டிரக் இதுவாகும். ஃபோர்டு எஃப் பிரிவு பிக்-அப் டிரக் வாகனங்களுக்கு உலகில் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

boby chemmanur with ford f650

ஃபோர்டு எஃப்150 பிக்-அப் டிரக்கை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எஃப்150 வாகனத்தின் பிரம்மாண்ட வெர்சன் தான் எஃப்650 ஆகும். எந்த அளவிற்கு பிரம்மாண்டம் என்றால், வாகனத்தின் பொனெட் ஆனது வீடியோ ஹேங்கர் மற்றும் பாபி செம்மனூரின் தோள்பட்டையை காட்டிலும் உயரமானதாக இருப்பதை காணலாம். வாகனத்தின் முன்பக்க க்ரில்லில் ஃபோர்டு லோகோவை மறைத்தப்படி பாபி செம்மனூர் தனது புகைப்படத்தை ஒட்டியுள்ளார்.

இந்த ஃபோர்டு எஃப்650 வாகனத்தில் ஏற்கனவே பளிச்சிடும் ஹெட்லைட்கள் இருப்பினும், கூடுதல் விளக்குகளை பாபி செம்மனூர் பொருத்தியுள்ளார். இவ்வாறு இந்த எஃப்650 வாகனத்தை நிறைய இடங்களில் இவர் மாடிஃபை செய்து உள்ளார். இந்த அமெரிக்கன் பிக்-அப் ட்ரக்கில் முக்கிய அம்சமாக இடது பக்கத்தில் ஒன்று, வலது பக்கத்தில் ஒன்று என 2 எரிபொருள் டேங்குகள் உள்ளன.

boby chemmanur with ford f650

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமெரிக்கன் பிக்-அப் டிரக்கை வைத்திருந்தாலே தனி கெத்து தான். ஃபோர்டு வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை. விற்பனை செய்யப்பட்ட காலத்திலும் எஃப்650 டிரக் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. ஆதலால், இந்த வாகனத்தை வெளிநாட்டில் இருந்தே பாபி செம்மனூர் இறக்குமதி செய்திருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2024, 17:36 [IST]
English summary
Kerala billionaire boby chemmanur with his ford f650 pick up truck
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X