விலையுயர்ந்த லெக்ஸஸ் காரை சொந்தமாக்கிய பிரபல யூடியூப் தம்பதி!! காரின் விலையை மட்டும் பார்த்துடாதீங்க!
யூடியூப்பர்கள் புதுசா கார் வாங்கும் காலம் என சொல்லும் அளவிற்கு சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்கள் புதியதாக கார் வாங்கும் செய்திகளை சமீப மாதங்களாக அதிகளவில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், கேரளாவை சேர்ந்த பிரபல யூடியூப் தம்பதி புதியதாக லெக்ஸஸ் ஹைப்ரீட் காரை வாங்கியுள்ளது.
இணையம், இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி உள்ளது. ஏனெனில், நமது அன்றாட செயல்பாடுகளில் பெரும்பான்மையானவை இணையத்தை சார்ந்தே உள்ளது. குறிப்பாக, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அசூர வளர்ச்சி அடைந்து வருகிறது. தினமும் காலையில் எழுந்ததும் நம்மில் பெரும்பாலானோர் முதலாவதாக மொபைல் போனையே தேடுகிறோம்.

ஆனால் சிலருக்கு, இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் தான் வாழ்வளித்து உள்ளன என்றால் அது மிகையில்லை. ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால், சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிய பலர் இதன் மூலம் ஈட்டிய வருவாயை வைத்தே புதியதாக பைக் & கார்களை வாங்குவதை அதிகமாக பார்க்க முடிகிறது. சமீபத்தில்கூட, 'ரைடர் கேர்ள்' என்ற பெயரில் யூடியூப்பில் பிரபலமானவராக இருக்கும் விஷாகா புதியதாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை டெலிவிரி பெற்றுள்ளார்.
இந்த வரிசையில், கேரளாவில் பிரபல யூடியூப் தம்பதியாக விளங்கும் அனுராஜ் - ப்ரீனா புதியதாக விலையுயர்ந்த லெக்ஸஸ் ஆர்.எக்ஸ்350எச் என்ற ஹைப்ரீட் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை வாங்கியுள்ளனர். பொதுவாகவே, இந்தியாவில் லெக்ஸஸ் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவு. அதிலும், இத்தகைய லெக்ஸஸ் ஹைப்ரீட் காரை இந்தியாவில் வைத்திருப்போரை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கேரளாவில், லெக்ஸஸ் ஆர்.எக்ஸ்350எச் ஹைப்ரீட் காரை இதுவரையில் ஒருவர் கூட வாங்கியது இல்லை என கூறப்படுகிறது. ஆக, கேரளாவில் இந்த லெக்ஸஸ் காரை வாங்கிய முதல் வாடிக்கையாளராக இந்த யூடியூப் தம்பதி விளங்குகிறது. வெள்ளை நிறத்தில் இந்த லெக்ஸஸ் காரை இவர்கள் வாங்கியுள்ளனர். டெலிவிரி எடுப்பதற்கு முன்பாக, ஷோரூமில் காருடன் நிற்கும் புகைப்படங்களை அனுராஜ் - ப்ரீனா தம்பதி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில், மேம்படுத்தப்பட்ட ஆர்.எக்ஸ் ஹைப்ரீட் எஸ்யூவி காரை மிக சமீபத்தில்தான் லெக்ஸஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்தது. ஆர்.எக்ஸ்350எச் மற்றும் ஆர்.எக்ஸ்500எச் எஃப்-ஸ்போர்ட் என்கிற 2 விதமான வேரியண்ட்களில் இந்த லெக்ஸஸ் லக்சரி கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஆர்.எக்ஸ்350எச் வேரியண்ட்டை, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த ஜூலை மாத துவக்கத்தில் தொடங்கப்பட்டன.
இந்த வகையில் லெக்ஸஸ் ஆர்.எக்ஸ்350எச் காரை புக் செய்த அனுரா - ப்ரீனா தம்பதிக்கு கார் சமீபத்தில் டெலிவிரி கொடுக்கப்பட்டு உள்ளது. லெக்ஸஸ் ஆர்.எக்ஸ்350எச் ஹைப்ரீட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.95.80 லட்சமாக உள்ளது. ஆனால், இன்ஸ்சூரன்ஸ், ஆர்டிஓ கட்டணம் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால், காரின் ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.1.25 கோடி என்ற அளவில் வந்துவிடும்.

இத்தகைய லக்சரி கார்களில் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்பவும் சில மாற்றங்களை செய்துக் கொள்ள முடியும். அதற்கு ஆகும் செலவுகளையும் சேர்த்தால், காரின் விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகரிக்கும். லெக்ஸஸ் ஆர்.எக்ஸ்350எச் காரில் 2.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் உடன் பொருத்தப்படுகிறது. இவை இரண்டின் மூலமாக அதிகப்பட்சமாக 245 பிஎச்பி மற்றும் 242 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: அனுராஜ் - ப்ரீனா தம்பதி யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து மட்டுமில்லாமல், வேறு எதாவது வழியில் ஈட்டிய பணத்தையும் சேர்த்தே இந்த லெக்ஸஸ் காரை வாங்கியிருக்க முடியும். சுமார் ரூ.1.25 கோடியில் புதியதாக காரை வாங்கியிருப்பது கேரளாவில் சமூக வலைத்தளங்களில் அனுராஜ் - ப்ரீனா தம்பதியை பின்தொடர்பவர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. இதற்காக தானே... அவர்கள் இருவரும் காரை டெலிவிரி எடுக்கும்போதும் புகைப்படங்கள் & வீடியோவை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்!!


Click it and Unblock the Notifications
