இத்தனை லட்சம் செலவா? வெள்ளைக்கு பதிலாக கருப்பு நிற காருக்கு மாறிய பினராயி விஜயன்... காரணம் என்னனு தெரியுமா?

கேரள முதல்வர் பினராயி விஜயன் கருப்பு நிற காருக்கு மாறியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இத்தனை லட்சம் செலவா? வெள்ளைக்கு பதிலாக கருப்பு நிற காருக்கு மாறிய பினராயி விஜயன்... காரணம் என்னனு தெரியுமா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயன்பாட்டிற்காக புத்தம் புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்650 கார்டு (Mercedes Maybach S650 Guard) காரை சமீபத்தில் எஸ்பிஜி (SPG) வாங்கியிருந்தது. இந்த சூழலில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் பயன்பாட்டிற்காகவும் தற்போது புதிய கார் வாங்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இத்தனை லட்சம் செலவா? வெள்ளைக்கு பதிலாக கருப்பு நிற காருக்கு மாறிய பினராயி விஜயன்... காரணம் என்னனு தெரியுமா?

கேரள முதல்வர் பினராயி விஜயன் முதலில் வெள்ளை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை பயன்படுத்தி வந்தார். தற்போது அதற்கு பதிலாக கருப்பு நிற டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரானது எம்பிவி ரகத்தை சேர்ந்தது. அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மிகவும் பிரபலமான காராக உள்ளது.

இத்தனை லட்சம் செலவா? வெள்ளைக்கு பதிலாக கருப்பு நிற காருக்கு மாறிய பினராயி விஜயன்... காரணம் என்னனு தெரியுமா?

இங்கே ஒரு விஷயத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். கேரள முதல்வர் பினராயி விஜயனின் பயன்பாட்டிற்காக தற்போது வாங்கப்பட்டுள்ள நிறத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் அதிகாரப்பூர்வமாக கிடைப்பதில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்காக இந்த நிறத்தில் கார் பிரத்யேகமாக பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

இத்தனை லட்சம் செலவா? வெள்ளைக்கு பதிலாக கருப்பு நிற காருக்கு மாறிய பினராயி விஜயன்... காரணம் என்னனு தெரியுமா?

கேரளாவின் முன்னாள் டிஜிபியாக இருந்தவர் லோக்நாத் பெஹரா. முதல்வரின் பாதுகாப்பு தொடர்பாக அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் பினராயி விஜயன் தற்போது புதிய கருப்பு நிற காரை பயன்படுத்த தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ கார் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றப்படும் என கேரள காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தனை லட்சம் செலவா? வெள்ளைக்கு பதிலாக கருப்பு நிற காருக்கு மாறிய பினராயி விஜயன்... காரணம் என்னனு தெரியுமா?

இதன் ஒரு பகுதியாகதான் தற்போது கார் மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் ஃப்ளீட்டில் (Fleet) மொத்தம் 4 கார்கள் உள்ளன. இதில், 3 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களும், ஒரு டாடா ஹாரியர் காரும் அடங்கும். தற்போதைய நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கார் மட்டுமே கருப்பு நிறத்தில் உள்ளது.

இத்தனை லட்சம் செலவா? வெள்ளைக்கு பதிலாக கருப்பு நிற காருக்கு மாறிய பினராயி விஜயன்... காரணம் என்னனு தெரியுமா?

எஞ்சிய கார்கள் வெகு விரைவில் கருப்பு நிறத்திற்கு மாற்றப்படவுள்ளன. இந்த மாற்றங்களுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பே 63 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக கருப்பு நிறத்தை பலர் விரும்ப மாட்டார்கள். கருப்பு நிற உடைகளை அணிவதை கூட இங்கு பலர் விரும்புவதில்லை.

இத்தனை லட்சம் செலவா? வெள்ளைக்கு பதிலாக கருப்பு நிற காருக்கு மாறிய பினராயி விஜயன்... காரணம் என்னனு தெரியுமா?

ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளை நிற காரில் இருந்து கருப்பு நிற காருக்கு மாறியுள்ளார். பினராயி விஜயன் மட்டுமல்லாது இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கூட கருப்பு நிற கார்களை பயன்படுத்தி வருகின்றனர். உலக தலைவர்கள் பலரின் கார்களும் கூட கருப்பு நிறத்தில்தான் இருக்கிறது.

இத்தனை லட்சம் செலவா? வெள்ளைக்கு பதிலாக கருப்பு நிற காருக்கு மாறிய பினராயி விஜயன்... காரணம் என்னனு தெரியுமா?

அரசியல் தலைவர்கள் கருப்பு நிற கார்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கருப்பு என்பது அதிகாரத்தின் நிறமாக கருதப்படுகிறது. அரசியல் தலைவர்கள் கருப்பு நிற கார்களை பயன்படுத்துவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காகவே மிக முக்கியமான தலைவர்கள் கருப்பு நிற கார்களில் வலம் வருகின்றனர்.

இத்தனை லட்சம் செலவா? வெள்ளைக்கு பதிலாக கருப்பு நிற காருக்கு மாறிய பினராயி விஜயன்... காரணம் என்னனு தெரியுமா?

பொதுவாக இரவு நேரங்களில் கருப்பு நிற பார்வைக்கு புலப்படுவது மிகவும் கடினமான ஒரு விஷயம். இதன் மூலம் இரவு நேரங்களில் அரசியல் தலைவர்களின் கார்களுக்கு அச்சுறுத்தல் குறையும். பொதுவாக தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவங்கள் இரவு நேரங்களில்தான் நடைபெறும். ஆனால் கார் கருப்பு நிறத்தில் இருந்தால் இரவு நேரங்களில் அவ்வளவு எளிதாக பார்வைக்கு புலப்படாது.

இத்தனை லட்சம் செலவா? வெள்ளைக்கு பதிலாக கருப்பு நிற காருக்கு மாறிய பினராயி விஜயன்... காரணம் என்னனு தெரியுமா?

எனவே இரவு நேரங்களில் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை கருப்பு நிற கார்கள் உறுதி செய்கின்றன. ஆனால் அரசியல் தலைவர்களை தவிர்த்து விட்டு பார்த்தால், இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான கார் வண்ணமாக இருப்பது என்னவோ வெள்ளைதான். இந்திய சாலைகளில் நீங்கள் வெள்ளை நிற கார்களைதான் அதிகம் பார்க்க முடியும்.

இத்தனை லட்சம் செலவா? வெள்ளைக்கு பதிலாக கருப்பு நிற காருக்கு மாறிய பினராயி விஜயன்... காரணம் என்னனு தெரியுமா?

அரசியல்வாதிகள் பலரும் கூட வெள்ளை நிற கார்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். வெள்ளை என்பது தூய்மையின் அடையாளமாக பார்க்கப்படுவது இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கூட வெள்ளை நிற கார்கள் மிக அதிக அளவில் விற்பனையாகி கொண்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala cm pinarayi vijayan s new ride is a black toyota innova crysta mpv
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X