கிரேட் எஸ்கேப்... இந்த ஆண்டின் பெரிய அதிர்ஷ்டசாலி இவர்தான்... பிரம்மிப்பில் உறைய வைக்கும் வீடியோ...

அதிவேகத்தில் வந்த மினிவேன் மோதுவதில் இருந்து நூலிழையில் தப்பித்த அதிர்ஷ்டசாலியின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கிரேட் எஸ்கேப்... இந்த ஆண்டின் பெரிய அதிர்ஷ்டசாலி இவர்தான்... பிரம்மிப்பில் உறைய வைக்கும் வீடியோ...

உலகிலேயே அதிக ஆபத்துக்கள் நிறைந்த சாலைகள் என்றால், அது கண்டிப்பாக இந்திய சாலைகளாகதான் இருக்கும். இந்திய சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்தியாவை சேர்ந்த வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து விதிமுறைகள் எதையும் முறையாக கடைபிடிப்பதில்லை. இதனால் அதிகப்படியான சாலை விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன.

கிரேட் எஸ்கேப்... இந்த ஆண்டின் பெரிய அதிர்ஷ்டசாலி இவர்தான்... பிரம்மிப்பில் உறைய வைக்கும் வீடியோ...

இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி ஒரு ஆண்டுக்கு மட்டும் தோராயமாக 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதும், குடிபோதையில் வாகனங்களை இயக்குவதுமே இதற்கு மிக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. அதிவேகத்தில் வரும் வாகனங்கள் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்து விபத்துக்களுக்கு காரணமாகி விடுகின்றன.

கிரேட் எஸ்கேப்... இந்த ஆண்டின் பெரிய அதிர்ஷ்டசாலி இவர்தான்... பிரம்மிப்பில் உறைய வைக்கும் வீடியோ...

அப்படி நடைபெறும் சாலை விபத்துக்களின் காணொளிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி, வேகமாக பரவுவது வாடிக்கை. இந்த வகையில் தற்போது ஒரு காணொளி சமூக வலை தளங்களில் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. ஆனால் நீங்கள் நினைப்பதை போல், சாலை விபத்து எதுவும் அதிர்ஷ்டவசமாக நடைபெறவில்லை.

கிரேட் எஸ்கேப்... இந்த ஆண்டின் பெரிய அதிர்ஷ்டசாலி இவர்தான்... பிரம்மிப்பில் உறைய வைக்கும் வீடியோ...

அதற்கு மாறாக உச்சகட்ட வேகத்தில் வந்த வாகனத்தால் நிகழவிருந்த விபத்தில் இருந்து, பாதசாரி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அந்த காணொளிதான் தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. பாதசாரி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருப்பதை இந்த காணொளியில் காண முடிகிறது.

கிரேட் எஸ்கேப்... இந்த ஆண்டின் பெரிய அதிர்ஷ்டசாலி இவர்தான்... பிரம்மிப்பில் உறைய வைக்கும் வீடியோ...

அப்போது அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த மினிவேன் ஒன்று அவரை மோதுவது போல் வந்தது. அதிவேகம் காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை அந்த மினிவேன் இழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தாறுமாறாக வந்த அந்த மினிவேன், அதிர்ஷ்டவசமாக பாதசாரியின் மீது மோதவில்லை. அவருக்கு இடது புறத்தில் மினிவேன் சென்ற நிலையில், நூலிழையில் அவர் தப்பித்தார்.

கிரேட் எஸ்கேப்... இந்த ஆண்டின் பெரிய அதிர்ஷ்டசாலி இவர்தான்... பிரம்மிப்பில் உறைய வைக்கும் வீடியோ...

மினிவேன் அவரை கடந்து சென்ற பின்னரும் கூட, கொஞ்ச தூரத்திற்கு தாறுமாறாகவே ஓடி கொண்டிருந்தது. அதன்பின் டிரைவர் எப்படியோ மினிவேனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது போல் தெரிகிறது. காணொளியை பார்க்கும் நமக்கே பதற்றம் ஏற்படும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்படி என்றால், சம்பந்தப்பட்ட நபருக்கு எப்படி இருந்திருக்கும்?

கிரேட் எஸ்கேப்... இந்த ஆண்டின் பெரிய அதிர்ஷ்டசாலி இவர்தான்... பிரம்மிப்பில் உறைய வைக்கும் வீடியோ...

இதில் சம்பந்தப்பட்ட பாதசாரி பதற்றத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடிப்பதை இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இருக்கும் சவாரா என்னும் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த சம்பவம் அரங்கேறியதாக தெரிகிறது.

கிரேட் எஸ்கேப்... இந்த ஆண்டின் பெரிய அதிர்ஷ்டசாலி இவர்தான்... பிரம்மிப்பில் உறைய வைக்கும் வீடியோ...

சாலை விபத்தில் இருந்து தப்பித்த பாதசாரியின் பெயர் ஸ்ரீ குமார் எனவும், தமிழகம்தான் அவரது பூர்வீகம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கடந்த பல வருடங்களாக அவர் கேரளாவில்தான் வசித்து வருகிறார். அவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

அதிர்ச்சியில் இருந்து மீள முடியாததால், அன்றைய தினம் வேலைக்கு போகாமல் மீண்டும் வீட்டிற்கே திரும்பி வந்து விட்டார். ஸ்ரீ குமார் மிகுந்த அதிர்ஷ்டசாலி என சமூக வலை தளங்களில் தற்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala: Man Miraculously Escapes Being Hit By Speeding Minivan - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X