கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

கொரோனா வைரஸை கேரளா ஓட ஓட விரட்டி கொண்டிருக்கும் நிலையில், இந்த மனிதர் செய்த காரியத்தை மக்கள் வியந்து பார்க்கின்றனர்.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

இந்தியாவில் கொரோனா வைரஸால் (கோவிட்-19) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் வரும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

கொரோனா வைரஸை ஒழிக்கும் பணிகளில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களுடன் காவல் துறையினரும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். மக்களை வீடுகளுக்குள் இருக்க வைப்பதில் போலீசாரின் பங்களிப்பு முக்கியமானது.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

ஊரடங்கு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், வாகன ஓட்டிகள் பலர் தேவையில்லாமல் சுற்றி வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மருத்துவர்கள், காவல் துறையினர் வரிசையில், அத்தியாவசிய பொருட்களை எடுத்து வரும் லாரி ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்களின் உள்ளிட்டோரின் பங்களிப்பும் முக்கியமானது.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், இப்படி பலரும் ஓயாமல் உழைத்து கொண்டிருக்க, அரசுக்கு நிதி உதவிகளும் வந்து கொண்டுள்ளன. குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் மத்திய, மாநில அரசுகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. அத்துடன் வாகன உதவிகளையும் அவை செய்து வருகின்றன.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

இதன்படி கோவிட்-19 வைரஸை எதிர்த்து போரிட்டு வரும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோரின் பயன்பாட்டிற்காக 100 ஹெக்டர் கார்களை வழங்கவுள்ளதாக எம்ஜி மோட்டார் இந்தியா கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தது. பெரு நிறுவனங்கள் செய்யும் இத்தகைய உதவிகளில் ஆச்சரியப்பட பெரிதாக ஒன்றுமில்லை.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

ஆனால் சாதாரண தனி மனிதர்கள், இதுபோன்ற உதவிகளை செய்ய தாங்களாக முன்வருவது உண்மையில் ஆச்சரியமான விஷயம்தான். அப்படி ஒரு ஆச்சரியம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது வேகமாக அதிகரித்து வந்தாலும், மறுபக்கம் கேரள மாநிலம் அசத்தி கொண்டுள்ளது.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதிலும் கேரளா கவனம் ஈர்த்துள்ளது. அம்மாநில அரசின் நடவடிக்கைகள், மக்களின் ஒத்துழைப்பு போன்றவை இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர், தன்னார்வலர்கள் ஆகியோரின் பணியை கேரளா முழுமையாக பயன்படுத்தி கொண்டுள்ளது.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

இப்படி ஓயாமல் உழைத்து வருபவர்களின் தேவையை புரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவி செய்ய மக்கள் முன்வரும் நிகழ்வுகள், கொரோனா வைரசுக்கு எதிரான போரில், கேரள மாநிலத்திற்கு இன்னும் வலிமையை கொடுக்கிறது. இதை நிரூபிக்கும் வகையில், பர்னிச்சர் கடை உரிமையாளர் ஒருவர், தனது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரை காவல் துறைக்கு கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

கோவிட்-19 வைரஸ் தடுப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தி கொள்வதற்காக, காவல் துறைக்கு இந்த உதவியை அந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் செய்துள்ளார். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புதுக்காடு என்னும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. புதுக்காடு பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்துவதற்கு அப்பகுதி போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

எனினும் அவர்களுக்கு வாகன பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த இக்கட்டான சூழல் குறித்த தகவல், அப்பகுதியில் வசிப்பவரும், பர்னிச்சர் கடை உரிமையாளருமான புல்லோகாரன் தவசி என்பவருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் தனது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை போலீசாருக்கு வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

காவல் துறையினருக்கு வாகனங்கள் பற்றாக்குறை இருப்பதாக தகவல் அறிந்த உடனே அவர், அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது முடிவை தெரிவித்தார். அதற்கு அதிகாரிகளும் ஒப்பு கொண்டனர். காவல் துறைக்கு காரை வழங்கியதுடன் தவசி நின்று விடவில்லை. அந்த காரை ஓட்டுவதற்கும் முன்வந்துள்ளார். அத்துடன் எரிபொருள் செலவையும் ஏற்று கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

இது உண்மையிலேயே நல்ல விஷயம். தவசியின் இந்த முடிவு, அப்பகுதி காவல் துறைக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுகுறித்து மாத்ருபூமி செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் கேரளா அசத்தி கொண்டிருப்பதற்கு அரசின் நடவடிக்கைகள் ஒரு காரணம் என்றால், மறுபக்கம் இதுபோன்ற குடிமகன்களின் பங்களிப்பும் முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

காவல் துறைக்கு தவசி வழங்கியுள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, இந்திய மக்களின் மனம் கவர்ந்த மாடல்களில் ஒன்றாக உள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரில், பல்வேறு பாதுகாப்பு வசதிகளும், லக்ஸரி வசதிகளும் இடம்பெற்றுள்ளன. எனவே சௌகரியமான பயணத்திற்கு ஒரு காரை எதிர்பார்ப்பவர்களின் முதன்மையான தேர்வாக இன்னோவா க்ரிஸ்டா உள்ளது.

கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்...

அத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரின் பராமரிப்பு செலவுகளும் மிகவும் குறைவு. இதனால் டாக்ஸி மார்க்கெட்டில் கூட மிகவும் விரும்பப்படும் காராக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஒரு காரை காவல் துறைக்கு வழங்கியுள்ள தவசிக்கு பாராட்டுக்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala: Furniture Shop Owner Lends Toyota Innova Crysta To Police Department To Tackle Covid-19. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X