ஆயுசு ரொம்ப கெட்டி... எமனிடம் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன இளைஞர்... உடம்பில் உதறலை ஏற்படுத்தும் வீடியோ

பயங்கரமான விபத்து ஒன்றில் இருந்து, இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அந்த காணொளி வேகமாக பரவி வருகிறது.

ஆயுசு ரொம்ப கெட்டி... எமனிடம் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன இளைஞர்... உடம்பில் உதறலை ஏற்படுத்தும் வீடியோ

இந்திய சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் சாலை விபத்துக்கள் நடக்கலாம் என்பது தெரிந்தாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் வாகனங்களை இயக்கியாக வேண்டிய தேவை இருக்கவே செய்கிறது.

ஆயுசு ரொம்ப கெட்டி... எமனிடம் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன இளைஞர்... உடம்பில் உதறலை ஏற்படுத்தும் வீடியோ

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதும், சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. சாலை விபத்துக்களில் உயிர் தப்புவது என்பது அதிசயமான நிகழ்வுதான். அப்படி கொடூரமான விபத்துக்களில் இருந்து பயணிகளும், பாதசாரிகளும் உயிர் தப்பிய நிகழ்வுகள் பல முறை நடைபெற்றுள்ளன.

ஆயுசு ரொம்ப கெட்டி... எமனிடம் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன இளைஞர்... உடம்பில் உதறலை ஏற்படுத்தும் வீடியோ

அந்த விபத்துக்களின் காணொளிகள் இணையத்தில் வைரலாக வரும் வருவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது ஒரு காணொளி இணையத்தை கலக்கி வருகிறது. பார்ப்பதற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு கொடூரமான சாலை விபத்தில் இருந்து இளைஞர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளார்.

ஆயுசு ரொம்ப கெட்டி... எமனிடம் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன இளைஞர்... உடம்பில் உதறலை ஏற்படுத்தும் வீடியோ

கேரள மாநிலம் கோழிக்கோடு-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரிங்கல்லதானி கிராமத்திற்கு அருகே தொடுகாப்பு என்ற பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று இளைஞர் ஒருவர் சாலையோரமாக பைக்கை நிறுத்தி விட்டு அதன் மீது அமர்ந்திருந்தார். அப்போது ஒரு ஜேசிபி வாகனம் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.

ஆயுசு ரொம்ப கெட்டி... எமனிடம் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன இளைஞர்... உடம்பில் உதறலை ஏற்படுத்தும் வீடியோ

ஆனால் திடீரென அந்த ஜேசிபி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. டயரில் ஏதேனும் பிரச்னையா? அல்லது வேறு ஏதேனும் இயந்திர கோளாறா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் ஓட்டுனரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக சாலையோரமாக பைக் மீது அமர்ந்திருந்த இளைஞரை நோக்கி ஜேசிபி சென்றது.

ஆயுசு ரொம்ப கெட்டி... எமனிடம் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன இளைஞர்... உடம்பில் உதறலை ஏற்படுத்தும் வீடியோ

ஆனால் அந்த இளைஞரால் ஜேசிபி தன்னை நோக்கி வருவதை பார்க்க முடியவில்லை. ஏனெனில் அவருக்கு பின்னால் இருந்து ஜேசிபி வந்தது. எனினும் ஒரு கட்டத்தில் அவர் ஜேசிபியை பார்த்து விட்டார். ஆனால் சுதாரித்து எழுந்து செல்வதற்கு ஜேசிபி அவரை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. அந்த சமயத்தில்தான் அதிசயம் நிகழ்ந்தது.

ஆயுசு ரொம்ப கெட்டி... எமனிடம் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன இளைஞர்... உடம்பில் உதறலை ஏற்படுத்தும் வீடியோ

ஜேசிபி வாகனம் தனது லேனில் இருந்து விலகி எதிர் லேனுக்கு சென்று இளைஞர் மீது மோதவிருந்த நேரத்தில் எதிர்திசையில் இருந்து மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) கார் ஒன்று வந்தது. அந்த கார், ஜேசிபி மீது பயங்கர வேகத்தில் மோதியது. ஜேசிபி வாகனத்தின் பாதையில், மஹிந்திரா பொலிரோ கார் வந்த காரணத்தால், அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக தப்பித்து விட்டார்.

ஆயுசு ரொம்ப கெட்டி... எமனிடம் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன இளைஞர்... உடம்பில் உதறலை ஏற்படுத்தும் வீடியோ

இல்லாவிட்டால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். அவர் கீழே விழுந்து விட்ட நிலையிலும், உடனடியாக எழுந்து விட்டார். அவர் மட்டுமல்லாது, ஜேசிபி மற்றும் மஹிந்திரா பொலிரோ காரின் ஓட்டுனர்களும் பெரிய அளவிலான காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஜேசிபி வாகனத்தின் ஓட்டுனருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளது.

ஆயுசு ரொம்ப கெட்டி... எமனிடம் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன இளைஞர்... உடம்பில் உதறலை ஏற்படுத்தும் வீடியோ

எனவே அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த விபத்தின் காணொளிதான் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களை கலக்கி கொண்டுள்ளது. அந்த காணொளியை நீங்கள் கீழே காணலாம்.

மஹிந்திரா பொலிரோ மிகவும் வலிமையான கார்களில் ஒன்று என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த விபத்தும் கூட அதனை நிரூபித்துள்ளது. அதிவேகத்தில் மோதிய போதும், மஹிந்திரா பொலிரோ பெரிய அளவில் சேதம் அடையவில்லை. அத்துடன் அதன் டிரைவரும் காயமின்றி உயிர் தப்பி விட்டார்.

More from DriveSpark

Article Published On: Monday, July 27, 2020, 18:45 [IST]
English summary
Kerala: Lucky Escape For Biker After Mahindra Bolero Rams Into JCB: Viral Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+