மொத்த கேரள மக்களையும் அதிர விட்ட பெண் தொழிலதிபர்!! சினிமா நடிகரையே மிஞ்சிவிட்டார் போங்க!
வாகனங்களின் ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்காக ஒரு சிலர் கோடி ரூபாய்களை கூட செலவழித்து உள்ளதை பார்த்திருக்கிறோம். அதாவது, காரின் விலையை காட்டிலும், நம்பர் பிளேட்டிற்காக அதிகம் செலவு செய்வார்கள். பெரும்பாலும் இத்தகைய நபர்கள் கோடீஸ்வரர்களாக தான் இருப்பார்கள். குறிப்பாக, சினிமா நடிகர், நடிகைகள் போட்டிக் போட்டுக் கொண்டு தங்களுக்கு பிடித்த எண்ணில் காருக்கான நம்பர் பிளேட்டை வாங்குகின்றனர். ஆனால், இங்கு ஒரு பெண் தொழிலதிபர் பிரபல நடிகரை காட்டிலும் அதிக விலைக்கு ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கி ஆச்சிரியப்படுத்தி உள்ளார். யார் அவர்? அப்படி எந்த காருக்காக ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளார் என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வாகனங்களுக்கு அதிக விலையில் ஃபேன்சி நம்பர் பிளேட்களை வாங்கி பொருத்துவது ஒரு கலாச்சாரமாகவே மாறி வருகிறது. துபாய் போன்ற வெளிநாடுகளில் தான் இந்த கலாச்சாரம் பரவி வருகிறது என்று பார்த்தால், இந்தியாவிலும் ஃபேன்சி நம்பர் பிளேட்களை வாங்குபவர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில், இங்கு ஒரு கேரள பெண் தொழிலதிபர் ஒருவர் பல கோடி ரூபாயில் தனது காருக்கு ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளார்.

பொதுவாகவே கேரள மக்கள் ஆட்டோமொபைல் வாகனங்களில் கூடுதல் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள் என்பதை பல்வேறு நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். ஆனால், ஃபேன்சி நம்பர் பிளேட்களிலும் மலையாள மக்கள் ஆர்வமாக இருப்பவர்கள் என்பது சமீப காலமாக தான் தெரிய வந்துள்ளது. ஏனெனில், பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் ரூ.7.5 லட்சத்தில் ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கி மொத்த கேரளாவையும் அதிர வைத்து இருந்தார்.
ஆனால், நடிகர் பிரத்விராஜை விட அதிகமாக பெண் தொழிலதிபர் நிரஞ்சனா நடுவத்ரா தனது காருக்கான ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கு செலவு செய்துள்ளார். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லவாழ் நகரத்தில் செயல்படும் நடுவத்ரா டிரேடர்ஸின் இயக்குனராக நிரஞ்சனா நடுவத்ரா செயல்படுகிறார. அத்துடன், இவர் ஒரு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரும் கூட.
நிரஞ்சனா நடுவத்ரா புதியதாக கே.எல் 27 எம் 7777 என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளார். இதற்காக அவர் செலவு செய்துள்ள தொகை ரூ.7.85 லட்சம் ஆகும். நிரஞ்சனா இந்த ஃபேன்சி நம்பர் பிளேட்டை திருவல்லவாழ் ஆர்டிஓ அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஏலம் மூலமாக வாங்கியுள்ளார். இந்த ஃபேன்சி நம்பர் பிளேட்டை நிரஞ்சனா தனது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எச்.எஸ்.இ காருக்காக இத்தனை இலட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.
நிரஞ்சனாவிடம் இருப்பது, கார்பதியன் கிரே நிறத்திலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எச்.எஸ்.இ கார் ஆகும். இந்த லேண்ட் ரோவர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.01 கோடியாக உள்ளது. நிரஞ்சனா ரூ.1.78 கோடி என்கிற ஆன்-ரோடு விலையில் இந்த காரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரில் 1997சிசி, 4-சிலிண்டர் இன்லைன் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
நிரஞ்சனாவின் நடுவத்ரா டிரேடர்ஸ் நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை துறை பணிகள் உள்பட பல்வேறு கட்டுமான பணிகளுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை செய்துக் கொடுத்துள்ளது. நடுவத்ரா குடும்பத்தின் அனில் குமார் மற்றும் சாஜி பாய் தம்பதியின் மகள் நிரஞ்சனா நடுவத்ரா ஆவார். நடுவத்ரா டிரேடர்ஸ் மட்டுமின்றி, ஏர்தெக்ஸ் வெண்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தையும் நிரஞ்சனா கவனித்து வருகிறார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு ஒரே நேரத்தில் இரு நிறுவனங்களை கவனித்துவரும் நிரஞ்சனா போன்றோருக்கு ரூ.7.85 லட்சம் எல்லாம் பெரிய விஷயமே கிடையாது. இருப்பினும், இவ்வாறான பிசியான தொழிலதிபர்கள் ஃபேன்சி நம்பர் பிளேட்களில் அதிக கவனத்தை செலுத்த மாட்டார்கள். இந்த விஷயத்தில் தொழிலதிபர் நிரஞ்சனா நடுவத்ரா வேறுப்பட்டு தெரிகிறார்.


Click it and Unblock the Notifications








