பிவிசி பைப்புகளை கொண்டு உருவாக்கப்பட்ட ரிமோட் கன்ட்ரோல் படகு...அசத்திய இளைஞர்கள்!

பியூசி பழுப்புகளைக் கொண்டு ரிமோட்டால் இயங்கும் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பியூசி பழுப்பால் உருவான ரிமோட் கன்ட்ரோல் படகு... ஒட்டுமொத்த இந்தியாவையும் மெர்சலாக்கிய கேரள சேட்டன்கள்!

இந்தியாவில் வாகனங்களைக் கலப்பினம் செய்வது அண்மைக் காலங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு இந்திய மோட்டார் வாகனம் அனுமதியளிக்கவில்லை என்றாலும், பலர் இந் செயலில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில், வாகனத்தை கலப்பினம் செய்யும் செயலைக் கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பயனுள்ளதாக அமைத்துள்ளனர்.

பியூசி பழுப்பால் உருவான ரிமோட் கன்ட்ரோல் படகு... ஒட்டுமொத்த இந்தியாவையும் மெர்சலாக்கிய கேரள சேட்டன்கள்!

அவர்கள், ரிமோட்டால் இயக்கக்கூடிய படகை உருவாக்கியுள்ளனர். இயற்கைப் பேரிடரான வெள்ளம் போன்றவற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த படகு, முழுக்க முழுக்க பியூசி பழுப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

பியூசி பழுப்பால் உருவான ரிமோட் கன்ட்ரோல் படகு... ஒட்டுமொத்த இந்தியாவையும் மெர்சலாக்கிய கேரள சேட்டன்கள்!

அதாவது, படகின் அடிப்பகுதி முதல் கைப்பிடி வரை அனைத்தும் பியூசி பழுப்புகளைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் மேற்பரப்பில் மட்டும் பயணிகள் பயணம் செய்யும் விதமாக பிளைவுட் பொருத்தப்பட்டிருக்கின்றது.

இந்த படகின் தனிச் சிறப்பே ரிமோட்டால் இயங்கும் அம்சம்தான். உலகிலேயே இந்த அம்சத்திலும், மிகப்பெரிய தோற்றத்திலும் உருவாக்கப்பட்ட முதல் பியூசி ரிமோட் படகு இதுவே ஆகும்.

பியூசி பழுப்பால் உருவான ரிமோட் கன்ட்ரோல் படகு... ஒட்டுமொத்த இந்தியாவையும் மெர்சலாக்கிய கேரள சேட்டன்கள்!

ஆகையால், கேரள இளைஞர்களின் இந்த தயாரிப்பு ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. இந்த படகு பற்றிய வீடியோவை எம் 4 டெக் என்னும் யுடியூப் தளத்தின் வாயிலாக அந்த இளைஞர்கள் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், படகு கட்டமைப்பு செய்வதில் இருந்து எவ்வாறு தண்ணீரில் செயல்படும் என்பது வரையிலான அனைத்து தகவல்களும் அடங்கியிருக்கின்றன.

பியூசி பழுப்பால் உருவான ரிமோட் கன்ட்ரோல் படகு... ஒட்டுமொத்த இந்தியாவையும் மெர்சலாக்கிய கேரள சேட்டன்கள்!

படகு எத்தனை அடி நீளத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதுகுறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், நடுத்தர வயதுடை நபர்கள் இருவர் அல்லது மூன்று பேர் வரை அதில் அமர்ந்து பயணிக்க முடியும். அதேசமயம், சிறுவர்கள் அல்லது மெல்லிய தேகமுடையவர்களாக இருந்தால் நான்கு பேர் வரை பயணிக்கலாம் என கூறப்படுகின்றது.

பியூசி பழுப்பால் உருவான ரிமோட் கன்ட்ரோல் படகு... ஒட்டுமொத்த இந்தியாவையும் மெர்சலாக்கிய கேரள சேட்டன்கள்!

எடையைப் பொருத்தே அது நிர்ணயிக்கப்படும். ஆனால், படகின் இட வசதியுடன் ஒப்பிட்டு பார்த்தால் நாம் கூறியதைவிட மேலும் சிலரை ஏற்றலாம் என தோன்றும். ஆனால், அதற்கு படகின் மிதக்கும் திறன் ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை.

பியூசி பழுப்பால் உருவான ரிமோட் கன்ட்ரோல் படகு... ஒட்டுமொத்த இந்தியாவையும் மெர்சலாக்கிய கேரள சேட்டன்கள்!

இருப்பினும், வெள்ளம் மற்றும் ஆற்றில் தத்தளிப்பவர்களுக்கு இந்த பியூசி பழுப்பால் உருவாக்கப்பட்ட படகு நிச்சயம் உதவும். இந்த படகின் இயங்கும் திறனுக்காக மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மின் சக்தியை 12 வோல்ட் திறனுடைய பேட்டரி வழங்குகிறது. இதனை ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பியூசி பழுப்பால் உருவான ரிமோட் கன்ட்ரோல் படகு... ஒட்டுமொத்த இந்தியாவையும் மெர்சலாக்கிய கேரள சேட்டன்கள்!

ஆனால், இந்த பேட்டரியின் ரேஞ்ஜ் மற்றும் மோட்டாரின் திறன் ஆகியவை பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

படகின் அடிப்பகுதியில்தான் மின் மோட்டார் மற்றும் பேட்டரிகள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. வாட்டர் ப்ரூஃப் திறன் கொண்ட பாதுகாப்பு பெட்டகத்தில் அடைத்தவாறு பொருத்தப்பட்டிருக்கின்றன.

பியூசி பழுப்பால் உருவான ரிமோட் கன்ட்ரோல் படகு... ஒட்டுமொத்த இந்தியாவையும் மெர்சலாக்கிய கேரள சேட்டன்கள்!

ஆனால், படகைக் கன்ட்ரோல் செய்யும் டிவைஸ் மேற்பரப்பில்தான் நிறுவப்பட்டுள்ளது. ஆகையால், ரிமோட்டில் இருந்து கிடைக்கும் சமிக்ஞை பெற்று அது உடனடியாக செயல்படும். ரிமோட் அல்லாத நேரத்தில் இதனை எப்படி கையாள்வது மற்றும் மேனுவலாக கையாள்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை.

பியூசி பழுப்பால் உருவான ரிமோட் கன்ட்ரோல் படகு... ஒட்டுமொத்த இந்தியாவையும் மெர்சலாக்கிய கேரள சேட்டன்கள்!

இருப்பினும், இந்த புதுவிதமான படகை அதன் குழு தற்போது வரை சோதனையோட்டத்திலேயே பரிசோதித்து வருகின்றது. அதேசமயம், தற்போது வரை இந்த படகை வடிவமைத்தவர் மட்டுமே நீர் நிலைகளில் மிதக்கவிட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த படகினை வடிவமைக்க மட்டுமே இந்த குழு ஒரு மாத காலத்தைச் செலவழித்துள்ளது. எதிர்காலத்தில் இது கூடுதல் திறன் கொண்டதாக உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இந்த படகு இந்திய மக்கள் மக்கள் மத்தியில், குறிப்பாக நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டைப் பெற தவறவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Man Made A Remote Controlled Boat Using PVC Pipes Details, Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X