பாட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை! பேரன் இன்று சூப்பர் காருக்கு ஓனர் - இந்தியாவில் 3 பேரிடம் மட்டுமே இருக்கு!!

மெக்லாரன் (Mclaren) கார்களுக்கு உலகளவில் பலத்தரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் தான். ஆனால், இந்திய பாட்டிகள் வரையில் மெக்லாரன் கார்கள் பிரபலமாகி இருக்கும் என்று நினைக்கவில்லை. ஏனெனில், இங்கு ஒருவர் தனது பாட்டி கூறியதை அடுத்து மெக்லாரன் காரை வாங்கி அசத்தியுள்ளார். சமீபத்தில் இந்திய பாட்டிகள் சிலர் சேர்ந்து லம்போர்கினி கார் ஒன்றில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியது. அந்த பாட்டி க்ரூப்பில் ஒருவர் தான் இந்த பாட்டியும். அப்படிப்பட்ட பாட்டி யாருங்க அது? என்றுதானே கேட்கிறீர்கள். வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவை சேர்ந்த பாட்டிகள் சிலர் லம்போர்கினி காரில் ஒன்றாக செல்லும் வீடியோவை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், சில தினங்களுக்கு அந்த சமயத்தில் இந்தியா முழுவதும் அந்த வீடியோ பிரபலமாகியது. இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அதில் பாட்டிகளும் கூட கமெண்ட் செய்து இருந்தனர்.

kerala man buys mclaren 765lt

அதில் ஒரு பாட்டி லம்போர்கினி காருக்கு பதிலாக போர்ஷே காரை இவர்கள் தேர்வு செய்திருக்கலாம் என கமெண்ட் செய்திருந்தார். வயதான பாட்டிக்கு கூட லம்போர்கினி, போர்ஷே கார்களை தெரிந்துள்ளதா என அனைவரும் ஆச்சிரியப்பட்டனர். இந்த ஆச்சிரியத்தில் நாம் இருக்கும்போதே மற்றொரு பாட்டி, போர்ஷே கார் எல்லாம் இந்த காலத்தில் சாதாரணமாகிவிட்டது என கூறி மேலும் நம்மை ஆச்சிரியமூட்டி இருந்தார்.

இன்னொரு பாட்டி, "போர்ஷே கார்களில் கதவுகள் இல்லை, அதற்கு பதிலாக எனது பேரனை மெக்லாரன் காரை வாங்க சொல்லுவேன்" என கமெண்ட் செய்தார். கேரளாவை சேர்ந்த இந்த பாட்டி என்ன மைண்ட்செட்டில் அதை கூறினாரோ தெரியவில்லை, அவரது பேரன் அதனை நிஜமாக்கி உள்ளார்.

kerala man buys mclaren 765lt

ஆனந்த் என்கிற பெயரில் அந்த பாட்டியின் பேரன் என கூறப்படும் அந்த நபர் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் மெக்லாரன் காரை டெலிவிரி பெறும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனந்த் வாங்கியிருப்பது மெக்லாரன் 765எல்டி கார் ஆகும். இந்தியாவில் இளம் வயதில் இந்த மெக்லாரன் 765எல்டி காரை வாங்கியிருப்பவர் இந்த ஆனந்த் என கூறப்படுகிறது.

ஏனெனில் இந்தியாவில் இந்த மெக்லாரன் இதற்குமுன் 2 பேர் வாங்கியுள்ளனர். 3வது கஸ்டமராக ஆனந்த் இணைந்துள்ளார். கேரளாவில் இவர்தான் முதல் ஆள். ஆனந்தின் புதிய மெக்லாரன் 765எல்டி காரில் துபாய் நம்பர் பிளேட் இருப்பதை காணலாம். ஆம், ஆனந்த் இந்த காரை துபாயில் வாங்கியுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் உற்பத்தி நிறுவனமான மெக்லாரன் நீண்ட கால ஆலோசனைகளுக்கு பிறகு இந்தியாவில் சமீபத்தில்தான் நுழைந்தது.

அதாவது, இந்தியாவிலும் மெக்லாரன் கார்கள் விற்பனை செய்ய துவங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போதும் ஆனந்த் போன்றோர் துபாய் வழியாக மெக்லாரன் கார்களை இந்தியாவிற்கு கொண்டுவருகின்றனர். கார்னெட் என்கிற சர்வதேச கஸ்டம்ஸ் மூலமாக இவ்வாறு விலையுயர்ந்த கார்களை இந்தியாவிற்கு கொண்டுவருகின்றனர். பெரிய அளவில் வரிகள் விதிக்கப்படாததால், இந்த முறையை தான் நிறைய தொழிலதிபர்கள் பின்பற்றுகின்றனர்.

இருப்பினும், ஆனந்த் வாங்கியிருக்கும் மெக்லாரன் 765எல்டி காரின் விலை ஏறக்குறைய ரூ.12 கோடி வந்துவிடும். இந்த மெக்லாரன் காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 765 பிஎஸ் மற்றும் 800 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு சதுர கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது என்ஜினின் இயக்க ஆற்றலை பின் சக்கரங்களுக்கு வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள பாட்டிகளுக்கு கூட மெக்லாரன், போர்ஷே கார்கள் தெரிந்திருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. அதனை உடனடியாக ஒருவர் வாங்கியிருப்பது இன்னும் ஆச்சிரியமானது. ஏனெனில், வெளிநாடுகளில் விற்பனையாகுவது போல இந்தியாவில் மெக்லாரன் கார்கள் விற்பனையாகுவதில்லை. இந்த அளவிற்கு நம் நாட்டில் மிகவும் அரிதான மெக்லாரன் காரை தான் தற்போது ஒருவர் வாங்கியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Monday, November 18, 2024, 16:08 [IST]
English summary
Kerala man buys mclaren 765lt after grandmas suggestion check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+