அமைச்சர்கள் பயணிக்க ஒரு கோடி ரூபாய் செலவில் சொகுசு பேருந்து.. இதை கப்பல்னே சொல்லலாம்! மிரண்டு நிற்கும் மக்கள்!

இந்தியாவே இப்ப கேரளாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 'நவ கேரளா சதாஸ்' பற்றிதான் பேசிக் கொண்டிருக்கின்றது. மிக முக்கியமாக கேரள மக்கள் ஒரு சிலர் இதை வரவேற்றும், பலர் அதை இழிந்துக் கொண்டும் இருக்கின்றனர். மாநிலத்தில் பல்வேறு நிதி நெருக்கடி பிரச்னை ஓடிக் கொண்டிருக்கையில் இந்த கொண்டாட்டம் தேவை தானா என்பதே கேரள மக்கள் பலரின் ஆதங்கமாக இருக்கின்றது.

இந்த நிலையிலேயே கூடுதல் ஷாக்காக ரூ. 1.05 கோடி மதிப்பில் சொகுசு பேருந்தை அமைச்சர்களின் பயன்பாட்டிற்காக களமிறக்கி இருக்கின்றது முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு. இது மாநிலத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக அம்மாநிலத்தில் முதியோர்கள் சிலருக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய முதியோர் பென்ஷன் தொகைக் கிடைக்கவில்லை என புகார் கூறப்படுகின்றது.

Kerala luxury bus

இதற்கு மாநிலத்தின் நிதி நெருக்கடி காரணம் என கூறப்பட்டு வரும் இந்த நிலையிலேயே கேரள அரசாங்கம் நவ கேரள சதாஸ்-ஐக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு அமைச்சர்கள் அனைவரும் கேரளாவின் எல்லை பகுதியான காசர்கோடு தொடங்கி திருவனந்தபுரம் வரை பயணிக்க இருக்கின்றனர்.

இந்த பயணத்திற்கு என்றே பிரத்யேகமாக புதிய பென்ஸ் சொகுசு பேருந்து தயார் செய்யப்பட்டு
வாங்கப்பட்டு இருக்கின்றது. இதன் மதிப்பு ரூ. 1.05 கோடி என கூறப்படுகின்றது. அமைச்சர்களுக்கு சொகுசான பயணத்தை உறுதிச் செய்வதற்காக இந்த பேருந்தில் ஏகப்பட்ட லக்சூரி அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

kerala buys luxury bus for nava kerala sadas

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் எதையும் அரசுவெளியிடவில்லை. இந்த பேருந்தானது பெங்களூருவில் உள்ள லால் பாக்-கிலேயே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. எஸ்எம் கண்ணப்பா ஆட்டோமொபைல்ஸ் எனும் பேருந்து உடல் கட்டுமான நிறுவனத்தின் வாயிலாகவே இந்த பேருந்து கூடுதல் லக்சூரி பேருந்தாக மாற்றப்பட்டு இருக்கின்றது.

சாதாரணமாகவே, பென்ஸ் பேருந்துகள் அதிக சொகுசு வசதிகளுக்கு பெயர்போனவையாக இருக்கின்றன. இதனையே அமைச்சர்களுக்காக சொகுசு கப்பல் (பேருந்து) போல் அவர்கள் மாற்றி இருக்கின்றனர். இந்த பேருந்தில் மாநில அமைச்சர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் பினராயி விஜயனும் பயணிக்கின்றார். ஆகையால், அந்த பேருந்தில் எதிர்பார்த்த் மற்றும் எதிர்பார்த்திராத அம்சங்களும் இடம் பெற்றிருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், முன் பக்கத்தில் பினராயி விஜயன் அமர்வதற்கு என்று ஓர் ரெக்லைனிங் வசதிக் கொண்ட இருக்கை சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், அந்த இருக்கை பிரத்யேகமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும் இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் கூறுகின்றன. இது ஓர் ஆட்டமேட்டிக் ரெக்லைனிங் இருக்கை ஆகும்.

இதுதவிர, 11 லட்ச ரூபாய் மதிப்பில் பேருந்திலே பயோ கழிவறை, குளிர்சாதன பெட்டி, மைக்ரோ ஓவன், டைனிங் மேடை, வாஷ் பேஷின் மற்றும் சிறிய எலிவேட்டர் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த பேருந்து தாங்கி இருக்கின்றது. ஆகையால் இந்த பேருந்து பேருந்தைப் போல் இல்லாமல் கப்பல் இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது.

பேருந்தின் வெளிப்புறத்தில் முழுக்க பழுப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், கேரளாவை பிரதிபலிக்கக் கூடிய புகழ்பெற்ற சின்னங்கள் .சிலவும் பேருந்தின் மேற்பரப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக, போட் ஹவுஸ், கோயில்கள், மசூதிகள் மற்றும் புகழ்பெற்ற சபைகள் ஆகியவற்றின் சின்னங்களே பேருந்தின் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டு இருக்கின்றன.

இவற்றுடன், கேரள டூரிஸத்தின் சின்னும் பேருந்தின் மேற்பரப்பில் காணப்படுகின்றது. கேரள அமைச்சர்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு இருக்கும் இந்த பேருந்தின் மதிப்பு ரூ. 44 லட்சம் மட்டுமே இருக்கும் என கூறப்படுகின்றது. மீதமுள்ள 61 லட்ச ரூபாயும் அப்பேருந்தில் சொகுசு வசதிகளை சேர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பேருந்தில் ஒட்டுமொத்தமாக 25 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. முதல் இருக்கை தொடங்கி பின் இருக்கை வரை அனைவருக்கும் சொகுசான ரைடு கட்டாயம் கிடைக்கும் என்றும் தெரிகின்றது. இதற்காகவே கோடி ரூபாயை கேரள அரசு தற்போது வாரி இறைத்திருக்கின்றது. இந்த பேருந்து வாவ் என சொல்லும்படி இருந்தாலும், மாநில அரசின் செயல் பலருக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 18, 2023, 20:03 [IST]
English summary
Kerala govt buys inr 1 5 cr worthable luxury bus
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+