அண்ணாமலைக்கு இணையான பாஜக தலைவர்... கோடி கோடியாய் சொத்து இருந்தும் கம்மி விலையில் கார் வாங்கியது இவரா?

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தார் ராக்ஸ் (Thar ROXX) வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே விற்பனையில் இருந்த தார் 3-கதவு வாகனத்தின் 5-டோர் வெர்சனாக அறிமுகம் செய்யப்பட்டதினாலேயே தார் ராக்ஸ் வாகனத்தை பலரும் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். பாமர மக்களை தான் இந்த புதிய மஹிந்திரா வாகனம் கவர்ந்துள்ளது என்று நினைத்தால், இப்போது பெரும் செல்வந்தர்கள் கூட மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

அந்த வரிசையில், மல்டி-மில்லியனரும், அரசியல்வாதியுமான ஒருவர் பிராண்ட்-நியூ தார் ராக்ஸை டெலிவிரி எடுத்து, அதனுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். யார் இந்த தொழிலதிபராக உள்ள அரசியல்வாதி என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

rajeev chandrasekhar buys mahindra thar

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மஹிந்திராவில் இருந்து அவ்வப்போது புது, புது வாகனங்கள் தரமான உடலமைப்பு மற்றும் பவர்ஃபுல்லான என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்படுவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் 3-கதவுகள் உடன் தார் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது

கரடு முரடான பாதைகளில் அடிக்கடி சென்று வருவோரின் முதன்மையான சாய்ஸாக மஹிந்திரா தார் விளங்குகிறது. இருப்பினும், 3-கதவு தாருக்குள் ஏறுவதும், வெளியேறுவதும் சற்று சிரமமாக இருப்பதாக புகார்கள் கஸ்டமர்களிடம் இருந்து வந்ததை அடுத்து, 5-கதவு தார் வாகனத்தை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா ஈடுப்பட ஆரம்பித்தது.

rajeev chandrasekhar buys mahindra thar

அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்தின் போது 5-கதவு தார் வாகனத்தை 'தார் ராக்ஸ்' என்கிற பெயரில் மஹிந்திரா அறிமுகம் செய்தது. 3-கதவு தாரில் சிறு, சிறு அசவுகரியங்கள் இருப்பினும் அதன் விற்பனை சிறப்பாகவே இருந்தது. அந்த சிறு, சிறு அசவுகரியங்களுக்கு கூட இடம் அளிக்காத வகையில் உருவாக்கப்பட்டதினால் தார் ராக்ஸ் வாகனத்தை பலரும் போட்டி போட்டு வாங்குவர் என அதன் அறிமுகத்திற்கு முன்பே கணிக்கப்பட்டது.

அதன்படி தான் தற்போது நடந்து வருகிறது. கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் சுமார் 9,248 தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் கடந்த மார்ச் மாத சேல்ஸ் ரிப்போர்ட் வெளிவரவில்லை. நிச்சயமாக கடந்த மார்ச் மாதத்திலும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான தார் வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்திருக்கும். அவ்வாறு, தார் ராக்ஸ் வாகனத்தை போட்டி போட்டு வாங்கிவரும் கஸ்டமர்களுள் தொழிலதிபர் ராஜீவ் சந்திரசேகரும் தற்போது இணைந்துள்ளார்.

rajeev chandrasekhar buys mahindra thar

கேரளா (Kerala)-ஐ சேர்ந்த தொழிலதிபரான ராஜீவ் சந்திரசேகர் கேரளா மாநிலத்தின் பாஜக கட்சியின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். அரசியல் பணிகளுக்கு இடையே தனது தொழில்களையும் சிறப்பாக கவனித்துவரும் ராஜீவ் சந்திரசேகர், டெல்லியில் தனது புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த ராஜீவ் சந்திரசேகரின் ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவில், "டெல்லியில் எனது புதிய பயணம் - இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கப்பட்டது, ஓட்டுவது ஒரு முழுமையான மகிழ்ச்சி - மஹிந்திரா தார் ராக்ஸ்!" என குறிப்பிட்டு மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) அவர்களையும் மென்ஷன் செய்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெபுலா ப்ளூ (Nebula Blue) நிறத்தில் ராஜீவ் சந்திரசேகர் வாங்கியிருக்கும் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனம் பார்ப்பதற்கு அருமையானதாக உள்ளது. இவரிடம் உள்ள பணத்திற்கு இன்னும் விலையுயர்ந்த சொகுசு கார்களை கூட வாங்கியிருக்க முடியும். ஆனால், மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை தான் வாங்குவேன் என்கிற ஆவலுடன் இந்த வாகனத்தை வாங்கியிருப்பது போல் தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 1, 2025, 10:23 [IST]
English summary
Kerala bjp president rajeev chandrasekhar buys mahindra thar roxx
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X