குடும்பத்துடன் ஓட்டலில் ரூம் போட்டது இதுக்குதானா! 23 லட்ச ரூபா பைக்கை சர்வ சாதாரணமா டெலிவிரி எடுத்த தொழிலதிபர்
கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக புது, புது விலையுயர்ந்த கார்களை வாங்கி வருகிறார். இதனாலேயே இந்த கேரள தொழிலதிபரை பற்றி தொடர்ச்சியாக நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். இந்த வரிசையில் இவர் தற்போது புதியதாக விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) பைக்கை வாங்கியுள்ளார். யார் இந்த கேரள தொழிலதிபர் என்பதை பற்றியும், இவர் வாங்கியுள்ள விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
கேரளாவின் கொச்சியில் தலைமையகத்தை கொண்ட லிட்மஸ்7 (Litmus7) என்கிற ஐடி நிறுவனத்தின் சிஇஓ ஆக இருப்பவர், வேணு கோபாலகிருஷ்ணன் ஆவார். பெங்களூருவிலும் கிளையை கொண்டுள்ள லிட்மஸ்7 நிறுவனத்திற்கு இன்று உலகளவில் நெட்வொர்க் வளர்ந்து இருப்பதற்கு சிஇஓ வேணு கோபாலகிருஷ்ணனின் பங்களிப்பு முக்கியமானது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதன் மூலம் கணிசமான வருவாயை பெற்றுவரும் தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனிடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை சமீபத்தில்தான் இந்த கேரள பணக்காரர் வாங்கியிருந்தார். சமீபத்தில், தனது லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காருக்காக ஃபேன்சி நம்பர் பிளேட்டை (Fancy Number Plate) சுமார் ரூ.46 லட்சம் செலவு செய்து வாங்கியதன் மூலம் இந்தியாவிலேயே ஃபேன்சி வாகன பதிவெண்ணிற்காக அதிக பணத்தை செலவு செய்த நபராக இந்திய அளவில் வேணு கோபாலகிருஷ்ணன் கவனத்தை பெற்றார்.
அதனை தொடர்ந்து, இந்தியாவிலேயே முதல் ஆளாக ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்-2 பிளாக் பேட்ஜ் (Rolls-Royce Series-2 Black Badge) காரை வாங்கிய கேரள தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன், மிக சமீபத்தில்தான் மற்றொரு விலையுயர்ந்த காரான மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63) காரை வாங்கி மீண்டும் ஆச்சிரியப்படுத்தி இருந்தார்.

இவரது ஷாப்பிங் இன்னும் முடிந்தது போல் தெரியவில்லை, ஏனெனில் மறுபடியும் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த வாகனத்தை வேணு கோபாலகிருஷ்ணன் வாங்கியுள்ளார். இந்த முறை சொகுசு கார் கிடையாது, சொகுசு பைக் ஆகும். பிராண்ட்-நியூ பிஎம்டபிள்யூ ஆர்1300 ஜி.எஸ்.ஏ (BMW R1300 GSA) பைக்கை குடும்பத்துடன் வேணு கோபாலகிருஷ்ணன் டெலிவிரி பெறும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த பைக் டெலிவிரி நிகழ்ச்சி ஆனது வேணு கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்காக கொச்சியில் உள்ள ஒரு 5-ஸ்டார் ஓட்டலில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் தனது புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரில் வந்திறங்கினார். இந்த தொழிலதிபரது இந்த மெர்சிடிஸ் கார் இன்னமும் தற்காலிக நம்பர் பிளேட்டையே கொண்டுள்ளதை வீடியோவில் காணலாம்.
பிஎம்டபிள்யூ ஆர்1300 ஜிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.22.95 லட்சமாக உள்ளது. ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இவ்வளவு விலை கொண்ட பிஎம்டபிள்யூ பைக்கை சர்வ சாதாரணமாக ஓட்டலின் பைக் கேரேஜில் வைத்து வேணு கோபாலகிருஷ்ணன் டெலிவிரி பெற்றுள்ளார்.
பைக்கை இவர் டெலிவிரி எடுத்ததும் ஒரு சிறிய ரவுண்ட் சென்றுவந்தார். வீடியோவில் பைக்கின் தோற்றத்தை பார்க்கும்போது, பைக்கில் அனைத்து விதமான ஆக்ஸஸரீகளும் வழங்கப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது. இத்தகைய விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக் கேரளாவிலேயே எங்களுக்கு தெரிந்தவரையில் இதுதான் முதல்முறை என நினைக்கிறோம். 18.9 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கை கொண்ட ஆர்1300 ஜிஎஸ்ஏ பைக்கில் 1300சிசி பாக்ஸர் என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கேரள தொழிலதிபரின் 5வது பிஎம்டபிள்யூ பைக்கான இதன் டெலிவிரியை ஷோரூமுக்கு மாற்றாக இவர் தங்கியிருக்கும் ஓட்டலின் வாகன பார்க்கிங் பகுதியில் சிறிய நிகழ்ச்சி போல் ஏற்பாடு செய்திருப்பதில் இருந்து வேணு கோபாலகிருஷ்ணனின் பவரை அறிய முடிகிறது. தென்னிந்தியாவில் ஆட்டோமொபைல் பிரியராக இவர் பெரிதும் கவனத்தை பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications








