நாயை காரில் அழைத்து செல்பவரா நீங்க.. இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க! போலீஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காங்க!

செல்லப்பிராணி பிரியர்கள் தாங்கள் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளை வாகனத்தில் அழைத்துச் செல்வது என்பது வாடிக்கையான ஒன்று. ஒரு சிலர் கார்களில் அழைத்துச் செல்வதைப் போல டூ-வீலர்களில் ஓர் பயணியை போல பின்னால் அமர வைத்து நாய் போன்ற வீட்டில் வளர்க்கும் பிராணிகளை அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே வளர்ப்பு நாயை காரில் அழைத்துச் சென்றவரின் ஓட்டுநர் உரிமத்தை மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ரத்துச் செய்யும் பணியில் அதிரடியாக களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரளா மாநிலம் கொல்லத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கையை அம்மாநில மோட்டார் வாகனத் துறையினர் எடுத்து வருகின்றனர். இதற்கு சான்றாக பல்வேறு அதிரடி நடவடிக்கை சம்பவங்கள் கேரளாவில் அரங்கேறி இருக்கின்றன.

License suspension for driving with dog

இந்த நிலையிலேயே தற்போது இந்த சம்பவமும் அரங்கேறி இருக்கின்றது. நாயுடன் காரில் பயணித்தவர் கிறித்தவ தேவாலய பாதிரியார் என அடையாளம் என காணப்பட்டுள்ளார். அவருடைய பெயர் பிஜூ வின்சென்ட் என கூறப்படுகின்றது. இவர் சமீபத்தில் தான் வளர்க்கும் நாயை மடியில் அமர வைத்தவாரு காரில் பயணித்திருக்கின்றார்.

இதுகுறித்த வீடியோவே சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோவின் அடிப்படையிலேயே பாதிரியார் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணியில் கேரளா மாநில மோட்டார் வாகன பிரிவு களமிறங்கி இருக்கின்றது. அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் அவர்கள் களமிறங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆனால், காரை ஓட்டி வந்த பாதிரியாரோ தான் வளர்க்கும் அந்த நாய்க்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும், இதற்காக அன்றைய தினமே மருத்துவமனைக்கு சென்று அதற்கு சிகிச்சை பார்த்ததாகவும் தெரிவித்தார். அப்போதே அந்த நாயை தன்னுடைய மடியில் வைத்த பயணித்ததாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இது ஆபத்தான ஓட்டும் யுக்தி என்பதால் அந்த பாதிரியார் மீது மோட்டார் வாகன பிரிவினர் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகின்றது. பிராணிகளை வாகனத்தில் வைத்து பயணிப்பது மிகவும் ஆபத்தானது. அவை எப்போது எப்படி நடந்துக் கொள்ளும் என்பதை யாராலுமே யூகிக்க முடியாது.

இந்த காரணத்திற்காகவே பிராணிகளை வாகனங்களில், குறிப்பாக, முன் பக்கத்தில் வைத்துக் கொண்டு பயணிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால், இங்கு கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் தன்னுடைய மடியில் வைத்து நாயுடன் பயணித்த இருக்கின்றார். இதனால், டிரைவரால் சரியாக சாலையைகூட பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்து.

இதன் விளைவாக மிக மோசமான நிகழ்வுகள் ஏற்படக் கூடலாம். எனவேதான், இதையும் ஓர் முக்கிய போக்குவரத்து விதிமீறலாக கருதி உச்சபட்ச நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். அதுவே அவர் செல்லப் பிராணியை பின்னிருக்கையில் அமர வைத்து அழைத்துச் சென்றிருந்தால் இந்த நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டு இருக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: செல்லப்பிராணிகளுடன் நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், அவற்றை எப்போதும் பின் இருக்கையில் அமர வைக்கவே பரிந்துரைக்கப்படுகிறது. இதுவே சிறந்த யுக்தியாகும். உங்கள் செல்லப்பிராணி முன் பக்கத்திலோ அல்லது உங்கள் மீதோ அமர்ந்திருக்கும் என்றால் அதனால் மிக மோசமான சூழல்கள் ஏற்படக் கூடும். அவை ஸ்டியரிங்கை திருப்பி விடலாம் அல்லது வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போது உங்களின் கவனத்தை வேறு வகையில் திசைதிருப்பலாம்.

இதுதவிர, அவற்றின் விலையாட்டு தனத்தால் கியர் மாற்றப்படும் சூழல்கூட ஏற்படலாம். இதுமாதிரியான செயல்கள் மிக மிகப் பெரிய ஆபத்தான சூழலை ஏற்படுத்திவிடும். எனவேதான் செல்லப் பிராணிகளுடன் பயணிக்கும்போது அவற்றை பின்னால் அமர வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. செல்லப்பிராணிகளை முன்னால் வைத்து சென்றதன் விளைவாக நாட்டில் இதற்கு முன்னதாக பல்வேறு விபத்து சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, June 17, 2024, 10:16 [IST]
English summary
Kerala clergyman s license suspended for driving with dog on lap
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+