13 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்! பயணிக்கு ரூ60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு!
ரயில் 13 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிக்கு ரூபாய் 60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கேரள கோர்ட் இந்திய ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில்வே என்பது போக்குவரத்திற்கான முதுகெலும்பாக இருக்கிறது. முக்கியமாக நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் பலர் ரயில் போக்குவரத்தையே நம்பி இருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகப்பெரிய நெட்வொர்க்காக இருக்கிறது. உலக அளவில் ரயில் போக்குவரத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் கார்த்திக் மோகன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு எர்ணாகுளத்திலிருந்து சென்னைக்கு வருவதற்காக ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அவர் சென்னையில் ஒரு முக்கிய மீட்டிங்கிற்கு வருவதற்காக இந்த டிக்கெட்டை புக் செய்திருந்தால் இந்நிலையில் அவர் திட்டமிட்டபடி ரயில் நிலையத்திற்கு வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக ரயில் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.
அவர் டிக்கெட் புக் செய்திருந்த ரயில் சுமார் 13 மணி நேரம் காலதாமதமாக வந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் அந்த ரயில் டிக்கெட் புக் செய்திருந்த பயணிகளுக்கு ரயில் கால தாமதமாக வருவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கார்த்திக் மோகனால் குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவருக்கு மன உளைச்சல், உடல் கஷ்டம் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் எர்ணாகுளத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு கோர்ட்டில் தனக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும் இதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது குறித்தும் மனுதாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிடுந்த ரயில் 13 மணிநேரம் காலதாமதமாக வந்ததால் தனக்கு நடக்க வேண்டிய பல முக்கியமான வேலைகள் நடைபெறவில்லை என்றும், இதனால் தனக்கு அதிக பொருளாதார இழப்பு மனகஷ்டம் மற்றும் உடல்கஷ்டம் ஆகியவை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கில் வாதாடிய ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட ரயில் சென்னை அரக்கோணம் ரூட்டில் தண்டவாள பணிகள் நடைபெறுவது காரணமாக தாமதமானதாகவும், அந்த ரயில் தாமதமாவது குறித்து ஏற்கனவே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறியது. ஆனால் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு கோர்ட் வேறு விதமான தீர்ப்பை கூறியது.
குறிப்பிட்ட இந்த பணி ஏற்கனவே திட்டமிட்ட பணி என்பதால் இதற்கு ரயில் டிக்கெட் புக் செய்த முறையே தவறு புக் செய்த டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரயில் தாமதமாகும் என அறிவித்ததால் பலர் இதில் கஷ்டப்பட்டுள்ளனர். இதில் நீட் தேர்வு நேரத்தின் போது நடந்ததால் பலர் இந்த ரயில் தாமதத்தால் பெரும் துன்பம் அடைந்துள்ளனர்.
குறிப்பிட்ட இந்த வழக்கில் மனுதாக்கல் செய்துள்ள கார்த்திக் மோகன் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பயணிகளின் நேரத்தை நாம் வீணடிக்க கூடாது. இந்த காலதாமத்தில் எந்த காலதாமதத்திற்கான நஷ்ட ஈடாக கார்த்திக் மோகனின் அசெளகரியம் மனக்கஷ்டம் உடல் கஷ்டம் மற்றும் பொருளாதார இழப்பை ஈடு செய்வதற்காக ரூபாய் 50,000 இந்த வழக்கை நடத்தியதற்காக, ரூபாய் 10,000 என மொத்தம் ரூபாய் 60,000 அவருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ரயில் சுமார் 13 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டதற்காக தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிக்கு ரூபாய் 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டிய சூழ்நிலையில் சிக்கி உள்ளது. இந்த ரயில் கால தாமதமாக கிளம்பும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் டிக்கெட் புக் செய்திருந்த பயணிகள் அனைவருக்கும் எஸ் எம் எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு அதில் அவசர வேலையாக சொல்பவர்கள். மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் எனவும், அவர்கள் விரும்பினால் அவர்கள் இந்த டிக்கெட்டுக்காக செலுத்திய முழு பணமும் திரும்ப அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த முடிவு இறுதி நேரத்தில் எடுக்கப்பட்டதால் ரயில் கிளம்புவதற்கு சுமார் 12 முதல் 24 மணி நேரத்துக்கு முன்பு தான் இந்த ரயில் ரத்து செய்யப்பட்டது. இதனால் இறுதி நேரத்தில் வேறு வகையில் வாகனங்களை புக் செய்ய முடியாமல் பலர் திணறினர் இது கோடை விடுமுறை காலத்தில் நடந்ததால் பல வாகனங்கள் முழுமையான புக்கிங்கள் இயக்கப்பட்டு வந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது ரயில் பராமரிப்பு மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக இப்படியாக காலதாமதத்தை ஏற்படுத்தி வருகிறது இதை ரயில்வே நிர்வாகம் முறையாக திட்டமிட்டு குறிப்பிட்ட காலங்களில் ரயில் டிக்கெட் விலை புக் செய்யாமல் விடுவதை சிறந்தது இப்படியாக ரயில் டிக்கெட் புக் செய்து விட்டு அதை காலதாமதம் செய்வது சரியல்ல


Click it and Unblock the Notifications








