ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

விபத்தை ஏற்படுத்தி விட்டு, காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக பலே திட்டம் தீட்டிய கார் உரிமையாளர் ஒரு வழியாக சிக்கியுள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

இந்திய சாலைகளில் தினந்தோறும் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. சில சமயங்களில் விபத்துக்களுக்கு காரணமான நபர்கள் உடனடியாக சம்பவ இடத்தில் இருந்து தப்பி விடுகின்றனர். இந்த வகையில் ஸ்கூட்டர் ஒன்றின் மீது மோதி விட்டு நிற்காமல் தப்பித்த கார் ஓட்டுனரை காவல் துறையினர் சமீபத்தில் பிடித்துள்ளனர்.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

விபத்து நடைபெற்ற பிறகு, அவர் ஒரு மாத காலத்திற்கும் மேலாக காரை மறைத்து வைத்திருந்தார். எனினும் தனது இருப்பிடத்திற்கு அருகே உள்ள ஒர்க் ஷாப்பிற்கு காரை கொண்டு வந்தபோது, காவல் துறையினரிடம் அந்த நபர் சிக்கி கொண்டார். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று இந்த சாலை விபத்து நடைபெற்றுள்ளது.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த நிதிஷ் என்ற கார் ஓட்டுனர், ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த 32 வயதான சந்தீப் என்பவர் மீது மோதினார். விபத்து நடைபெற்ற பிறகு நிதிஷ் காரை நிறுத்தவில்லை. மாறாக அங்கிருந்து தப்பி சென்று விட்டார். சந்தீப் ஓட்டி வந்த ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் இந்த விபத்தில் சுக்குநூறாக நொறுங்கி விட்டது. அத்துடன் சந்தீப்பிற்கும் படுகாயம் ஏற்பட்டது.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

விபத்து நடைபெற்றவுடன் அங்கிருந்தவர்கள் சந்தீப்பை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதே சமயம் நிதிஷ் தனது காரை தனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு இடத்தில் மறைத்து விட்டார். அதனை 1 மாதத்திற்கும் மேலாக வெளியே எடுக்கவில்லை. மறுபக்கம் இந்த விபத்து தொடர்பான விசாரணையை காவல் துறையினர் தீவிரப்படுத்தினர்.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

எனினும் விபத்திற்கு காரணமான காரின் முழுமையான பதிவு எண்ணை காவல் துறையினரால் கண்டறிய முடியவில்லை. விபத்தை ஏற்படுத்தியது பச்சை நிற கார் என்பதும், KL 58 என்ற பதிவு எண்ணை அந்த கார் கொண்டுள்ளது என்பதை மட்டும்தான் சிசிடிவி கேமரா பதிவுகளில் இருந்து காவல் துறையினரால் கண்டறிய முடிந்தது.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

இந்த தகவல்களை வைத்துக்கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் விபத்தை ஏற்படுத்திய நிதிஷ் காரை மறைத்து வைத்து விட்டதால், காவல் துறையினரால் அந்த காரை கண்டறிய முடியவில்லை. எனினும் ஒர்க் ஷாப்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் காரும் சேதமடைந்திருந்தது.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

எனவே உரிமையாளர் ஒர்க் ஷாப்பிற்கு காரை கொண்டு வரக்கூடும் என கருதி அங்கும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே விபத்து நடைபெற்று பல நாட்கள் கடந்து விட்டதால், காவல் துறையினர் விசாரணை நடத்துவதை நிறுத்தியிருப்பார்கள் என நிதிஷ் நினைத்து கொண்டார். இந்த தைரியத்தில், மறைத்து வைத்திருந்த காரை அவர் வெளியே எடுத்தார்.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

காவல் துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக, தனது வீட்டில் இருந்து சுமார் 12-15 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் நிதிஷ் காரை நிறுத்தியிருந்தார். ஆனால் இவ்வளவு திட்டமிட்டு செயல்பட்டும் கூட அவை எதுவும் அவருக்கு உதவி செய்யவில்லை. ஏனெனில் நிதிஷ் வசிக்கும் பகுதியை சேர்ந்த காவலர் ஒருவர் அந்த காரை கவனித்து விட்டார்.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

பச்சை நிற செவர்லே பீட் கார் ஒன்று நம்பர் பிளேட் இல்லாமல் ஒர்க் ஷாப்பிற்கு சென்று கொண்டிருப்பதை அவர் கவனித்தார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதில், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடைபெற்ற விபத்தை ஏற்படுத்தியது இந்த கார்தான் என்பது தெரியவந்தது. உடனே ஒல்லூர் காவல் துறையினர் நிதிஷை பிடித்து விட்டனர்.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

அவர்கள்தான் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அத்துடன் நிதிஷிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சந்தீப், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டார். ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. மருத்துவ சிகிச்சைக்காக அவர் 3 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவழித்து விட்டார்.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

அத்துடன் தற்போது வேலைக்கு செல்லும் நிலையிலும் அவர் இல்லை. விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடும் நபர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும். ஆனால் நிதிஷ் மீது என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்ற விபரங்கள் தற்போது கிடைக்கவில்லை. எனினும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

இதுகுறித்து மனோரமா ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இருந்து நாம் கற்று கொள்வதற்கு பல்வேறு பாடங்கள் உள்ளன. முடிந்த வரை விபத்து ஏற்படாத வகையில் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்குங்கள். அதையும் மீறி ஒருவேளை விபத்து நடைபெற்று விட்டால், பாதிக்கப்பட்ட நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லுங்கள்.

ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கார் ஓனர் செய்த காரியம்... சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கினார்...

உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால், பாதிப்புகளை குறைக்கலாம். அதை விடுத்து அங்கிருந்து தப்பி செல்வது சரியான விஷயமாக இருக்காது. பெரும்பாலும் கவனக்குறைவு காரணமாகவே விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. எனவே போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதுடன், மிகவும் கவனமாக வாகனங்களை இயக்குங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala: Chevrolet Beat Driver Arrested For Hit-and-run - Details. Read in Tamil
Story first published: Wednesday, February 3, 2021, 13:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X