நம்ம ரோடுகளுக்கு வேற லெவலில் இருக்கும்!! பணத்தை தண்ணி போல செலவழிச்சி இந்தியா கொண்டுவரப்பட்ட கார்!!
உலகளவில் பிரபலமான கார் நிறுவனங்களுள் ஒன்று ஏஎம் ஜெனரல் மோட்டார்ஸ் (AM General Motors) ஆகும். இந்த நிறுவனத்தின் ஹம்மர் வாகனத்திற்கு மிக சிறப்பான வரவேற்பு குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் கிடைக்கிறது. சமீபத்தில் இந்த காரின் எலக்ட்ரிக் வெர்சன் கூட அறிமுகம் செய்யப்பட்டது.
ஹம்மர் இவி என்கிற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட அந்த பிரம்மாண்டமான எலக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவை சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளார். முதலில் ஹம்மர் வாகனமே நம் இந்தியாவிற்கு புதியது எனும்போது, அதன் எலக்ட்ரிக் வெர்சனை இந்தியாவில் ஒருவர் வாங்கியுள்ளார் என்றால் ஆச்சிரியமாக உள்ளது. இந்த ஹம்மர் இவி எலக்ட்ரிக் கார் உரிமையாளரின் பெயர், அஜீஷ் (Ajesh).

கேரளாவின் கஞ்சிராப்பள்ளியை சேர்ந்தவரான அஜீஷ் கனடாவில் இருந்து தனக்கான ஹம்மர் இவி எலக்ட்ரிக் வாகனத்தை கேரளாவுக்கு கொண்டுவந்துள்ளார். கப்பல் மூலமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இது ஹம்மர் இவி காரின் ஒமேகா எடிசன் (Omega Edition) ஆகும். அதாவது, ஹம்மர் இவி எலக்ட்ரிக் காரிலேயே இது ஸ்பெஷல் எடிசன் ஆகும்.
தனித்துவமான நெப்டியூன் நீல நிறத்தில் இருப்பதுதான் ஒமேகா எடிசனின் சிறப்பாகும். கஞ்சிராப்பள்ளியை சேர்ந்த அஜீஷ் வாங்கியிருக்கும் ஹம்மர் இவி காரில் அந்த நெப்டியூன் நீல நிறத்தை காணலாம். கனடாவில் இருந்து 'ஆட்டோ இக்னைட்' (Auto Ignite) என்கிற நிறுவனத்தின் மூலமாக ஹம்மர் இவி எலக்ட்ரிக் காரை அஜீஷ் இந்தியாவுக்கு கொண்டுவந்துள்ளார்.

நெப்டியூன் நீல நிறம் மட்டுமின்றி, பளபளக்கும் கருப்பு நிறத்தில் 18-இன்ச்சில் அலாய் சக்கரங்களும் ஒமேகா எடிசனின் சிறப்பம்சம் ஆகும். கேரளாவில் அஜீஷ் ஹம்மர் இவி எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட படத்தில் காரின் பிரம்மாண்டமான சக்கரங்களை காணலாம். சக்கரங்களுக்கான வீல் கவர்கள் தனியாக ஒரு செட் வழங்கப்பட்டுள்ளது.
கனடாவில் 2, 2எக்ஸ், 3எக்ஸ் மற்றும் எடிசன் 1 என 4 விதமான வேரியண்ட்களில் ஹம்மர் இவி எலக்ட்ரிக் காரை ஏஎம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில், 3எக்ஸ் வேரியண்ட்டில் ஒமேகா எடிசன் கிடைக்கிறது. ஹம்மர் வாகனங்களின் முக்கிய சிறப்பு என்னவென்றால், இவற்றை ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் கொண்டு செல்லலாம் என்பதாகும்.
இதனாலேயே ஹம்மர் இவி எலக்ட்ரிக் காரில் கூட ஆஃப்-ரோடு பேக்கேஜ் நிலையான அம்சமாக வழங்கப்படுகிறது. இந்த பேக்கேஜில் அண்டர்பாடி கேமரா வியூ உடன் அல்ட்ரா விஷன், கூடுதல் ஸ்கிட் பிளேட்கள், பாறை கற்களில் இருந்து வாகனத்தை பாதுகாக்கும் விதமாக பக்கவாட்டில் படிக்கட்டுகள் மற்றும் 35-இன்ச்சில் சகதியில் சுழலக்கூடிய டயர்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன. ஹம்மர் இவி எலக்ட்ரிக் காரில் 3 நிலைகளில் அல்டியம் டிரைவ் சிஸ்டம் (Ultium Drive System) வழங்கப்படுகிறது.
இதன் உதவியுடன் அதிகப்பட்சமாக 482கிமீ தொலைவிற்கு ஹம்மர் இவி எலக்ட்ரிக் காரை சிங்கிள் சார்ஜில் ஓட்டி செல்லலாம். இந்த எலக்ட்ரிக் காரில் வழங்கப்படும் பேட்டரி பேக் ஆனது 20 பேட்டரிகளை ஒன்றுக்கு ஒன்று மேலே அடுக்கி வைக்கப்பட்டதாக உள்ளது. ஹம்மர் இவி எலக்ட்ரிக் வாகனத்தில் அதிகப்பட்சமாக 818 பிஎச்பி மற்றும் சுமார் 1591 என்.எம் டார்க் திறன் வரையியிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கனடாவிலேயே இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் விலை சற்று அதிகமாகும். அப்படிப்பட்ட வாகனத்தை அந்த நாட்டிலேயே ஒரு நிறுவனத்தின் மூலமாக இந்தியாவிற்கு கொண்டுவந்து, மத்திய அரசாங்கத்தின் இறக்குமதி வரிகள் எல்லாம் செலுத்தி பயன்படுத்த பல கோடிகளை செலவிட வேண்டியிருக்கும். அஜீஷை பற்றிய கூடுதல் விபரங்கள் நமக்கு கிடைக்க பெறவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், கேரளா போன்ற மலைப்பிரதேச பகுதிகளில் பயன்படுத்துவதற்கு ஹம்மர் இவி சரியான வாகனம் ஆகும்.


Click it and Unblock the Notifications








