கார் வளைவில் திரும்பும்போது திறந்து கொண்ட டோர்... கீழே விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம்! வீடியோ

கார் வளைவில் திரும்பும்போது டோர் திடீரென திறந்து கொண்டதால், உள்ளே இருந்த குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டது. குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அந்த விபத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

கார் வளைவில் திரும்பும்போது திறந்து கொண்ட டோர்... கீழே விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம்! வீடியோ

பொது சாலைகளில் பயணம் செய்யும் இந்தியர்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்திய சாலைகளில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் பல லட்சக்கணக்கான சாலை விபத்துக்களே இதற்கு சாட்சி. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில் பலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். அத்துடன் பலர் படுகாயமடைகின்றனர்.

கார் வளைவில் திரும்பும்போது திறந்து கொண்ட டோர்... கீழே விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம்! வீடியோ

எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் மதிப்பது கிடையாது. தொடர்ச்சியாக பலர் ஏடாகூடமாகவே வாகனங்களை இயக்கி கொண்டுள்ளனர். இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்கள் தொடர்பான அதிர்ச்சிகரமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாவது தற்போது வாடிக்கையாகி வருகிறது.

கார் வளைவில் திரும்பும்போது திறந்து கொண்ட டோர்... கீழே விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம்! வீடியோ

இந்த வரிசையில் தற்போது அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வளைவில் திரும்பும்போது, காரில் இருந்து குழந்தை ஒன்று வெளியே விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோதான் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விபத்தில் இருந்து குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.

கார் வளைவில் திரும்பும்போது திறந்து கொண்ட டோர்... கீழே விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம்! வீடியோ

கேரள மாநிலத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. டிவைடர்கள் இல்லாத டபுள் லேன் சாலையில் இந்த அதிர்ச்சிகரமான விபத்து நடைபெற்றிருப்பதை இந்த வீடியோ காட்டுகிறது. சம்பவத்தன்று ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஒன்று அந்த சாலையில் வந்து கொண்டிருந்தது.

கார் வளைவில் திரும்பும்போது திறந்து கொண்ட டோர்... கீழே விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம்! வீடியோ

மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்த அந்த கார், இடது பக்கம் நோக்கி திரும்பிய வளைவில் திரும்பியது. அப்போது காரின் பின் பக்கம் இருந்த வலது கை பக்க டோர் திடீரென திறந்து கொண்டது. இதனால் காருக்கு உள்ளே இருந்த குழந்தை ஒன்று வெளியே தூக்கி வீசப்பட்டது. அந்த சமயத்தில் ஒரு சில வாகனங்கள் அந்த வழியாக வந்தன.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

கார் வளைவில் திரும்பும்போது திறந்து கொண்ட டோர்... கீழே விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம்! வீடியோ

அதிர்ஷ்டவசமாக அந்த வாகனங்களின் டிரைவர்கள் குழந்தை கீழே விழுந்ததை பார்த்து விட்டனர். எனவே உடனடியாக பிரேக் பிடித்து தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டனர். வீடியோவை வைத்து பார்க்கையில் அந்த குழந்தை நன்றாக இருப்பது போலதான் தெரிகிறது. எனினும் குழந்தைக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கார் வளைவில் திரும்பும்போது திறந்து கொண்ட டோர்... கீழே விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம்! வீடியோ

காரில் இருந்து குழந்தை கீழே விழுந்ததற்கான சரியான காரணம் என்னவென்று தெரிய வரவில்லை. ஆனால் காரின் கதவு சரியாக மூடப்படாமல் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த சமயத்தில் வளைவில் திரும்பும்போது, உடலின் ஃபோர்ஸ் காரணமாக டோர் திடீரென திறந்திருக்கலாம். எனவே குழந்தை வெளியே விழுந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கார் வளைவில் திரும்பும்போது திறந்து கொண்ட டோர்... கீழே விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம்! வீடியோ

ஆனால் விபத்து நடைபெற்ற சமயத்தில் குழந்தை சீட்பெல்ட் அணிந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது. சீட்பெல்ட் அணிந்திருந்தால், குழந்தை வெளியே விழுந்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி கொண்டுள்ள இந்த அதிர்ச்சிகரமான விபத்தின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

காரில் பயணிக்கும்போது கவனமாக இருப்பது எவ்வளவு அவசியம் என்பதை இந்த விபத்து உணர்த்துகிறது. குறிப்பாக குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்வதன் அவசியத்தை இந்த விபத்தின் மூலம் உணரலாம். காரில் நீங்கள் எந்த இருக்கையில் அமர்ந்திருந்தாலும் சீட்பெல்ட் அணிந்து கொண்டு பயணிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கார் வளைவில் திரும்பும்போது திறந்து கொண்ட டோர்... கீழே விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம்! வீடியோ

கார்களின் முன் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் இந்தியர்கள் பெரும்பாலானோர் தற்போது சீட்பெல்ட் அணிய தொடங்கி விட்டனர். கடுமையான விதிமுறைகளே இதற்கு காரணமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் கார்களின் பின் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே சீட்பெல்ட் அணிகின்றனர்.

கார் வளைவில் திரும்பும்போது திறந்து கொண்ட டோர்... கீழே விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம்! வீடியோ

சாலை விபத்து நிகழும்போது, சீட்பெல்ட் அணியாதவர்கள் படுகாயம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் அவர்களுடன் பயணிக்கும் மற்ற பயணிகளையும் அவர்கள் காயப்படுத்தலாம். எனவேதான் சீட்பெல்ட் மிக முக்கியமான பாதுகாப்பு வசதியாக உள்ளது. காரில் பயணிக்கும் அனைவரும் இனியாவது கட்டாயம் சீட்பெல்ட் அணியுங்கள்.

Image Courtesy: Shantonil Nag/YouTube

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இந்தியாவில் இதுபோன்ற அதிர்ச்சிகரமான விபத்து வீடியோ காட்சிகள் வெளியாவது இது முதல் முறை கிடையாது. போதையில் டிரிபிள் டிரைவ் சென்ற இளைஞர்கள் திடீரென மாயவதை போன்ற காட்சிகள் சமீபத்தில் கூட வெளியாயின. இதுகுறித்த விரிவான தகவல்களையும், வீடியோவையும் தொடர்ந்து பார்க்கலாம்.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இந்தியாவில் அண்மைக் காலங்களாக விபத்தின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கியமானதாக மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குவதே முதன்மை இடத்தில் இருக்கின்றது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இதனை தவிர்க்கும் விதமாக பல அதிரடி நடவடிக்கைகளை போக்குவரத்துத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், வாகன ஓட்டிகள் அதனை பெரிதாக பொருட்படுத்திக் கொள்வதே இல்லை.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இந்நிலையில், மதுபோதையில் வாகனத்தை இயக்கினால் எத்தகைய பின் விளைவுகளை சந்திக்கக் கூடும் என்பதனை விளக்குகின்ற வகையிலான வீடியோ ஒன்று புதிதாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இந்த சம்பவம், ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் பகுதியில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சாலையில் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதால் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

ஆனால், இதனை மீறி ஒரே இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்ற மூன்று இளைஞர்கள் மிகப் பெரிய விபத்தைச் சந்தித்தனர். இந்த விபத்துகு றித்த காட்சிகள் பார்ப்பதற்கு மாயாஜாலத்தைப் போன்று காட்சியளிக்கின்றது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

பைக்கில் சென்ற மூவரும் திடீரென விபத்துக்குள்ளான சில நொடிகளிலேயே மாயவதைப் போல் அங்கிருந்து தூக்கி வீசப்படுகின்றனர். இதுகுறித்த வீடியோவை ஷாந்தோனில் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

அந்த வீடியோவில், மிதமான வேகத்தில் செல்லும் அந்த பைக்கில் மூன்று இளைஞர்கள் அமர்ந்து செல்கின்றனர். அவர்கள், எக்ஸ்பிரஸ் சாலையின் மூன்றாவது வலது பக்க பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது, அவர்களுக்கு பின்னே வேகமாக வந்த கார்கள் ஒலி எழுப்பி அவர்களை ஒதுங்கச் செய்துவிட்டு ஓவர்டேக் செய்தன. இவ்வாறு, தொடர்ச்சியாக மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அவர்களை ஓவர்டேக் செய்து கடந்தன.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இதனால், சாலையின் இடப்பக்க பாதைக்கும், நடு பாதைக்கும் இங்கும் அங்குமாக மாறி சென்ற அந்த இளைஞர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமாறு திரும்பினார்கள். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் நேரடியாக பாதையை பிரிக்கும் டிவைடர் மீது மோதியது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இந்த விபத்தில், பைக்கில் அமர்ந்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களும் எதிர்பக்க சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்து சரியாக நள்ளிரவில் நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக அப்போது வேறெந்த வாகனமும் வராத காரணத்தால் அந்த பைக் மற்ற எந்த வாகனம் மீதும் மோதாமல் மீண்டும் சாலையின் மறுபக்க டிவைடர்மீது மோதி நின்றது.

இந்த சம்பவத்தில், பின்னால் அமர்ந்திருந்த ஒரு இளைஞருக்கு மட்டும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. மற்றவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்த காரணத்தால் சிறு சிறு காயங்களுடன் தப்பினர். தொடர்ந்து, அவர்களை மீட்ட சக வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இந்த சம்பவம் அனைத்தையும் பைக்கின் பின்னால் காரில் வந்த இளைஞர்கள் சிலர் தங்களின் செல்போன் மூலம் பதிவு செய்திருந்தனர். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர்கள்தான், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

பெரும்பாலும், இதுபோன்று மதுபோதையில் ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காகவே போலீஸார் இரவு, பகல் பாரமால் ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களை ஏமாற்றிச் செல்லும் பலர் இதுபோன்று விபத்துகளைச் சந்தித்து பெரும் பின்விளைவுகளுக்கு ஆளாகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 24, 2019, 21:16 [IST]
English summary
Kerala: Kid Falls Out Of Car - Viral Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+