விற்பனைக்கு வந்த இந்திய பெரும் தொழிலதிபரின் பிரைவேட் ஜெட்... அவருக்கா இப்படியொரு நிலைமை?

மிடில்-கிளாஸ் மக்களுக்கு கார் வாங்குவதே பெரிய கனவுதான். கொஞ்சம் அதிகம் பணம் சேர்ந்துவிட்டால், பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார் எதாவது வாங்கலாமா என யோசிப்போம். இன்னும் அதிக பணம் வைத்திருக்கும் மில்லியனர்கள் ரோல்ஸ்-ராய்ஸ், பெண்ட்லீ போன்ற கார்களை வாங்குவர். ஆனால், பிரைவேட் ஜெட் எல்லாம் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் புரளும் பில்லியனர்களால் மட்டுமே வாங்க முடியும். நம் இந்தியாவை பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாடு என்கிறோம். ஆனால், நம் நாட்டில் நிறைய பேரிடம் பிரைவேட் ஜெட் உள்ளது. அவ்வாறு பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் இந்திய பில்லியனர் ஒருவர் அதனை விற்கும் முடிவில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில், இன்னும் அதிக விலைமிக்க பிரைவேட் ஜெட்டை புதியதாக வாங்கிய காரணத்தினால், இந்த ஜெட்டை விற்கும் முடிவிற்கு அவர் வந்துள்ளார் என கூறப்படுகிறது. யார் அந்த இந்திய தொழிலதிபர்? என்ன மாதிரியான பிரைவேட் ஜெட்டை அவர் விற்கவுள்ளார்? அதற்கு பதிலாக எந்த மாடலை அவர் வாங்கியுள்ளார்? என்பது குறித்த விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

billionaire s private jet for sale

யூசுப் அலி முசாலியம் விட்டில் அப்துல் காதர், கேரளாவை சேர்ந்த பெரும் இந்திய தொழிலதிபர். வயது 68. அபுதாபி வரையில் வணிகத்தை விரிவுப்படுத்தியுள்ள யூசுப் அலியின் லுலு குழுமத்தை பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த அளவிற்கு செல்வந்தர்கள் என்றால், அவர்களிடம் நிச்சயமாக விலையுயர்ந்த சொகுசு கார்கள் பல இருக்கும் என்பதை நான் கூற வேண்டியது இல்லை.

தொழிலதிபர் யூசுப் அலியிடம் பிரைவேட் ஜெட் ஒன்றும் உள்ளது. கல்ஃப்ஸ்ட்ரீம் 550 (Gulfstream 550) என பெயர் கொண்ட அந்த பிரைவேட் ஜெட்டை 2016ஆம் ஆண்டில் இவர் வாங்கினார். இந்த ஜெட் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. பிரைவேட் ஜெட்களை விற்கும் ஸ்டண்டன் & பார்ட்னர்ஸ் அவியேஷன் நிறுவனத்தின் வெப்சைட்டில் யூசுப் அலியின் பிரைவேட் ஜெட் விற்பனைக்காக இடம்பெற்றுள்ளது.

billionaire s private jet for sale

இந்த ஜெட்டை சுமார் ரூ.350 கோடி மதிப்பில் தொழிலதிபர் யூசுப் அலி 2016இல் வாங்கினார். அந்த சமயத்தில், இவரிடம் லீகசி 650 என்கிற பிரைவேட் ஜெட் ஒன்றும் இருந்தது. யூசுப் அலியின் கல்ஃப் ஸ்ட்ரீம் 550 விமானத்தை கல்ஃப் ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் என்கிற அமெரிக்க விமான நிறுவனம் உருவாக்கியது. இந்த பிரைவேட் ஜெட்டில் அதிகப்பட்சமாக 16 பயணிகள் நன்கு சவுகரியமாக பயணிக்கலாம்.

ரோல்ஸ்-ராய்ஸின் BR710C4-11 என்ஜினை கொண்ட யூசுப் அலியின் பிரைவேட் ஜெட் விமானம் இதுவரையில் 3065.11 மணிநேரம் வானில் பறந்துள்ளது. இத்தகைய தனி விமானத்தை விற்கும் கேரள தொழிலதிபர் யூசுப் அலி சமீபத்தில் வாங்கிய பிரைவேட் ஜெட், கல்ஃப் ஸ்ட்ரீம் ஜி600 ஆகும். இதனை கடந்த ஏப்ரல் மாதத்தில் யூசுப் அலி வாங்கினார். இந்த விமானத்தை சுமார் ரூ.483 கோடி மதிப்பில் யூசுப் அலி வாங்கியுள்ளார்.

billionaire s private jet for sale

அதாவது, 2016இல் வாங்கிய விமானத்தை காட்டிலும் இதன் விலை ரூ.133 கோடி அதிகமாகும். இந்த புதிய விமானத்தையும் அமெரிக்காவின் கல்ஃப் ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனம்தான் யூசுப் அலிக்கு உருவாக்கி கொடுத்துள்ளது. T7-YMA என்கிற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த பிரைவேட் ஜெட்டை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கல்ஃப் ஸ்ட்ரீம் நிறுவனம் உருவாக்கி முடித்தது.

அதன்பின், ஏப்ரல் மாதத்தில் இதனை யூசுப் அலி சொந்தமாக்கி உள்ளார். இடையில் எங்கும் நிறுத்தாமல் இந்த விமானத்தை அதிகப்பட்சமாக 6600 நாட்டிகல் மைல் தொலைவிற்கு இயக்க முடியும். இந்த புதிய விமானத்தில் 19 பயணிகளை ஏற்ற முடியும். மேலும், இதில் பிராட் & வொயிட்னி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.133 கோடி வித்தியாசம் எல்லாம் தொழிலதிபர் யூசுப் அலி போன்றோர்க்கு பெரிய விஷயமே கிடையாது. பழைய கல்ஃப் ஸ்ட்ரீம் 550 விமானம் இப்போதுதான் விற்பனைக்கு வந்துள்ளது. யூசுப் அலி வாங்கிய அதே ரூ.350 கோடியில் இந்த விமானம் விற்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், கிட்டத்தட்ட 8 வருடத்திற்கு இந்த பிரைவேட் ஜெட்டை அவர் பயன்படுத்தி உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 10, 2024, 10:13 [IST]
English summary
Kerala billionaire yusuff ali owned private jet for sale check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X