கடைசியா கேஜிஎஃப் படத்துல பார்த்தது... நிஜ உலகில் வாழும் ராக்கி பாய்! இதுக்குகூட ஹெலிகாப்டர் தானா?

காரை டெலிவிரி பெறுவதற்கு கஸ்டமர்கள் பல்வேறு விதமான புதுமையான வழிகளில் ஷோரூம்களுக்கு வந்துள்ளதை பார்த்து இருக்கிறோம். சிலர், விலை குறைவான காரை டெலிவிரி பெற விலைமிக்க சொகுசு காரில் ஷோரூமுக்கு வந்துள்ளனர். அதேபோல், சிலர் காரை டெலிவிரி எடுக்க குதிரை வண்டியில் ஷோரூமுக்கு வந்துள்ள சம்பவங்களை கூட பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு ஒருவர் ஹெலிகாப்டரில் (Helicopter) வந்தது பார்ப்போரை பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பல கோடி ரூபாய்களில் விலையுயர்ந்த கார்களை வாங்கும் தொழிலதிபர்கள் நம் இந்தியாவிலும் அதிகம் பேர் உள்ளனர். ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce), பெண்ட்லீ (Bentley) போன்ற அல்ட்ரா-லக்சரி கார் நிறுவனங்களின் கார்களை இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் வைத்துள்ளனர். அந்த அளவிற்கு, உலகின் மிக பெரும் லக்சரி கார் சந்தையாக இந்தியா விளங்குகிறது.

kerala businessman arrives in helicopter

உலகில் அரிதாக விற்பனையாகும் பெண்ட்லீ கார்களுக்கும் நம் நாட்டில் கஸ்டமர்கள் நிறைய பேர் கிடைக்கின்றனர். அந்த வகையில், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பிராண்ட்-நியூ பெண்ட்லீ பெண்டைகா (Bentley Bentayga) காரை வாங்கியுள்ளார். கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்த வாசனை திரவியம் உற்பத்தி நிறுவனம், 'ஃபிரகிரன்ஸ் வேர்ல்டு' (Fragrance World) ஆகும்.

ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் தேவையான வாசனை திரவியங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் இந்திய அளவிற்கு பிரபலமானதாக விளங்கும் ஃபிரகிரன்ஸ் வேர்ல்டு நிறுவனத்தின் உரிமையாளர் போலாந்து மூசா எனப்படும் மூசா ஹஜி (Moosa Haji) ஆவார். இவரிடம் ஹெலிகாப்டர் ஒன்றும் உள்ளது. தொழிலதிபர் மூசா ஹஜி அதனை மலப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு மேலே நிறுத்தி வைத்துள்ளார்.

kerala businessman arrives in helicopter

தற்போது பெண்ட்லீ பெண்டைகா காரை டெலிவிரி பெறுவதற்கு அந்த ஹெலிகாப்டரில் தான் தொழிலதிபர் மூசா ஹஜி கார் டெலிவிரி நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஹெலிகாப்டரில் வீட்டில் இருந்து புறப்படும் மூசா ஹஜி, காலி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பெண்ட்லீ பெண்டைகா கார் டெலிவிரி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து இறங்குவதை காண முடிகிறது.

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வெளியே வந்தவர் நேராக மைதானத்தின் மத்தியில் துணியால் மூடி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெண்டைகா காரை நோக்கி செல்வது வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. தொழிலதிபர் மூசா ஹஜி காருக்கு அருகே சென்றதும், மூடப்பட்டு இருந்த துணி விலக்கப்பட்டு பெண்டைகா கார் அனைவரது பார்வைக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

பின்னர், பிராண்ட்-நியூ பெண்ட்லீ பெண்டைகா காரினுள் ஏறி அமர்ந்த மூசா ஹஜி அவர்கள், காரை அங்கிருந்து ஓட்டி செல்வதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. காரை மைதானத்தில் இருந்து கொண்டு சென்றவர், அதனை அருகில் உள்ள விரைவுச்சாலை ஒன்றில் பாதுகாப்பு வாகனங்கள் சூழ ஓட்டி செல்லும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

பெண்ட்லீ பெண்டைகா ஆனது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரேயொரு பெண்ட்லீ கார் ஆகும். ரூ.5 கோடியில் இருந்து ரூ.6.75 கோடி வரையில் இந்த பெண்ட்லீ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் உள்ளன. இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில கோடி ரூபாய்கள் அதிகமாக வரும். அதுமட்டுமில்லாமல், இவ்வாறான கார்களை கஸ்டமர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி கொண்ட பின்னரே டெலிவிரி பெறுகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் ரேஞ்ச் ரோவர் (Range Rover), லேண்ட் ரோவர் (Land Rover), டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) போன்ற விலையுயர்ந்த கார்களை பயன்படுத்துபவர்களாக உள்ளனர் என்றால், தொழிலதிபர் மூசா ஹஜியின் செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய முடிகிறது. இந்த பெண்ட்லீ பெண்டைகா காருக்காக மட்டும் ரூ.10 கோடி வரையில் தொழிலதிபர் மூசா ஹஜி செலவு செய்து இருப்பார்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 24, 2025, 23:57 [IST]
English summary
Kerala businessman arrives in helicopter to take delivery of bentley bentayga
மேலும்... #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+