அடேங்கப்பா... பேன்ஸி நம்பருக்காக பல லட்சங்களை செலவழித்த இளம் தொழிலதிபர்... எவ்ளோனு தெரியுமா?

கேரளாவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் பேன்ஸி பதிவு எண்ணுக்காக பல லட்ச ரூபாயை செலவழித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடேங்கப்பா... பேன்ஸி நம்பருக்காக பல லட்சங்களை செலவழித்த இளம் தொழிலதிபர்... எவ்ளோனு தெரியுமா?

இந்திய மக்களை பொறுத்தவரை புதிய கார்களை வாங்குவது என்பது சிறப்பு வாய்ந்த நிகழ்வு. ஒரு குடும்ப உறுப்பினரை வரவேற்பதை போன்றுதான், புதிய கார்களின் வருகையை இந்திய மக்கள் பார்க்கின்றனர். கேரளாவில் தற்போது இளம் தொழில் அதிபரான டாக்டர் பிரவீன் என்பவர் முதல் ஜீப் வ்ராங்லர் ரூபிகான் (Jeep Wrangler Rubicon) காரை வாங்கியுள்ளார்.

அடேங்கப்பா... பேன்ஸி நம்பருக்காக பல லட்சங்களை செலவழித்த இளம் தொழிலதிபர்... எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் அதற்கு பேன்ஸி பதிவு எண்ணை பெறுவதற்காக கூடுதலாக சில லட்ச ரூபாயை அவர் செலவழித்துள்ளார். கேரளாவில் ஆர்டிஓ அலுவலகம் சார்பில், பேன்ஸி பதிவு எண்கள் ஏலம் விடப்படும். இதில் பலர் பங்கேற்று ஏலம் கேட்பார்கள். இந்த வகையில் திருச்சூரை சேர்ந்த டாக்டர் பிரவீன், தனது புத்தம் புதிய ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காருக்கு பேன்ஸி பதிவு எண்ணுக்காக 6.25 லட்ச ரூபாயை செலவழித்துள்ளார்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அடேங்கப்பா... பேன்ஸி நம்பருக்காக பல லட்சங்களை செலவழித்த இளம் தொழிலதிபர்... எவ்ளோனு தெரியுமா?

KL-09-BW-0001 என்ற பேன்ஸி பதிவு எண்ணை அவர் பெற்றுள்ளார். இதுதான் கேரள மாநிலத்தின் முதல் ஜீப் வ்ராங்லர் ரூபிகான் கார் ஆகும். ஜீப் நிறுவனம் நடப்பாண்டில்தான் புதிய வ்ராங்கலர் ரூபிகான் காரை, 68.94 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது இந்திய எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா... பேன்ஸி நம்பருக்காக பல லட்சங்களை செலவழித்த இளம் தொழிலதிபர்... எவ்ளோனு தெரியுமா?

ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரின் 5 டோர் வேரியண்ட் மட்டுமே தற்போது இந்தியாவில் கிடைக்கிறது. ஜீப் வ்ராங்கலர் எஸ்யூவியின் அதிக திறன் வாய்ந்த வெர்சன்தான் ரூபிகான். மிகவும் சவால் நிறைந்த கரடுமுரடான ஆஃப் ரோடு சூழல்களை திறம்பட எதிர்கொள்வதற்கு ஏதுவாக ஜீப் வ்ராங்லர் ரூபிகான் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... பேன்ஸி நம்பருக்காக பல லட்சங்களை செலவழித்த இளம் தொழிலதிபர்... எவ்ளோனு தெரியுமா?

வ்ராங்லர் ரூபிகானை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தபோது, இந்த எஸ்யூவிக்கு இங்கே அதிக டிமாண்ட் இருப்பதாகவும், அதனால்தான் இங்கு விற்பனைக்கு கொண்டு வரும் முடிவை எடுத்ததாகவும் ஜீப் நிறுவனம் கூறியது. ஜீப் வ்ராங்லர் ரூபிகான் எஸ்யூவியில், 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... பேன்ஸி நம்பருக்காக பல லட்சங்களை செலவழித்த இளம் தொழிலதிபர்... எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 265 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. ஆனால் 4X4 எஸ்யூவி வேண்டும் என விரும்புபவர்கள், ஜீப் வ்ராங்லர் ரூபிகானின் அதிகப்படியான விலை காரணமாக அதனை வாங்க முடியாவிட்டால், மஹிந்திரா தார் எஸ்யூவியை தேர்வு செய்யலாம்.

அடேங்கப்பா... பேன்ஸி நம்பருக்காக பல லட்சங்களை செலவழித்த இளம் தொழிலதிபர்... எவ்ளோனு தெரியுமா?

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், அனைத்து அம்சங்களிலும் புதிய தலைமுறை தார் எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் விலை 9.80 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான 4X4 எஸ்யூவி என்ற பெருமையை புதிய தலைமுறை மஹிந்திரா தார் பெற்றுள்ளது. புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு இந்திய சந்தையில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. ஆஃப் ரோடு பயணங்களில் ஆர்வமுடைய பிரபலங்கள் பலரும் தார் எஸ்யூவியை சொந்தமாக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Businessman Spends Rs.6.25 Lakh For A Fancy Number Plate. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X