இந்த மாதிரியான டாக்டர்களும் இருக்க தான் செய்றாங்க! தம்மா துண்டு இருக்கும் காரின் விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

கடந்த சில நாட்களாக மருத்துவர்களை பற்றிய செய்திகளாகவே வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவருக்கு நடந்த கதியை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில், இங்கு ஒரு கேரள மருத்துவர் தனது புத்தம் புதிய விலையுயர்ந்த மினி (MINI) கார் மூலமாக கவனத்தை பெற்றுள்ளார். யார் அந்த மருத்துவர் என்பதையும், அவர் வாங்கியுள்ள விலையுயர்ந்த மினி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பிஎம்டபிள்யூ க்ரூப்பில் ஓர் அங்கமாக மினி விளங்குகிறது. அதாவது, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் மினி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் நிறைய நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையில் பிஎம்டபிள்யூ 2வது இடம் வகிப்பதற்கு மினி கார்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.

doctor alexander buys mini countryman

மினி கார்கள் அவற்றின் பெயருக்கேற்ப அளவில் சிறியவைகளாக உருவாக்கப்படுகின்றன. அதாவது, மினி கார்களினுள் 5 பேர் மட்டுமே அதிகப்பட்சமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். ஏற்கனவே சில சொகுசு கார்களை வைத்திருக்கும் பணக்காரர்களின் விருப்பமாக மினி கார்கள் விளங்குகின்றன. குறிப்பாக, கேரளாவில் மினி கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுகின்றன.

கேரளாவில் சினிமா பிரபலங்களில் இருந்து தொழிலதிபர்கள் வரையில் ஏனோ அவர்களுக்கு மினி கார்கள் என்றால் மிகவும் பிடித்துள்ளது. அந்த வரிசையில், பிரபல பேபி மெமரீயல் (Baby Memorial) மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், தலைவருமான மருத்துவர் அலெக்சாண்டர் கேஜி அவர்கள் விலையுயர்ந்த மினி கார் ஒன்றை வாங்கியுள்ளார். மருத்துவரின் வீட்டிற்கே வந்து கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

doctor alexander buys mini countryman

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் செயல்பட்டுவரும் பேபி மெமரீயல் மருத்துவமனை சுருக்கமாக பி.எம்.எச் (BMH) என அழைக்கப்படுகிறது. 1987ஆம் ஆண்டில் மருத்துவர் அலெக்சாண்டர் கேஜி அவர்களால் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனையில் மாடர்ன் தரத்தில் 52 படுக்கை வசதிகள் உள்ளன. 300 மருத்துவர்கள் உள்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றும் இந்த மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற முடியும்.

பேபி மெமரீயல் மருத்துவமனை என அழைக்கப்பட்டாலும், இந்த மருத்துவமனையில் குழந்தைகளில் இருந்து வயதானவர்களுக்கு வரையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான முன்னேற்பாடுகளை இணையம் வழியாகவும் மேற்கொள்ள முடிகிறது. இத்தகைய உலக தரம் வாய்ந்த தனியார் மருத்துவமனையை நிறுவியவரான மருத்துவர் அலெக்சாண்டர் கேஜி வாங்கியிருப்பது மினி கண்ட்ரீமேன் என்கிற எலக்ட்ரிக் கார் ஆகும்.

doctor alexander buys mini countryman

கொச்சியில் செயல்படும் மினி கார் ஷோரூம் ஒன்று, மருத்துவர் அலெக்சாண்டர் கேஜி ஆர்டர் செய்த மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் காரை அவரது வீட்டிற்கே சென்று டெலிவிரி செய்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், கேரள மக்கள் மத்தியில் மினி கார்கள் பிரபலமாக உள்ளன. குறிப்பாக, மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் காரை சமீபத்தில்தான் மலையாள நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் மற்றும் யூடியூப்பருமான பேர்லே மோனே வாங்கியிருந்தார்.

மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் கார் கடந்த 2024 ஜூலை மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.54.90 லட்சமாக உள்ளது. பிரிட்டிஷ் ரேசிங் க்ரீன், ஸ்மோகி க்ரீன், ஸ்லேட் ப்ளூ, சில்லி ரெட் 2, பிளாஸிங் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் காரை மருத்துவர் அலெக்சாண்டர் கேஜி அவர்கள் பிளாஸிங் நீல நிறத்தில் வாங்கியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் காரின் ஆன்-ரோடு விலை இன்னும் 10 லட்ச ரூபாய் அளவில் அதிகமாக வரும். இருப்பினும், கிட்டத்தட்ட 40 வருஷமாக மருத்துவ துறையில் ஓர் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருபவருக்கு ரூ.65 லட்சத்தில் ஒரு காரை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது. கேரளாவின் மினி கார் கஸ்டமர்களுள் ஒருவராக பி.எம்.எச் தலைவர் மருத்துவர் அலெக்சாண்டர் கேஜி அவர்களும் ஒருவராக இணைந்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2024, 23:46 [IST]
English summary
Kerala doctor alexander kg takes delivery of mini countryman electric car check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X