கூகுள் மேப்பை பார்த்து கார் ஓட்டுனா இப்படி தான் நடக்கும்! என்ன ஆச்சு தெரியுமா?
பார்த்து கார் ஓட்டிய டிரைவர் ஒருவர் மேப் சொன்ன திசையில் திரும்பிய நிலையில், காரை ரோடு என நினைத்து ஆற்றுக்குள் இறக்கிய சம்பவம் சமீபத்தில் கேரளாவில் நடந்துள்ளது. வழி தெரியாமல் இவர்கள் கூகுள் மேப்பை பார்த்து பயணித்து கடைசி உயிருக்கே ஆபத்தான சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள். இது எப்படி நடந்தது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 4 நண்பர்கள் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார்கள். அவர்கள் தங்களது சொந்த ஃபோர்டு என்டேவர் காரில் கேரளா பகுதிக்கு வந்து அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து உள்ளார்கள். கேரளாவில் இவர்களுக்கு வழி தெரியாததால் ஒவ்வொரு முறையும் கூகுள் மேப் பார்த்து பயணம் செய்துள்ளார்கள். அனைத்து இடங்களுக்கும் கூகுள் மேப் மூலமே வழி தேடி அதன் வழியே சென்றுள்ளார்கள்.

இந்நிலையில் இவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் போது கூகுள் மேப் குறிப்பிட்டு சாலை வழியாக திரும்ப வேண்டும் என காட்டியுள்ளது. அப்பொழுது அந்த பகுதியில் என்ன இருக்கிறது என பார்க்காமல் காரின் டிரைவர் காரை கூகுள் மேப் காட்டிய திசையில் திருப்பி உள்ளார். ஆனால் அந்த இடத்தில் சாலை இல்லை அதற்கு பதிலாக மிகப்பெரிய ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.
காரின் ஓட்டுனர் இது சாலை என நினைத்து ஆற்றுக்குள் காரை இறக்கியுள்ளார். கார் ஆற்றுக்குள் இறங்கிய ஒரு சில நிமிடங்களில் தான் இது ஆறு என அவர்களுக்கு தெரிந்துள்ளது. உடனடியாக காருக்குள் இருந்த ஒரு பயணி மட்டும் எப்படியோ தப்பி வெளியே வந்துள்ளார். வந்து அருகில் உள்ள ஊர் மக்களை அழைத்துள்ளார். கார் உள்ளே இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் சிக்கி உள்ளதாக அவர்களிடம் கூறினார்.

உடனடியாக உள்ளூர் மக்கள் உதவி செய்து காருக்குள் இந்த நபர்களை முதலில் மீட்டார்கள். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அங்கு வந்து தீயணைப்பு துறையினர் ஜேசிபி இயந்திரம் மற்றும் உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் ஆற்றுக்குள் மூழ்கிய காரை மீட்டெடுத்தார்கள். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காரின் ஓட்டுனரிடம் இது குறித்து விசாரித்த போது கூகுள் மேப்பில் காட்டிய வழியில் தான் தான் பயணித்ததாகவும், இங்கு தண்ணீர் கிடப்பதை பார்த்து தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால் தண்ணீர் வழியாக தைரியமாக செல்லலாம் என்று நினைத்து தான் சென்றதாக கூறியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக இவர்கள் பயணம் செய்து வந்த கார் பெரும் 10 கிலோமீட்டர் வேகத்தில் தான் வந்தது. இதனால் இவர்கள் பெரிய அளவில் உள்ளே செல்லவில்லை. அதிக வேகமாக வந்திருந்தால் கட்டுப்படுத்த முடியாமல் ஆற்றில் காரை அடித்து செல்ல கூட வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் வேகம் குறைவாக வந்ததால் உயிர் தப்பி உள்ளார்கள். இல்லையென்றால் இந்த நான்கு பேரும் உயிரிழந்திருக்க கூட வாய்ப்புள்ளது.
நீங்கள் பயணம் செய்யும்போது கூகுள் மேப் மூலம் வலியை தேர்வு செய்தாலும் சாலையில் கவனமாக இருக்க வேண்டும். சாலையில் என்ன இருக்கிறது என பார்த்து பயணம் செய்ய வேண்டும் என்னதான் கூகுள் மேப் சரியான வழியை காட்டினாலும் நீங்கள் முடிந்த அளவிற்கு அப்பகுதியில் உள்ள லோக்கல் மக்களிடம் உதவி கேட்பது நிச்சயம் சிறந்த விஷயம் தான். இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் உதவி செய்ய தயாராக தான் இருக்கிறார்கள்.
கூகுள் மேப்பை பார்த்து ஆற்றுக்குள் கார் புகுந்து செல்வது என்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்னர் இந்தியாவில் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. கூகுள் நிர்வாகம் தனது மேப்பை இதற்கு முன்னர் பயணம் செய்த பயணிகளின் தரவுகளை வைத்து அப்டேட் செய்து வருகிறது.
சிலர் ஆற்றில் தண்ணீர் இல்லாத நிறம் அதில் பயணித்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதை வைத்து இந்த தரவுகளை கூகுள் மேப் தந்து இருக்கலாம். ஆனால் கூகுள் மேப் தரவுகளை எப்பொழுதும் முழுமையாக நம்ப வேண்டாம். எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் பாதுகாப்பாக இருக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது கூகுள் மேப் மூலம் வழியை பார்த்து பயணம் செய்வது என்பது ஒரு நல்ல வழி தான். ஆனால் எல்லா நேரத்திலும் கூகுள் மேப்பை முழுமையாக நம்ப கூடாது. எப்பொழுதும் சாலையில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக தேசிய நெடுஞ்சாலைகள் இல்லாமல் கிராமப் பகுதி சாலை வழியாக நீங்கள் பயணிக்கும் போது உள்ளூர் மக்களிடம் வழி கேட்பது சிறந்தது.


Click it and Unblock the Notifications








