ரோட்ல எங்க பார்த்தாலும் இப்படிப்பட்ட டிஃபெண்டரை பார்க்க முடியாது! குடும்பத்தை திக்கு முக்காட செய்த தொழிலதிபர்!
பழங்காலத்தில் இருந்தே உலக நாடுகள் மத்தியில் நம் இந்தியா ஆனது அதன் பல்வேறு வகையிலான மசாலா பொருட்களுக்கு பிரபலமானது என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. ஆங்கிலேயர்கள் இந்தியாவை தேடி வந்ததே இங்குள்ள மசாலாக்களை எடுத்து செல்லவே என்பது எல்லாம் உங்களுக்கு தெரிந்ததே. இதனாலேயே, நாடு விடுதலை அடைந்த பின் பலர் இந்திய மசாலாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை துவங்கினர்.
அவ்வாறு, ஏலக்காய், மிளகு, திப்பிலி போன்ற மசாலா பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை துவங்கி, தற்போது 'ஸ்பைஸ் கிங்' (Spice King) என அறியப்படுபவர் டாக்டர் விஜு ஜாகப் (Dr. Viju Jacob) ஆவார். கேரளாவை சேர்ந்தவரான இவர் நடத்தும் சிந்தைட் இன்டஸ்ட்ரீஸ் (Synthite Industries) ஆனது உலகளவில் பிரபலமான மசாலா விற்பனை நிறுவனமாக விளங்குகிறது.

இதன் மூலம் தொடர்ந்து அதிக அளவிலான இலாபம் பார்த்துவரும் விஜு ஜாகப், ஒரே வாரத்தில் இரு விலையுயர்ந்த கார்களை வாங்கி அசத்தி உள்ளார். மற்ற கேரள தொழிலதிபர்களை போலவே விஜு ஜாகப் அவர்களுக்கும் விலையுயர்ந்த சொகுசு கார்கள் என்றாலே தனி ஆர்வம் உண்டு. இதனாலேயே இவர் புதியதாக கார் வாங்குவதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.
அந்த வரிசையில், கடந்த ஒரே வாரத்தில் இரு விலையுயர்ந்த கார்களை விஜு ஜாகப் டெலிவிரி (Delivery) பெற்றுள்ளார். இதுகுறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட கார் ஷோரூம்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளன. கேரளாவை சேர்ந்தவர் என்பதால், மலைப்பிரதேச பகுதிகளில் ஓட்டுவதற்கு ஏற்ற விலையுயர்ந்த கார்களை வாங்குவதில் விஜு ஜாகப் ஆர்வம் காட்டுகிறார்.

அந்த வகையில் கடந்த 1 வாரத்தில் இவர் வாங்கியிருப்பவை லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) என்கிற எஸ்யூவி காரும், பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் (BMW M4 Competition) காரும் ஆகும். இதில், தொழிலதிபர் விஜு ஜாகப் முதலாவதாக வாங்கியது, பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கார் ஆகும்.
கண்டெயினர் லாரியில் அடைத்து, இந்த பிஎம்டபிள்யூ கார் விஜு ஜாகப்பின் வீட்டிற்கே வந்து டெலிவிரி செய்யப்பட்டு உள்ளது. எம்4 காம்பெடிஷன் காரை இவர் 'ஐஸல் ஆஃப் மேன் க்ரீன் மெட்டாலிக்' என்கிற பச்சை நிறத்தில் வாங்கி உள்ளார். அதேநேரம், காரின் உட்புறம் நேர் மாறாக ஆரஞ்சு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
2 கதவுகளை மட்டுமே கொண்ட பெர்ஃபார்மன்ஸ் கூபே காரான பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் காரில் 3 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 530 பிஎஸ் மற்றும் 650 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்த பிஎம்டபிள்யூ காரை தொடர்ந்து விஜு ஜாகப் வாங்கியிருக்கும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார் ஆனது விஜு ஜாகப்பின் விருப்பத்திற்கேற்ப கஸ்டமைசேஷன் (Customisation) செய்யப்பட்டு உள்ளது. இதனாலேயே, கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இருக்கும் இந்த டிஃபெண்டர் கார் ஆனது மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் பார்ப்பதற்கு வித்தியாசமானதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில் தொழிலதிபர் விஜு ஜாகப் வாங்கியிருக்கும் கார்கள் இரண்டுமே பார்ப்பதற்கு விசித்திரமானவை ஆக உள்ளன. இதில் இருந்து இவர் எந்த அளவிற்கு கார்களை பற்றிய ஆர்வலராக உள்ளார் என்பதை அறிய முடிகிறது. இந்த இரு புதிய கார்கள் மூலமாக விஜு ஜாகப்பின் கேரேஜ் இன்னும் பெரியதாகி உள்ளது.


Click it and Unblock the Notifications









