பேன்சி நம்பருக்காக லட்சக்கணக்கில் செலவழித்த தொழிலதிபர்: எவ்வளவு தெரிந்தால் இரத்த கொதிப்பே ஏற்படும்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விலையுயர்ந்த கூப் காருக்கு பதிவெண்ணை லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கியுள்ளார்.

பதிவெண்ணுக்காக லட்சக்கணக்கில் செலவழித்த தொழிலதிபர்: எவ்வளவு தெரிந்தால் இரத்த கொதிப்பே ஏற்படும்!

கார்கள் மீது அலாதியான பிரியமுடைய சில பணக்கார வர்கத்தினர், தாங்கள் சாலையில் செல்லும்போது தனித்து தெரியும் வேண்டும் என்பதுக்காக, விலையுயர்ந்த ஸ்போர்ட் ரக கார்களை வாங்கி சாலையில் செல்கின்றனர்.

பதிவெண்ணுக்காக லட்சக்கணக்கில் செலவழித்த தொழிலதிபர்: எவ்வளவு தெரிந்தால் இரத்த கொதிப்பே ஏற்படும்!

நாட்டின் சாலைக்கு எந்த வகையிலும் ஒத்துப்போகாத அந்த கார்கள், சாலையில் செல்லும் போது காதைக் கிழிக்கும் அளவுக்கு சத்தத்தை எழுப்பும். மேலும், தங்கள் கார் செல்லும்போது மற்ற கார்களைக்காட்டிலும் தனித்துவமாக தெரியும் வேண்டும் என்பதற்காக, காரின் நிறம், சைலன்சர் சவுண்ட், நம்பர் பிளேட் உள்ளிட்டவற்றை பிரத்யேமாக பெரும் பொருட்செலவில் அமைக்கின்றனர்.

பதிவெண்ணுக்காக லட்சக்கணக்கில் செலவழித்த தொழிலதிபர்: எவ்வளவு தெரிந்தால் இரத்த கொதிப்பே ஏற்படும்!

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கே.எஸ். பாலகோபால் என்பவர் கூப் ரக போர்ஷே 718 பாக்ஸ்டர் காரை வாங்கியுள்ளார். விலையுயர்ந்த அந்த காரின் பதிவெண்ணுக்கு பேன்சி நம்பர் வாங்குவதுக்காக ரூ.33 லட்சம் ரூபாயை செலவு செய்து அவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பதிவெண்ணுக்காக லட்சக்கணக்கில் செலவழித்த தொழிலதிபர்: எவ்வளவு தெரிந்தால் இரத்த கொதிப்பே ஏற்படும்!

ஜெர்மனி தயாரிப்பான போர்ஷே 718 பாக்ஸ்டர் கார் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது எக்ஸ்-ஷோரூம் விலையில் 81 லட்சம் ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுகிறது.

பதிவெண்ணுக்காக லட்சக்கணக்கில் செலவழித்த தொழிலதிபர்: எவ்வளவு தெரிந்தால் இரத்த கொதிப்பே ஏற்படும்!

இந்த போர்ஷே 718 பாக்ஸ்டர் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் கொண்ட 4-சிலிண்டர் டர்போ பாக்ஸர் எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை 300 குதிரைத் திறனை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக 380Nm டார்க்கையும் இந்த எஞ்ஜின் உற்பத்தி செய்கிறது.

பதிவெண்ணுக்காக லட்சக்கணக்கில் செலவழித்த தொழிலதிபர்: எவ்வளவு தெரிந்தால் இரத்த கொதிப்பே ஏற்படும்!

இந்த நிலையில்தான், போர்ஷே 718 பாக்ஸ்டர் காரை, ரூ.1.2 கோடிக்கு கே.எஸ். பாலகோபால் வாங்கியுள்ளார். மேலும், இந்த காருக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் KL-01-CB-1 என்ற பேன்சி நம்பரையும் வாங்கியுள்ளார். கேரளாவில் பெரும் சர்ச்சையை இந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இவர் செலவு செய்த தொகையானது, புத்தம் புதிய டோயோடா பார்ட்யூனர் காரின் விலையாகும்.

பதிவெண்ணுக்காக லட்சக்கணக்கில் செலவழித்த தொழிலதிபர்: எவ்வளவு தெரிந்தால் இரத்த கொதிப்பே ஏற்படும்!

இதுகுறித்து, கே.எஸ். பாலகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "எனக்கு விலையுயர்ந்த கார் மற்றும் அதற்காக பேன்சி நம்பரை வாங்குவது மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால், அதற்கு நான் பைத்தியம் என்றே கூறலாம். பேன்சி நம்பர்களுக்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவு செய்வேன்" என்றார்.

பதிவெண்ணுக்காக லட்சக்கணக்கில் செலவழித்த தொழிலதிபர்: எவ்வளவு தெரிந்தால் இரத்த கொதிப்பே ஏற்படும்!

இவர் செலவு செய்த தொகையானது மிகப்பெரிய தொகையாகும். இந்த தொகையை எத்தனையே ஏழை எளியோர் ஒரு வேலை உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு செலவு செய்திருக்கலாம் அல்லது ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கு உதவியிருக்கலாம் என கேரளாவைச் சேர்ந்த சமூக நல ஆர்வளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Business Man Spent RS 30 Lakh For Fancy Number. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X