ஐடி கம்பெனியில் பணம் கொட்டுது போல... மாநிலத்திலேயே முதல் ஆளாக இந்த லம்போர்கினி காரை வாங்கிய தொழிலதிபர்!

தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான 'லிட்மஸ்7' (Litmus7)-இன் தலைமை நிர்வாக அதிகாரி வேணு கோபாலகிருஷ்ணன் (Venu Gopalakrishnan), தனது சொகுசு கார்கள் வாங்கும் பழக்கத்தால் சமீப காலமாக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். கோடிகள் மதிப்புள்ள பல கார்கள் மற்றும் எஸ்யூவி (SUV) வாகனங்கள் இவரது கொச்சி இல்லத்திற்கு அணிவகுத்துள்ளன.

அந்த வரிசையில், கேரள தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனின் சமீபத்திய இணைப்பு, புதிய லம்போர்கினி ரெவால்டோ (Lamborghini Revuelto) கார் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) இந்தியாவில் சுமார் ரூ.8.89 கோடி ஆகும். லிட்மஸ்7 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவரிடம் ஏற்கனவே ஹூராகேன் ஸ்டெர்ராடோ (Huracan Sterrato) மற்றும் உருஸ் பெர்ஃபார்மண்டே (Urus Performante) என்கிற இரண்டு லம்போர்கினி கார்கள் உள்ளன.

kerala entrepreneur takes lamborghini revuelto car delivery

வேணு தனது புதிய ரெவால்டோ காரை ஸ்டைலாக பெற்றுக் கொண்டார். எப்படியென்றால், அவர் தனது ஸ்டெர்ராடோ மற்றும் உருஸ் கார்களில் கொச்சியில் உள்ள கிரவுன் பிளாசாவிற்கு வந்தடைந்தார். அங்கு ஒரு தனியார் கார் ஒப்படைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்று லம்போர்கினி கார்களும் அருகருகே நிறுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு, ஆட்டோ ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

வேணு கோபாலகிருஷ்ணனின் புத்தம் புதிய லம்போர்கினி ரெவால்டோ கார் ஒரு கனரக லாரியில் பத்திரமாக கொண்டுவரப்பட்டு, டெலிவிரி செய்யப்பட்டு உள்ளது. அப்போது, இந்த காரின் 6.5 லிட்டர் வி12 என்ஜின் வெளிப்படுத்திய அற்புதமான கர்ஜனையை கேட்டு அங்கே இருந்தவர்கள் மிரண்டு போய் உள்ளனர். பின்னர், வேணு கோபாலகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்-2 பிளாக் பேட்ஜ் (Rolls-Royce Ghost Series II Black Badge) காரில் கம்பீரமாக வருகை தந்தார்.

kerala entrepreneur takes lamborghini revuelto car delivery

இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை இந்தியாவில் முதன்முதலில் வாங்கியவரும் இவர்தான் என்று கூறப்படுகிறது. இருபுறமும் உருஸ் மற்றும் ஸ்டெர்ராடோ கார்கள் நிற்க, வேணு கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து திரையை விலக்கி புதிய பிராண்ட்-நியூ ரெவால்டோ காரை மற்றவர்கள் முன் அறிமுகப்படுத்தினர். டீலரிடமிருந்து சாவியைப் பெற்ற வேணு, குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

பின்னர் அவர் காரில் ஏறி, தனது மகனுக்கு 1000+ குதிரைத்திறன் கொண்ட இந்த லம்போர்கினி ஹைப்பர்காரை சுருக்கமாக விளக்கினார். காரின் என்ஜினை முறுக்க, மகனின் முகம் அதன் ஒலி கேட்டு பிரகாசமடைந்தது. வேணுவின் புதிய மற்றும் மூன்றாவது லம்போர்கினி காரான ரெவால்டோ ஆனது கேரளாவின் முதல் ரெவால்டோ கார் ஆகும்.

kerala entrepreneur takes lamborghini revuelto car delivery

இந்த கார் மேட் வெர்டே டர்பைன் (Matte Verde Turbine) நிறத்தில் உள்ளது, இது லம்போர்கினியின் 'டெக்னிகா' (Tecnica) வண்ணத் தட்டுகளில் ஒன்றாகும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், லம்போர்கினி பெங்களூரு ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரெவால்டோ டெமோ காரும் இதே நிறத்தில் தான் உள்ளது.

இந்த கார் டெலிவிரிக்கு சில நாட்களுக்கு முன்பு, கொச்சியில் வைத்து ரெவால்டோ கார் வேணு கோபாலகிருஷ்ணனிடம் சாலையில் ஓட்டி பார்க்க வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ரெவால்டோ டெஸ்ட் டிரைவ் தொடர்பான செய்திகளும் படங்களும் முதலில் இணையத்தில் வெளியானபோது, பலர் அந்த காரை வேணு கோபாலகிருஷ்ணன் வாங்கிவிட்டதாகவே கருதினர்.

kerala entrepreneur takes lamborghini revuelto car delivery

ஆனால், அப்போதைய படங்களில் காட்சி தந்த ரெவால்டோ காருக்கும், இப்போது டெலிவிரி செய்யப்பட்டுள்ள ரெவால்டோ காருக்கும் தோற்றத்தில் சில வித்தியாசங்கள் உள்ளன. அதாவது, அப்போது டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த காரை இவர் வாங்கவில்லை. வேணுவின் சேகரிப்பில் உள்ள மற்ற இரண்டு லம்போர்கினி கார்களும் புதிய காரைப் போலவே தனித்துவமானவை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரளாவில் லம்போர்கினி ஸ்டெர்ராடோ காரை வைத்திருக்கும் ஒரே நபர் வேணு கோபாலகிருஷ்ணன் ஆவார். தற்போது, ரெவால்டோ காரை வாங்கி இருப்பதன் மூலம் இந்த காரின் முதல் கேரள ஓனர் என்கிற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். ஸ்டெர்ராடோ, பிரபலமான லம்போர்கினி ஹூராகேன் காரின் ராலி பதிப்பாகும். இது வழக்கமான ஹூராகேன் காரில் உள்ள அதே 5.2 லிட்டர் வி10 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால், இது உலகளவில் வெறும் 1,499 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Monday, October 27, 2025, 23:58 [IST]
English summary
Kerala entrepreneur takes delivery of lambroghini revuelto sports car in kerala
மேலும்... #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X