கேரள அரசு அறிமுகப்படுத்தும் இ-டாக்ஸி ஆப்! ஓலா,உபேரை விட குறைந்த விலையில் பயணிக்கலாம், டிரைவருக்கும் செம லாபம்!

கேரள அரசு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி தொழிலாளர் நலத்துறை சார்பில் "இ-டாக்ஸி" சேவையான கேரள சவாரி ஆப்பை அறிமுகப்படுத்துகிறது. இது குறித்த விரிவான விளக்கத்தைக் காணலாம்.

கேரள அரசு அறிமுகப்படுத்தும் இ - டாக்ஸி ஆப் . . . ஓலா, உபேரை விடக் குறைந்த விலையில் இனி கார்களில் பயணிக்கலாம் . . . டிரைவருக்கும் செம லாபம் !

இன்று உலகம் முழுவதும் செல்போன் கேப் மூலம் புக் செய்யப்படும் கேப் வசதிகள் பிரபலமாகி விட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை ஓலா மற்றும் உபேர் ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை இந்தியா முழுவதும் பெரும்பாலான நகரங்களில் வழங்கி வருகின்றன.

கேரள அரசு அறிமுகப்படுத்தும் இ - டாக்ஸி ஆப் . . . ஓலா, உபேரை விடக் குறைந்த விலையில் இனி கார்களில் பயணிக்கலாம் . . . டிரைவருக்கும் செம லாபம் !

அதன்படி ஓலா மற்றும் உபேர் ஆகிய நிறுவனங்கள் அந்த பகுதிகளில் ஏற்கனவே இயங்கி வரும் கார் ஓட்டுநர்களை தாங்கள் ஆப்பில் இணைத்து அவர்களுக்கு தங்கள் ஆப்பில் இணைத்து தங்கள் வாடிக்கையாளர்கள் புக் செய்யும் ரைடுகளை அவர்களுக்கு அனுப்புவார்கள், அதன் ரைடு முடிந்ததும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் தொகையில் குறிப்பிட்ட பணத்தை இவர்கள் கமிஷனாக பெறுகிறார்கள்.

கேரள அரசு அறிமுகப்படுத்தும் இ - டாக்ஸி ஆப் . . . ஓலா, உபேரை விடக் குறைந்த விலையில் இனி கார்களில் பயணிக்கலாம் . . . டிரைவருக்கும் செம லாபம் !

தற்போது வரை இந்த சேவை முழுவதும் தனியார் வசமே இருக்கிறது. இந்த தனியார் நிறுவனங்களை நம்பி ஏராளமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் இயங்கி வருகின்றனர். மக்களின் வசதியை தொழிற்நுட்ப ரீதியில் உருவாக்கித் தரும் ஆப் மூலம் அந்நிறுவனம் அதிக அளவில் சம்பாதித்து வருகின்றன. இந்நிலையில் அதிகமான கமிஷன், மற்றும் டார்கெட் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இந்த தனியார் நிறுவனங்களிடம் இருப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

கேரள அரசு அறிமுகப்படுத்தும் இ - டாக்ஸி ஆப் . . . ஓலா, உபேரை விடக் குறைந்த விலையில் இனி கார்களில் பயணிக்கலாம் . . . டிரைவருக்கும் செம லாபம் !

இந்நிலையில் அமைப்பு சாரா இந்த ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் விதமாகக் கேரள அரசு தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் சொந்தமாக இ-டாக்ஸி சேவையைத் துவங்கியுள்ளது. ஒரு அரசு இ-டாக்ஸி சேவையைத் துவங்கியுள்ளது நாட்டிலேயே முதன் முறையாகும். மற்ற எந்த மாநில அரசும் இப்படியான இ-டாக்ஸி சேவையை வழங்கவில்லை.

கேரள அரசு அறிமுகப்படுத்தும் இ - டாக்ஸி ஆப் . . . ஓலா, உபேரை விடக் குறைந்த விலையில் இனி கார்களில் பயணிக்கலாம் . . . டிரைவருக்கும் செம லாபம் !

கேரள அரசு இந்த சேவைக்கு "கேரளா சவாரி" எனப் பெயர் வைத்துள்ளது. இதில் ஏற்கனவே ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டிவரும் ஓட்டுநர்கள் தங்களை இதில் இணைத்துக்கொள்ளலாம். பொதுமக்களுக்காகக் கேரளா சவாரி ஆப் அறிமுகப்படுத்தப்படும். இதில் பொதுமக்கள் சவாரிகளை புக் செய்யும் போது அது அருகில் உள்ள டிரைவருக்கு செல்லும், அவர் குறிப்பிட்ட சவாரியை பிக்கப் செய்து டிராப் செய்தால் அந்த பயணத்திற்குரிய நியாயமான விலையைச் சவாரி செய்தவரிடம் வசூலித்து டிரைவரிடம் வழங்கும் இதற்கு கமிஷனாக 8 சதவீதம் மட்டும் வசூலிக்கும்.

கேரள அரசு அறிமுகப்படுத்தும் இ - டாக்ஸி ஆப் . . . ஓலா, உபேரை விடக் குறைந்த விலையில் இனி கார்களில் பயணிக்கலாம் . . . டிரைவருக்கும் செம லாபம் !

மேலும் இந்த கேரளா சவாரி ஆப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. பல பாதுகாப்பு சோதனைகளுக்கு இந்த ஆப்

உட்படுத்தப்பட்டது. இந்த ஆப்பை பயன்படுத்திப் பயணிக்கும் பயணிகளுக்கு பேனிக் பட்டன்கள் வழங்கப்பட்டிருக்கும் பயணிகள் செல்லும் கார் விபத்தில் சிக்கினாலோ அல்லது வேறு எந்த விதமான ஆபத்து ஏற்பட்டாலும் அதைப் பயன்படுத்தி உதவியைக் கோரலாம்.

கேரள அரசு அறிமுகப்படுத்தும் இ - டாக்ஸி ஆப் . . . ஓலா, உபேரை விடக் குறைந்த விலையில் இனி கார்களில் பயணிக்கலாம் . . . டிரைவருக்கும் செம லாபம் !

இந்த ஆப்பை உருவாக்க மோட்டார் வாகன துறை, தொழிலாளர் துறை, கூட்டுறவு திட்ட வாரியம், சட்டத்துறை, போக்குவரத்துத் துறை, தகவல் தொழிற்நுட்ப துறை, காவல் துறை, இந்திய டெலிபோன் துறை, உள்ளிட்ட பல துறைகள் சேர்ந்து பணியாற்றி ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு துறையின் அனுமதியைப் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு அறிமுகப்படுத்தும் இ - டாக்ஸி ஆப் . . . ஓலா, உபேரை விடக் குறைந்த விலையில் இனி கார்களில் பயணிக்கலாம் . . . டிரைவருக்கும் செம லாபம் !

இந்த சேவையைக் கேரள அரசு வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி அதாவது மலையாள மாதமாக சின்கம் மாதம் முதல் நாள் இதை கனாக்காக்குன்னு அரண்மனையில் வைத்துத் துவக்க விழா நடக்கிறது. இதுவரை பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் தடம் பதித்திருந்த துறையில் தற்போது கேரள அரசு ஒரு அரசு தயாரிப்பாக "கேரளா சவாரி " ஆப்பை அறிமுகப்படுத்துகிறது. அதுவும் குறைவான கட்டணத்தில் இந்த சேவையை வழங்கவுள்ளது.

கேரள அரசு அறிமுகப்படுத்தும் இ - டாக்ஸி ஆப் . . . ஓலா, உபேரை விடக் குறைந்த விலையில் இனி கார்களில் பயணிக்கலாம் . . . டிரைவருக்கும் செம லாபம் !

ஏற்கனவே டிரைவர்கள் தனியார் இ-டாக்ஸி சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் அடையும் சிக்கல்களை தீர்க்க கேரள அரசு யோசித்து இதை ஆப்பை டிசைன் செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருதி பேனிக் பட்டன்களை வைத்துள்ளது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால் இன்று இ-டாக்ஸி சேவைகளில் பயணிகள் படும் பெரும் துயரம் என்றால் புக்கிங்கை டிரைவர்கள் கேன்சல் செய்வது அல்லது செய்யச் சொல்லுவது, மற்றும் ஆன்லைன் பணபரிவர்த்தைதனையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது. உள்ளிட்ட விஷயங்கள் பெரிய பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. இதைத் தீர்க்க தனியார் நிறுவனமும் கேரள அரசும் எந்த விதமான நடவடிக்கையை எடுக்கப்போகிறது எனத் தொடர்ந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 28, 2022, 14:34 [IST]
English summary
Kerala government scheduled to launch e taxi service on august 17 in the name of Kerala savaari
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+