ஒட்டுமொத்த கேரளாவிலும் யாரிடமும் இல்லாத காரை வாங்கிய நபர்! இது காரா இல்ல கப்பலானு வாய பிளந்து பாக்கும் மக்கள்!
கேரளாவிலேயே யாரிடமும் இல்லாத காரை கேரளாவைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லெக்சஸ் (Lexus) நிறுவனத்தின் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த எம்பிவி ரக கார் மாடலான எல்எம் 350எச் (LM 350h) மாடலையே கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் வாங்கி இருக்கின்றார். விஏ அஜ்மல், என்பவரே இந்த காரை வாங்கி இருக்கின்றார். அஜ்மஸ் பிஸ்மி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் எம்டி இவரே ஆவார். இது ஓர் மளிகை சில்லறை வர்த்தக மற்றும் முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகும்.
கேரளா முழுவதிலும் இவர்களுக்கு என தனி 30 பெரிய விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய பிரமாண்ட நிறுவனத்திற்கு சொந்தக்காரரான அஜ்மல்லே தற்போது கப்பல் போன்ற லெக்சஸ் எல்எம் 350எச் சொகுசு எம்பிவி ரக காரை வாங்கி இருக்கின்றார். உருவத்தில் மட்டுமல்ல சொகுசு அம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் இந்த கார் கப்பல் போன்றே காட்சியளிக்கும்.

குறிப்பாக, சாலையில் பயணிக்கும்போது இதில் மிதப்பதைப் போன்ற அனுபவம் வழங்குமாம். இத்தகைய திறன்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் பலரின் பிரியமான கார் மாடலாக லெக்சஸ் எல்எம் 350எச் காட்சியளிக்கின்றது. அதேவேளையில், இதன் விலை மிக அதிகம் என்பதால் குறைவான எண்ணிக்கையிலேயே அது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த கார் இந்தியாவில் ரூ. 2 கோடி தொடங்கி ரூ. 2.5 கோடி வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சொகுசு அம்சங்களை அதிகம் விரும்புவோரைக் குறி வைத்தே லெக்சஸ் இந்த காரை உருவாக்கி இருக்கின்றது. மேலும், அவர்களை குறி வைத்தே இந்தியாவிலும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.
இதன் அடிப்படையில், லெக்சஸ் எல்எம் 300எச் சொகுசு எம்பிவி-யில் இரண்டு விதமான இருக்கை ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 7 சீட்டர் மற்றும் 4 சீட்டர் ஆப்ஷனிலேயே அவை விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. இதில் 4 சீட்டர் வெர்ஷனே மிக அதிக விலையைக் கொண்டதாக உள்ளது.
அதன் விலையே ரூ. 2.5 கோடி ஆகும். 7 சீட்டரின் விலையே ரூ. 2 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மிக மிக அதிக இட வசதி மற்றும் சொகுசான பயண அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகவே எல்எம் 300எச் மாடலில் 4 சீட்டர் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது.
இந்த இரண்டு தேர்வுகளிலும் 2.5 லிட்டர், 4 சிலிண்டர், இன்-லைன், 16 வால்வுகள் கொண்ட டிஓஎச்சி, செயின் டிரைவ் எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கன்றது. இதன் சிசி திறன் 2,487 ஆகும். மேலும், இந்த எஞ்சினால் அதிகபட்சமாக 6000 ஆர்பிஎம்-இல் 142 kW பவரையும், 4,300 மற்றும் 4500 ஆர்பிஎம்மில் 242 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
இத்துடன் ஹைபிரிட் அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது தனித்துவமாக 134 kW மற்றும் 270 என்எம் டார்க்கை வெளியேற்றும். இது முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டாரின் திறன் ஆகும். பின்பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 40 kW மற்றும் 121 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
ஆக, இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் ஹைபிரிட் அம்சத்தின் ஒட்டுமொத்த திறன் வெளிப்பாடு 184 kW ஆக உள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் விதமாக நிக்கல் மெட்டர் ஹைட்ரைட்பேட்டி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதே லெக்சஸ் எல்எம் 350எச் சொகுசு எம்பிவி ஆகும்.
இந்த காரில் சொகுசான ரைடு அனுபவத்தை வழங்குவதற்காக அட்வான்ஸ்டு சல்பென்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஷாக் அப்சார்பர், அடாப்டீவ் வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (LM's Adaptive Variable Transmission) வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது. இது அதிர்வுகளை உறிஞ்சு மிகவும் சௌகரியமான ரைடு அனுபவத்தை வழங்கும்.
இதுதவிர பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் மோதலைத் தவிர்க்கும் முன் கூட்டியே எச்சரிக்கும் அம்சம், லேன் டிபார்ச்சர் அலர்டு, டைனமிக் ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல், அடாப்டீவ் ஹை-பீம் சிஸ்டம், பாதுகாப்பாக வெளியேறுவதற்காக வழிநடத்தும் வசதி, லேன் டிரேசிங் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்று இன்னும் ஏகப்பட்ட வசதிகளையே எல்எம் 300எச் தன்னுள் கொண்டிருக்கின்றது. இந்த காரையே கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் தற்போது வாங்கி இருக்கின்றார். குறிப்பாக, இந்த காரின் விமானத்தின் உட்பக்கத்திற்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும். அதன் இருக்கைகள் விமானத்தின் முதல்-வகுப்பு இருக்கைகளுக்கே டஃப் கொடுக்கும்.
மேலும், ஒரு மினி தியேட்டரை போன்ற திரை, அதிக சாய்வு வசதியைக் கொண்ட இருக்கைகள், ஹெட்ரெஸ்ட், சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் வசதிக் கொண்ட 23 ஸ்பீக்கர்கள் சிறிய குளிர்சாதனப் பெட்டி ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுபோன்று இன்னும் பலதரப்பட்ட சொகுசு வசதிகளை இந்த காரில் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லெக்சஸ் நிறுவனம் சமீபத்தில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு அதன் அனைத்து கார் மாடல்களுக்கும் 8 ஆண்டுகள் வாரண்டி திட்டத்தை நிரந்தரமானதாக மாற்றியது. வாடிக்கையாளர்களிடம் தன்னுடைய தயாரிப்பின் மீதான நம்பிக்கையை விதைக்கும் பொருட்டே இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தை அறிவித்து இருக்கின்றது, லெக்சஸ்.


Click it and Unblock the Notifications








