கேரள முதல்வர் பினராயி விஜயனின் டொயோட்டா கார்கள் மீது அதிர வைக்கும் புகார்... என்னவென்று தெரியுமா?

கேரள முதல்வர் பினராயி விஜயனின் டொயோட்டா கார்கள் மீது அதிர வைக்கும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் டொயோட்டா கார்கள் மீது அதிர வைக்கும் புகார்... என்னவென்று தெரியுமா?

உலகிலேயே பாதுகாப்பற்ற மற்றும் மிகவும் அபாயகரமான சாலைகளை கொண்ட நாடு இந்தியா. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் வேக வரம்பை பின்பற்றுவது இல்லை. அதற்கு பதிலாக அதிவேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். இதன் காரணமாக இந்திய சாலைகளில் தினந்தோறும் ஏராளமான விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் டொயோட்டா கார்கள் மீது அதிர வைக்கும் புகார்... என்னவென்று தெரியுமா?

எனவே அரசாங்கமும், போலீசாரும் விதிமுறைகளை முறையாக அமல்படுத்தி வாகனங்கள் அதிவேகத்தில் பயணிப்பதை தவிர்க்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அரசு மற்றும் காவல் துறை தரப்பில் இருந்து எவ்வளவு முயன்றாலும் வாகன ஓட்டிகள் வேக வரம்பை பின்பற்றுவது இல்லை. சில சமயங்களில் அரசு அதிகாரிகளே வேக வரம்பை பின்பற்றுவது கிடையாது என்பதுதான் வேதனை.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் டொயோட்டா கார்கள் மீது அதிர வைக்கும் புகார்... என்னவென்று தெரியுமா?

இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரின் கார்கள் பல முறை வேக வரம்பை மீறி பயணம் செய்துள்ளன. பப்ளிக் சலான் போர்ட்டலில் இந்த தகவல்கள் கிடைக்கின்றன. இதன்படி கேரள முதல்வர் பினராயி விஜயனின் இரண்டு அதிகாரப்பூர்வ டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார்கள் ஸ்பீடு லிமிட்டை பல முறை மீறியுள்ளன.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் டொயோட்டா கார்கள் மீது அதிர வைக்கும் புகார்... என்னவென்று தெரியுமா?

இந்த இரு கார்களும் குறைந்தபட்சம் 14 முறை வேக வரம்பை மீறி பயணம் செய்துள்ளன. கேரளா முழுவதும் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஸ்பீடு டிராப்களில் இது பதிவாகியுள்ளது. கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனின் ஒரு அதிகாரப்பூர்வ டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா 5 முறை ஸ்பீடு லிமிட்டை கடந்து சென்றுள்ளது. இதன் பதிவு எண் KL 01 CB 7400 ஆகும்.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் டொயோட்டா கார்கள் மீது அதிர வைக்கும் புகார்... என்னவென்று தெரியுமா?

அதே சமயம் அவரது மற்றொரு அதிகாரப்பூர்வ டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார், 9 தடவை ஸ்பீடு லிமிட்டை மீறியுள்ளது. இதன் பதிவெண் KL 01 CB 8355. கேரள மாநில போக்குவரத்து காவல் துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும் இந்த டேட்டா உள்ளது. இதேபோல் கேரள நிதியமைச்சர் ஐசக் தாமஸின் அதிகாரப்பூர்வ காரும் வேக வரம்பை பல முறை மீறியுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் டொயோட்டா கார்கள் மீது அதிர வைக்கும் புகார்... என்னவென்று தெரியுமா?

கேரள நிதியமைச்சர் ஐசக் தாமசும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரைதான் அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. KL 01 CB 8344 என்ற பதிவு எண் கொண்ட அவரது டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா 28 முறை வேக வரம்பை மீறி பயணம் செய்துள்ளது. இந்த தகவலும் கூட கேரள போக்குவரத்து போலீசின் பொது வெப்சைட்டில் உள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் டொயோட்டா கார்கள் மீது அதிர வைக்கும் புகார்... என்னவென்று தெரியுமா?

ஆனால் வேக வரம்பை மீறி சென்ற சமயங்களில் எல்லாம் கேரள முதல்வர் பினராயி விஜயனும், நிதியமைச்சர் ஐசக் தாமசும் காருக்குள் இருந்தார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை. அதேபோன்று இந்த விதிமுறை மீறலுக்கான அபராதம் முறையாக செலுத்தப்பட்டதா? என்பதும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் அபராதம் செலுத்தப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தில், விதிமீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Source:News 18 Kerala

More from DriveSpark

Article Published On: Monday, October 28, 2019, 17:15 [IST]
English summary
Kerala Chief Minister Pinarayi Vijayan's Toyota Innova Crysta MPVs Found Speeding Multiple Times. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+