அவரை மாதிரியே கம்பீரமான காரை வாங்கிட்டாரு... பெண் நினைத்தால் எந்த காரையும் ஓட்ட முடியும்!!

லேண்ட் ரோவர் (Land Rover), கம்பீரமான மற்றும் பிரம்மாண்டமான எஸ்யூவி கார்களை உருவாக்குவதில் கைதேர்ந்த நிறுவனம். உலகளவில் கவனத்தை பெற்ற லேண்ட் ரோவர் நிறுவனத்தில் இருந்து ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்கள் பிரபலமானவைகளாக உள்ளன. குறிப்பாக, டிஃபெண்டர் கார்கள் பவர்ஃபுல்லான காராக விளங்குவது மட்டுமில்லாமல், சொகுசு காராகவும் விளங்குகின்றன. இதன் காரணமாகவே இந்தியாவில் டிஃபெண்டர் கார்களை பலத்தரப்பட்ட மக்கள் வாங்குகின்றனர். அந்த வகையில், பிரபல மருத்துவமனையின் பெண் இயக்குனர் ஒருவர் விலையுயர்ந்த டிஃபெண்டர் காரை வாங்கியுள்ளார். யார் அவர் என்பதை பற்றியும், அவர் வாங்கியுள்ள டிஃபெண்டர் காரை பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

பெரிய நிறுவனங்களை நிர்வகிக்கும் இயக்குனர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பர். இதனால், அவர்கள் வாங்கும் மற்றும் வைத்திருக்கும் கார்களை எல்லாம் பார்த்தால், லக்சரி ஆனவைகளாக இருக்கும். குறிப்பாக, கேரளாவில் உள்ள விஐபி-களும், பிஸ்னஸ்மேன்கள் வாங்கும் கார் & பைக்குகள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமானவைகளாக இருப்பதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

kerala entrepreneur woman buys defender

தற்போது புதியதாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியிருப்பவரும் கேரள பெண் தொழிலதிபரே ஆவார். கேரளாவில் விஐபிகள் நிறைய பேரிடம் டிஃபெண்டர் கார்கள் உள்ளன. அந்த வரிசையில், கேரள பெண் தொழிலதிபர் செஸ்னா பஷீர் (Chezzna Basheer) புதியதாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 எச்.எஸ்.இ காரை வாங்கியுள்ளார்.

இவரது பெயரில் பெரிய அளவிலான சுகாதார நல மையம் செயல்படுகிறது. அதற்கு செஸ்னா பஷீர் தான் நிர்வாக இயக்குனர் ஆவார். அத்துடன், இங்கிலாந்தில் செயல்படும் சொத்து நிர்வாக கம்பெனியான கேபிடல்ஸ் ஹோல்டிங்ஸ் பிரைவேட் நிறுவனத்தையும் செஸ்னா பஷீர் தான் கவனித்து வருகிறார். இவ்வாறு ஒரே நேரத்தில் பல பொறுப்புகளை சுமந்துவரும் இவர்தான் தற்போது புத்தம் புதிய டிஃபெண்டர் 110 எச்.எஸ்.இ காரை கொச்சியில் உள்ள முத்தூட் லேண்ட் ரோவர் ஜாகுவார் ஷோரூமில் டெலிவிரி பெற்றுள்ளார்.

kerala entrepreneur woman buys defender

அப்போது எடுக்கப்பட்ட படங்களை சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்கள் 90, 110, 130 என 3 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், செஸ்னா பஷீர் வாங்கியிருப்பது டிஃபெண்டர் 110 காரின் எச்.எஸ்.இ வேரியண்ட் ஆகும். டிஃபெண்டர் 110 கார் மொத்தம் 4 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

3.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் டீசல், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 5.0 லிட்டர் பெட்ரோல் என்பன அந்த 4 என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். தொழிலதிபர் செஸ்னா பஷீர் எந்த என்ஜின் உடன் டிஃபெண்டர் எச்.எஸ்.இ காரை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.04 கோடியில் இருந்து ரூ.2.85 கோடி வரையில் உள்ளன.

kerala entrepreneur woman buys defender

பாஞ்சியா க்ரீன் மெட்டாலிக், சாண்டோரினி பிளாக் மெட்டாலிக், டாஸ்மன் நீலம் மெட்டாலிக், கோண்ட்வானா ஸ்டோன் மெட்டாலிக், ஈகர் கிரே மெட்டாலிக் மற்றும் ஃபுஜி வெள்ளை என 6 விதமான கலர் ஆப்ஷன்களில் டிஃபெண்டர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. செஸ்னா பஷீர், இதில் சாண்டோரினி பிளாக் மெட்டாலிக் நிறத்தில் இந்த காரை வாங்கியுள்ளார்.

இதற்கேற்ப செஸ்னா பஷீரின் டிஃபெண்டர் 110 காரின் உட்புறம் பளிச்சிடும் நிறத்தில் உள்ளது. டிஃபெண்டர் 110 காருக்கு உள்ளே 10-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்-அப் டிஸ்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜர், கனெக்டட் கார் வசதிகள் மற்றும் பிரீமியம் சவுண்ட் ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: செஸ்னா பஷீர் பார்க்கும் உத்தியோகத்திற்கு ஏற்ப அவரது புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கம்பீரமான கார் ஆகும். அதேநேரம், இந்த காரின் பவர்ஃபுல்லான என்ஜினையும் எந்தவொரு குறையையும் சொல்ல முடியாது. ஒரு பெண் நினைத்தால், இவ்வாறான பிரம்மாண்டமான காரையும் ஓட்ட முடியும் என்பதற்கு கேரள பெண் தொழிலதிபர் செஸ்னா பஷீர் ஓர் சான்றாகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 1, 2024, 23:57 [IST]
English summary
Kerala entrepreneur woman buys land rover defender 110 hse car check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X