நவீன கேமிராவால் 98 சதவீதம் குறைந்த சாலை விதிமீறல்...? கேரள போலீஸை மெய்சிலிர்க்க வைத்த தொழில்நுட்பம்!

கேரளாவில் சோதனையோட்டமாக பொருத்தப்பட்டு இருக்கும் தன்னிச்சையாக செயல்படும் கேமிராக்களால் 98 சதவீதம் போக்குவரத்து வீதிமீறல்களுக்கு தீர்வு காணப்பட்டிருப்பதாக அம்மாநில போலீஸார் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நவீன கேமிராவால் 98 சதவீதம் குறைந்த சாலை விதிமீறல்...? கேரள போலீஸை மெய்சிலிர்க்க வைத்த தொழில்நுட்பம்!

கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் சோதனயோட்டம் முறையில் ஆட்டோ இன்டெலிஜன்ஸ் மென்பொருள் பொருத்தப்பட்ட பிரத்யேக கேமிராக்கள் அங்குள்ள சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமிராக்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்டறியும்படி பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கேமிரா மூலம் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மற்றும் விதிமீறல்கள் கணிசமாக குறைந்திருப்பதாக அம்மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நவீன கேமிராவால் 98 சதவீதம் குறைந்த சாலை விதிமீறல்...? கேரள போலீஸை மெய்சிலிர்க்க வைத்த தொழில்நுட்பம்!

சாலையில் ஏற்படும் போக்குவரத்து, வீதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட சீர்கேடு பிரச்னைகளைக் குறைக்கும் விதமாக கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, அம்மாநிலத்தின் மோட்டார் வாகனத்துறையினர், சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களைக் கண்டறியும்படி, நவீன தொழில்நுட்பம் அடங்கிய இன்டலிஜென்ஸ் கேமிராக்களை திருவனந்தபுரத்தில் சோதனையோட்டமாக பொருத்தியுள்ளது.

நவீன கேமிராவால் 98 சதவீதம் குறைந்த சாலை விதிமீறல்...? கேரள போலீஸை மெய்சிலிர்க்க வைத்த தொழில்நுட்பம்!

இந்த கேமிரா சாலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை எளிதில் கண்டறிய உதவும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்குவது, சீட் பெல்ட் அணியாமல் காரை இயக்குவது, அதிவேகமாக செல்லும் வாகனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை தன்னிச்சையாக கண்டறிந்து அவர்களின் வாகன பதிவெண்களை இந்த கேமிராக்கள் பதிவு செய்யும்.

நவீன கேமிராவால் 98 சதவீதம் குறைந்த சாலை விதிமீறல்...? கேரள போலீஸை மெய்சிலிர்க்க வைத்த தொழில்நுட்பம்!

சென்சார் மூலம் இயங்கும் இந்த கேமிரா, வாகன ஓட்டிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் துல்லியமாக கண்டறிந்து செயல்படும். போக்குவரத்து போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்துவரும் வாகன ஓட்டிகள், இந்த கேமிராவின் மூலம் எளிதில் சிக்கி வருகின்றனர். தற்போது, இந்த கேமிராக்கள் சோதனையோட்டமாக திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதிகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் நடைமுறைக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

நவீன கேமிராவால் 98 சதவீதம் குறைந்த சாலை விதிமீறல்...? கேரள போலீஸை மெய்சிலிர்க்க வைத்த தொழில்நுட்பம்!

இதுகுறித்து டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின், ரோபாட்டிக்ஸ் மற்றும் அறிவாற்றல் அமைப்புகளுக்கான உலகளாவிய தலைவரான ரோஸி ஜான் கூறியதாவது, "மாநிலத்தில் ஆட்டோ இன்டெலிஜன்ஸுக்கான தனி அமைச்சரவை வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நாங்கள் முன்வைத்துள்ளோம். ஆட்டோ இன்டலிஜென்ஸ் கேமிராக்கள் மனிதர்களுக்கு இணையாகவும், அதற்கு மேலாகவும் சிறப்பாக செயல்படும். இதன் மூலம் துள்ளியமான காட்சி பதிவுகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவை மேற்கொள்ள முடியும்" என்றார்.

நவீன கேமிராவால் 98 சதவீதம் குறைந்த சாலை விதிமீறல்...? கேரள போலீஸை மெய்சிலிர்க்க வைத்த தொழில்நுட்பம்!

மேலும், இதுகுறித்து இணை போக்குவரத்து ஆணையர் ராஜீவ் புத்தலத் கூறுகையில், "சோதனையோட்டம் முறையில் செயல்பட்டு வரும் இந்த கேமிராக்கள் தற்போது, வலையார், வடக்கன்சேரி மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. முன்னதாக, அதிக வேகமாக செல்லும் வாகனங்கள், நம்பர் பிளேட் இல்லமால் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவையைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை இயக்குபவர்கள், சீட் பெல்ட் அணியாமல் கார்களை இயக்குபவர்களைக் கண்டறிய இந்த கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நவீன கேமிராவால் 98 சதவீதம் குறைந்த சாலை விதிமீறல்...? கேரள போலீஸை மெய்சிலிர்க்க வைத்த தொழில்நுட்பம்!

இந்த கேமிராக்கள் வாகனங்களின் தகவல் அடங்கிய சர்வரில் இணைக்கப்பட்டிருப்பதால், ஒரு ஸ்கேன் செய்ததும் வாகனத்தின் அத்தனை தகவல்களையும் உடனடியாக திரையின்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும். இதனால், வாகனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் சுலபம்" என்றார்.

நவீன கேமிராவால் 98 சதவீதம் குறைந்த சாலை விதிமீறல்...? கேரள போலீஸை மெய்சிலிர்க்க வைத்த தொழில்நுட்பம்!

இவ்வாறு, முறேகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை ஆட்டோ இன்டலிஜென்ஸ் கேமிராவின் உதவி மூலம் கண்டறியும் பணியை சிடிஎசி என்ற அமைப்பிடம் கேரள மாநிலத்தின் மோட்டார் வாகனத்துறை ஒப்படைத்துள்ளது. இந்த அமைப்பு சோதனையோட்டமாக திருவனந்தபுரத்தில் பொருத்தியுள்ள கேமிரா மூலம் 98 சதவிகிதம் துள்ளியமான தகவல்களை சேகரித்திருப்பதாக கூறுகிறது.

நவீன கேமிராவால் 98 சதவீதம் குறைந்த சாலை விதிமீறல்...? கேரள போலீஸை மெய்சிலிர்க்க வைத்த தொழில்நுட்பம்!

இதைத்தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதியிலும் இத்திட்டைத்தை அமல்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில போக்குவரத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன்மூலம், போக்குவரத்து போலீஸாருக்கு சிறிது தலைவலி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாலையில் ஏற்படும் வாகன ஓட்டி போலீஸார் மோதலும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன கேமிராவால் 98 சதவீதம் குறைந்த சாலை விதிமீறல்...? கேரள போலீஸை மெய்சிலிர்க்க வைத்த தொழில்நுட்பம்!

இந்தக் கேமிராக்கள் மூலம் கண்டறியப்படும் வாகன ஓட்டிகளுக்கு இ-செல்லான் மூலம், அவர்களின் அபராதத் தொகைக்கான ரசீது வாகன ஓட்டிகளின் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Govt Planning To Install AI Cameras For Detect Traffic Offenders. Read In Tamil.
Story first published: Tuesday, February 26, 2019, 16:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X