யூடியூபில் அப்படி எவ்வளவுதான் பணம் கொடுக்குறாங்க? கை குழந்தை உடன் ஷோரூமில் இளம் தம்பதி!!
யூடியூப் (Youtube), இன்ஸ்டாகிராம் ஆதிக்கம் உலகம் முழுவதும் ஆரம்பித்த பிறகு அதன் மூலமாக கணிசமான வருவாயை சம்பாதிக்க ஆரம்பித்துள்ளவர்கள் ஏராளம். குறிப்பாக, நம் இந்தியாவில் ஊருக்கு ஒருவர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலமாகி உள்ளனர். அந்த அளவிற்கு ஒரு சிலர் இதையே தங்களது முழு நேர வேலையாக பார்த்து வருகின்றனர். அவ்வாறு, இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் கேரள தம்பதி ஒன்று தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காருடன் சென்றுள்ளனர். யார் அவர்கள் என்பதையும், அவர்கள் புதியதாக வாங்கியுள்ள மஹிந்திரா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மஹிந்திரா கார்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக, க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் முடிவுகள் வெளியாக துவங்கிய பிறகு, நிறைய பேர் அந்த முடிவுகளை வைத்தே மாடர்ன் தரத்திலான மஹிந்திரா கார்களை வாங்க ஆரம்பித்தனர். ஏனெனில், க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் எக்ஸ்யூவி300 உள்ளிட்ட சில கார்கள் 5க்கு 5 என முழு மதிப்பெண்களை பெற்றன.

அதேபோல், கடந்த ஆண்டில் நம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிலும் சில மஹிந்திரா கார்கள் முழு 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளன. அந்த சில மஹிந்திரா கார்களுள் எக்ஸ்யூவி700 ஒன்றாகும். இதன் மூலமாகவே, தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார்களுள் ஒன்றாக எக்ஸ்யூவி700 விளங்குகிறது. ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் பேர் எக்ஸ்யூவி700 கார்களை வாங்குகின்றனர்.
அந்த வரிசையில், தற்போது எக்ஸ்யூவி700 காரை வாங்கியுள்ள ஜோடி, கேரள மக்களிடையே இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளது. இந்த ஜோடியின் பெயர், ஷீத்தல் எல்சா ஜான்சன்- வினு வினேஷ் ஆகும். ஜோடி என சொல்வதை காட்டிலும் தம்பதி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு 2021ஆம் ஆண்டிலேயே திருமணமாகி விட்டது. அதனை தொடர்ந்து, இந்த 2024ஆம் ஆண்டில் இவர்களுக்கு குழந்தை பிறந்தது.

இந்த ஆண்டில் மேலும் ஒரு கொண்டாட்டமாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை இந்த தம்பதியர் வாங்கியுள்ளனர். காருக்கு மேட்சிங்காக கருப்பு நிற உடையில் ஷோரூமுக்கு சென்று ஷீத்தல் எல்சா- வினு வினேஷ் தம்பதி காரை டெலிவிரி பெறும் வீடியோவை ஷீத்தல் எல்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். மறைப்பை நீக்கி காரின் தோற்றத்தை வெளிக்காட்டியதும் ஷோரூமிலேயே கேக் வெட்டி கொண்டாடினர்.
பின்னர், வினு வினேஷ் டிரைவர் இருக்கையில் காரை ஓட்ட ஆயத்தமாக, ஷீத்தல் எல்சா குழந்தை உடன் முன் இருக்கையில் அமர்ந்தார். குழந்தை உடன் காருக்குள் நுழைய சற்று சிரமப்பட்ட ஷீத்தல் எல்சாவை வினு வினேஷ் கை கொடுத்து முதல்முறையாக அவர்களது எக்ஸ்யூவி700 காருக்குள் அழைத்தது பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. பின்னர், காரை ஷோரூமில் இருந்து வினு வினேஷ் வெளியே ஓட்டி வந்தார்.

இவர்களது வீடியோவிற்கு கூடுதல் எஃபெக்ட் தருவது போல, வெளியே மழை பெய்துக் கொண்டிருந்தது. பின்னர் அருகில் இருந்த தேவாலயத்திற்கு காரை கொண்டு சென்று சிறிய பிரார்த்தனையை குழந்தை உடன் ஷீத்தல் எல்சா- வினு வினேஷ் ஜோடி செய்வதையும் வீடியோவில் காண முடிகிறது. இவர்கள் வாங்கியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதற்குமுன் விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 காருக்கு மாற்றாக எக்ஸ்யூவி700 விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மஹிந்திரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.14 லட்சத்தில் இருந்து ரூ.25.14 லட்சம் வரையில் உள்ளன. மிட்நைட் பிளாக், எலக்ட்ரிக் ப்ளூ, நபோலி பிளாக், டஸலிங் சில்வர், ரெட் ரேஜ் மற்றும் எவரெஸ்ட் வெள்ளை உள்பட பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்களில் எக்ஸ்யூவி700 விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறப்பட்டுள்ளவை காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும். இவ்வளவு விலைமிக்க காரை வெறும் யூடியூப் & இன்ஸ்டாகிராம் வருமானத்தின் மூலமாக வாங்குவது சற்று கடினமாகும். ஆதலால், இந்த கேரள இன்ஸ்டா தம்பதிக்கு வேறு விதமாகவும் வருவாய் கிடைத்து கொண்டிருக்க வேண்டும். இவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், மற்ற குடும்பத்தினர் யாரையும் பார்க்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications









