கடவுளுக்கு ஐஸ் வைத்த கார் விற்பனையாளர்.. காரை காணிக்கையாக தந்தவருக்கு கோவில்ல என்ன கொடுத்தாங்க தெரியுமா?

கடவுளுக்கு ஐஸ் வைக்கும் விதமாக கார் விற்பனையாளர் ஒருவர் ஓர் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றார். அவர் புத்தம் புதிய கார் மாடல் ஒன்றை கடவுளுக்கு காணிக்கையாக வழங்கி இருக்கின்றார். கேரளாவைச் சேர்ந்த ஹூண்டாய் கார் விற்பனையாளர் கெஷ்வின் ஹூண்டாய் (Keshvin Hyundai). இந்த டீலரே கோவிலுக்கு காரை காணிக்கையாக வழங்கியவர் ஆவார். கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் ஐயப்பன் கோவிலுக்கே கார் டீலர் ஹூண்டாய் காரை பரிசாக வழங்கி உள்ளார். அவர் பரிசாக வழங்கி இருப்பது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai GRAND i10 NIOS) கார் மாடல் ஆகும்.

இது ஓர் ஹேட்ச்பேக் (Hatchback) வகை கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. கெஷ்வின் ஹூண்டாய் டீலர்ஷிப்பின் உரிமையாளர் உதயகுமார் ரெட்டியே நேரில் வந்து தேவஸ்வம் போர்டின் தலைவர் விகே விஜயனிடம் காரை காணிக்கையாக வழங்கினார். இதைத்தொடர்ந்து, அந்த காருக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Car dealer donated car to temple

மேலும், காரை காணிக்கையாக வழங்கிய ஹூண்டாய் கார் விற்பனையாளருக்கு தேவஸ்வம் போர்டு சார்பில் ஸ்ரீ குருவாயூரப்பனின் பிரசாதம் வழங்கப்பட்டது. களப்பம், திருமுடி மாலை, பழம் மற்றும் சர்க்கரை அடங்கிய பிரசாதமே அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் சற்றே விலை குறைவான கார் மாடலாக ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் இருக்கின்றது.

இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிரம்பிய ஹேட்ச்பேக் கார் மாடல் ஆகும். இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இத்தகைய ஓர் கார் மாடலையே ஹூண்டாய் கார் விற்பனையாளர் குருவாயூர் கோவலுக்கு காணிக்கையாக வழங்கி இருக்கின்றார்.

இந்தியாவில் கிராண்டு ஐ10 நியாஸ் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. எரா (Era), மேக்னா (Magna), கார்பரேட் (Corporate), ஸ்போர்ட்ஸ் (Sportz) மற்றும் ஆஸ்தா (Asta) ஆகியவையே அவை ஆகும். இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டு ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கம்பெனியால் பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட்டுடனேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் ரூ. 7.75 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், இதன் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் ரூ. 5.92 லட்சம் தொடங்கி ரூ. 8.56 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹூண்டாய் நிறுவனம் இந்த கிராண்ட் ஐ10 நியாஸ் கார் மாடலின் சிஎன்ஜி ஆப்ஷனின் பக்கம் இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு சமீபத்தில்தான் இரட்டை சிலிண்டர்களைக் கொண்ட சிஎன்ஜி கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதுமட்டுமில்லைங்க, இந்த கார் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக நான்கு லட்சம் யூனிட்டுகள் கிராண்ட் ஐ10 நியாஸ் விற்பனையாகியதாகவும் சமீபத்திலேயே தகவல்கள் வெளியாகின. கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்திலேயே இந்த தகவல் வெளியாகியது. தொழில்நுட்பம், விலை மற்றும் பிரீமியம் அம்சங்கள் என அனைத்திலும் மிக சிறந்த தயாரிப்பாக கிராண்ட் ஐ10 நியாஸ் விளங்குகின்ற காரணத்தினாலேயே இந்த அளவிற்கு அது விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகின்றது.

அதேபோல், கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட கார் மாடலாகவும் அது காட்சியளிக்கின்றது. அந்தவகையில், கிராண்ட் ஐ10 நியாஸ்க்கு அழகு சேர்க்கும் விதமாக புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், எல்இடி டெயில் லைட், ரூஃப் ரெயில், சுறாவின் துடுப்பு போன்ற அமைப்புடைய ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதேபோல் இந்த காரில் பிரீமியம் அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந். அந்தவகையில், 20.25 செமீ அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கால் வைக்கும் பகுதியில் லைட், பின் பக்கத்திற்கான ஏசி துளை, டில்ட் செய்யும் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகிய அம்சங்களே கிராண்ட் ஐ10 நியாஸ் ஹேட்ச்பேக் காரில் வழங்கப்பட்டு உள்ளன.

இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக மிக தாரளமாக வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், பின் பக்கத்திற்கான பார்க்கிங் கேமிரா, பகல் மற்றும் இரவு நேரங்களுக்கான ஐஆர்விஎம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் போன்ற அம்சங்களே அதில் வழங்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குருவாயூர் கோவிலுக்கு கார் காணிக்கையாக வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் அந்த கோவிலுக்கு பக்தர்கள் சிலர் கார்களை பரிசாக வழங்கி இருக்கின்றனர். அந்தவகையில் மஹிந்திரா நிறுவனமும் நேரடியாக களமிறங்கி இந்த கோவிலுக்கு காரை பரிசாக வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, September 23, 2024, 12:46 [IST]
English summary
Kerala hyundai car dealer keshvin hyundai donated grand i10 nios to guruvayurappan temple
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+