தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

தேசிய ஊரடங்கு உத்தரவிட்டுள்ளநிலையில் அரசியல்வாதிகள் சிலர் மக்களை உரைய வைக்கின்ற வகையில் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

உயிர் கொல்லி வைரஸ் கோரோனாவிடம் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காக தேசியளவிலான ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த 144 தடை சட்டம் அமலில் இருக்கின்ற வரை பொது மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

குறிப்பாக, அன்றாட அவசிய தேவையின்றி வெளியில் வரும் மக்களை போலீஸார் வெளுத்து வாங்கி வருகின்றனர். சில நேரங்களில் எந்தவொரு விசாரனையுமின்றி பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் மருத்துவர்களைக்கூட போலீஸார் தாக்கிய சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இதனால், கொரோனா தாக்கத்தால் உயிரிழப்போமோ என்ற அச்சத்தைக் காட்டிலும், போலீஸாரின் தாக்குதலினால் ஏதேனும் பின் விளைவு ஏற்படுமே என்ற பதற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

ஆனால், அரசியல்வாதிகள் சிலர் இந்த தேசிய ஊரடங்கு உத்தரவை மிக ஜாலியாக கழித்து வருகின்றனர். அவ்வாறு, ஊரடங்கு உத்தரவில் கொரோனகுறித்த எந்தவொரு அச்சமுமின்றி, அதாவது மாஸ்க் இல்லாமல் ஹெல்மெட்டும் அணியாமல் செல்போன் பேசியபடி அரசியல்வாதி ஒருவர் ஸ்கூட்டரை இயக்கியச் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

இந்த சம்பவம் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள வர்கலா என்னும் பகுதியில் அரங்கேறியதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த வீடியோ பிரபல மலையாள செய்தி நிறுவனமான மாத்ருபூமி, அதன் யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வீடியோவில், குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த அந்த இளைஞர் செல்போனில் பேசியபடி ஸ்கூட்டரில் வருவது உறுதியாகியுள்ளது. மேலும், எந்தவொரு பாதுகாப்பு கவசமும் அந்த சமயத்தில் அணியவில்லை.

தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான இந்திய மாநிலங்களில் கேரளா முக்கிய இடத்தில் இருக்கின்றது. ஆகையால், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தி வருகின்றது. ஆனால், பெரும்பாலான மக்கள் வீட்டை வெளியேச் சுற்றித் திரிந்த வண்ணம் இருக்கின்றனர். இதேநிலைதான் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

ஆகையால், அந்தந்த மாநில போலீஸார் வாகனத்தில் சுற்றி திரியும் அனைத்து வயதினரையும் லத்தி சார்ஜ் செய்து தாக்கி வருகின்றனர். மேலும், தெருவோரங்களில் நிற்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களையும் போலீஸார் கடுமையாக தாக்கி வருகின்றனர்.

தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

இந்நிலையில், மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர் இவ்வாறு எந்தவொரு பாதுகாப்பு கவசம் இல்லாமல் மற்றும் ஆபத்தை ஏற்படுத்துகின்ற வகையில் செல்போனில் பேசியவாறு வந்தது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தடுத்து நிறுத்திய போலீசாரிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, வெளியே வந்ததற்காகன உரிய காரணத்தைப் போலீஸார் கேட்டபோது, அவர் தகுந்த காரணத்தைக் கூறவில்லை என்று மாத்ரூபூமி தகவல் வெளியிட்டுள்ளது. இதனால், 144 தடை உத்தரவை மீறியது, வாகனத்தை இயக்கிக் கொண்டே செல்போன் பேசியது உள்ளிட்ட பல பிரிவுகளின்கீழ் போலீஸார் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

இதேபோன்று கர்நாடகா மாநிலத்திலும் ஓர் அதிர்ச்சி மிகுந்த சம்பவம் அண்மையில் அரங்கேறியிருந்தது. அதில், குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர். ஸ்ரீநிவாஸ் என்பவர் வேற லெவலில் விதியை மீறியிருந்தார். அவர் குப்பி தொகுதியின் எம்எல்ஏ ஆவார்.

தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

இவர் ஊரடங்கு உத்தரவில் சாலை வெறிச்சோடிக் காணப்படுவதை, தனக்காகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய பேரனை விளையாட்டு காரில் வைத்து ரைடு செய்ய வைத்துள்ளார். நாட்டு மக்கள் அனைவருமே ஊரடங்கில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கின்ற வேலையில் குப்பி தொகுதி எம்எல்ஏவின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் தாக்கமே குறையாத நிலையில் கேரளாவில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இந்தியாவில் அரசியல்வாதிகள் விதிமீறி செயல்படுவது வழக்கம்தான். ஆனால், இம்மாதரியான அச்சம் மிகுந்த நேரத்தில் மக்களுக்கு முன்னோடியாக செயல்பட்டு, காவலாக நிற்கவேண்டிய அரசியல்வாதிகளே எல்லை மீறுவது வேதனையளிக்கின்ற வகையில் உள்ளது.

தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

அதிலும், இவர்களின் பொறுப்பற்ற உணர்வைக் கண்டு மக்கள் வேதனையில் உரைந்திருக்கின்றனர். கொரோனா தாக்கத்தால் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மற்றும் சிறுவர்களே அதிகம் பாதித்து வருகின்றனர். ஆகையால், அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், சரியான புரிதல் இல்லாத மக்கள்களுடன், இதுபோன்ற அரசியல்வாதிகளும் ஆட்டம்போட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 31, 2020, 20:07 [IST]
English summary
Kerala Cops Busted SFI's District Secretary For Violating Coronavirus Lockdown. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+