வெள்ளை வேஷ்டி, சட்டையில் ஷோரூமுக்குள் நுழைந்ததும் எல்லாரும் பதறிட்டாங்க! குடும்பத்துடன் வந்தவர் வாங்கிய கார்..
ஒரு காலத்தில் லம்போர்கினி (Lamborghini) கார்களை ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் மட்டுமே வாங்கக்கூடிய சூழல் இருந்தது. நம் இந்தியர்கள் செய்தித்தாள்களிலும், வெளிநாட்டு திரைப்படங்களிலும் மட்டுமே லம்போர்கினி கார்களை பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பின், மெல்ல மெல்ல இந்தியர்களும் லம்போர்கினி கார்களை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆனால், அவ்வாறு வாங்கியவர்கள் எல்லாம் பெரும் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும், அரசியல் பின்புலம் உள்ளவர்களாகவுமே இருந்தனர்.
அதன்பின், இந்தியாவில் வெளிநாட்டு தயாரிப்புகளுக்கு பெரிய அளவில் கதவு திறந்துவிடப்பட்ட பிறகு, பெரும்பாலான பணக்காரர்கள் கூட எப்படியாவது லம்போர்கினி கார் ஒன்றை வாங்கி விட வேண்டும் என்று ஆவலுடன் பணத்தை சேர்த்து வாங்க ஆரம்பித்தனர். தற்போதைய சூழலில், கிட்டத்தட்ட அனைத்து செல்வந்தர்களிடமும் லம்போர்கினி கார் உள்ளது.

அந்த வகையில், இங்கு ஒருவர் வேஷ்டி, சட்டை அணிந்தப்படி ஷோரூமுக்கு வந்து சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான லம்போர்கினி உருஸ் (Urus) காரை வாங்கி உள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஒருவர் வெள்ளை நிறத்தில் பளிச்சிடும் வேஷ்டி, சட்டை அணிந்தப்படி குடும்பத்துடன் லம்போர்கினி ஷோரூமில் பிராண்ட்-நியூ உருஸ் காரை டெலிவிரி பெறுவதை காணலாம்.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த நபர் கேரளாவின் கோட்டயம்-பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர் ஆவார். ஆனால், இந்தியாவில் லம்போர்கினி கார் ஷோரூம் ஆனது மூன்றே மூன்று நகரங்களில் மட்டுமே உள்ளது. தலைநகர் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு என்பன அந்த 3 நகரங்கள் ஆகும். இந்த கேரள நபர் பெங்களூருவில் உள்ள லம்போர்கினி கார் ஷோரூமுக்கு நேரில் குடும்பத்துடன் சென்று காரை டெலிவிரி பெற்றுள்ளார்.

இந்தியாவில் மொத்தம் மூன்று விதமான உருஸ் கார்களை லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்கிறது. உருஸ் எஸ், உருஸ் பெர்ஃபார்மண்டே மற்றும் உருஸ் எஸ்இ என்பன அவை ஆகும். இதில், உருஸ் எஸ்இ ஆனது விலைமிக்க பிளக்-இன் ஹைப்ரீட் கார் ஆகும். இதனை விட சற்று குறைந்த விலையில் உருஸ் பெர்ஃபார்மண்டே காரை தான் இந்தியாவில் நிறைய பேர் வாங்குகின்றனர்.
ஆனால், கடந்த சில மாதங்களாக உருஸ் எஸ் காரின் விற்பனையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது இந்த கேரள கஸ்டமர் வாங்கியிருப்பதும் உருஸ் எஸ் காரே ஆகும். உருஸ் எஸ் கார் ஆனது இரு உருஸ் கார்களை காட்டிலும் விலை குறைவானதாக, ரூ.4.18 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

உருஸ் எஸ் காரில் 4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 666 பிஎஸ் மற்றும் 850 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த உருஸ் காரில் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லம்போர்கினி உருஸ் எஸ் காரை சமீப காலமாக நிறைய பேர் வாங்குவதற்கு காரணம், இந்த காரை எப்படி வேண்டுமானாலும் கஸ்டமைசேஷன் செய்துக் கொள்ளலாம் என்பதினால் ஆகும். இந்தியாவின் பெரும் தொழிதிபர் முகேஷ் அம்பானியும் சமீபத்தில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கியதை நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். முகேஷ் அம்பானியும் கூட உருஸ் கார்களில் உருஸ் எஸ் காரை தான் வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications









