குடும்பமா கொஞ்ச நேரத்துல ஷோரூமை ஒருவழி பண்ணிட்டாங்க... பழைய கார் கூட நல்லா தான் இருக்கே!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) கார்களை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள். மிடில்-கிளாஸ் மக்களுக்கு எப்படியாவது ஒரு பென்ஸ் காரை வாங்கிவிட மாட்டோமா என்பது வாழ்நாள் கனவாக இருக்கிறது. சாதாரணமான கார்களை பயன்படுத்திக் கொண்டிருந்தவர்கள், விலையுயர்ந்த பென்ஸ் காரை வாங்கும்போது அவர்கள் அடையும் சந்தோஷமே தனி என்றுதான் சொல்ல வேண்டும். அப்படித்தான், இங்கு ஒருவர் பழைய செவ்ரோலெட் (Chevrolet) காரில் குடும்பத்துடன் ஷோரூமுக்கு வந்து தனது புதிய பென்ஸ் காரை டெலிவிரி பெற்றுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவில் பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் வெற்றி பெறாமல் மண்ணை கவ்வியுள்ளன. அத்தகைய நிறுவனங்களுள் ஒன்றுதான், செவ்ரோலெட் ஆகும். அமெரிக்காவை சேர்ந்த செவ்ரோலெட் நிறுவனம் பல நாடுகளில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. ஆனால், இந்தியாவில் அதன் வணிக யுக்திகள் எடுப்படவில்லை.

இத்தனைக்கும் செவ்ரோலெட்டில் உற்பத்தி செய்யப்படுபவை பெரும்பாலும் விலை குறைவான கார்கள் ஆகும். அப்படியிருந்தும் அந்த நிறுவனத்தால் இந்தியாவில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இருப்பினும், செவ்ரோலெட் கார்களின் தரத்தில் எந்தவொரு குறையையும் சொல்ல முடியாது. வலிமையான மற்றும் நீண்ட ஆயுட்காலத்தை கொண்ட கார்கள் எவை என்று அமெரிக்கர்களிடம் கேட்டால் அவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்வது செவ்ரோலெட் கார்களை ஆகும்.
அவ்வாறு செவ்ரோலெட் உருவாக்கிய தரமான கார்களுள் ஒன்று, தவேரா (Tavera) ஆகும். கேரளாவில் இந்த செவ்ரோலெட் காரை வைத்திருக்கும் ஒரு குடும்பம் தங்களது புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் 400டி (GLS 400d) காரை குடும்பமாக ஷோரூமுக்கு சென்று டெலிவிரி எடுத்துள்ளனர். ஷோரூமுக்கு அவர்கள் தங்களது வெள்ளை நிறத்திலான பழைய செவ்ரோலெட் தவேரா காரில் வந்திறங்கினர்.

இந்த குடும்பத்தினர் வாங்கியிருப்பது பிராண்ட்-நியூ மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் கார் கிடையாது. ஏற்கனவே இன்னொருவரால் பயன்படுத்தப்பட்ட யூஸ்டு (Used) கார் ஆகும். கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள யூஸ்டு கார் ஷோரூமில் ஜிஎல்எஸ் காரை வாங்கியிருக்கும் இந்த கஸ்டமரின் பெயர் ஸ்ரீஜித் ஆகும். ஜிஎல்எஸ் காரை கருப்பு நிறத்தில் வாங்கியதற்கு ஏற்ப, ஸ்ரீஜித்தின் குடும்பத்தினர் பெரும்பாலானோர் கருப்பு நிற உடையில் டெலிவிரி பெற ஷோரூமுக்கு சென்றுள்ளனர்.
ஸ்ரீஜித் வாங்கியிருப்பது ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேடுக்கு முந்தைய ஜி.எல்.எஸ் 400டி கார் ஆகும். பழைய காரை புதியதாக காட்டுவதற்காக டச்-அப் வேலைகள் நடந்துள்ளது. அதாவது, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் காரின் வெளிப்பக்கத்தை சுற்றிலும் நிறைய இடங்களில் பளபளக்கும் க்ரோம் வழங்கப்படுவது வழக்கம். அவை அனைத்தும் இந்த காரில் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

ஸ்ரீஜித் வாங்கியிருப்பது டீசல் என்ஜினை கொண்ட ஜிஎல்எஸ் 400டி கார் ஆகும். காரின் பெயரில் கடைசியாக உள்ள 'டி' என்பது டீசல் என்ஜினை குறிக்கிறது. இன்லைன் 6-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் உடன் இந்த காரில் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் டெக்னாலஜி வழங்கப்படுகிறது. இவற்றுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறும் இந்த காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.3 வினாடிகளில் எட்டிவிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிஎல்எஸ் டீசல் காரை உற்பத்தி செய்வதை 2020ஆம் ஆண்டில் மெர்சிடிஸ் துவங்கியது. ஜிஎல்எஸ் காருக்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் ஆனது கடந்த 2023ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. ஆக, 2020- 2023 இதற்கு இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரை தான் ஸ்ரீஜித் வாங்கியுள்ளார். எனவே, இந்த பென்ஸ் கார் ஒன்றும் மிகவும் பழமையானது கிடையாது.


Click it and Unblock the Notifications









