புது வீட்டை அலங்கரிப்பதற்காக கார் - பைக்குகளை காய்கறி-போல துண்டு துண்டா நறுக்கிய நபர்.. இப்படியும் ஒரு நபரா!

புதுசா வாங்கிய காரை அழகுப்படுத்தி பார்த்திருப்பீங்க, இங்கே ஓர் இளைஞர் புதிதாக கட்டிய வீட்டை அழகுப்படுத்த வாகனங்களையேப் பயன்படுத்தி இருக்கின்றார். குறிப்பாக, வாகனங்களை துண்டுகளாக்கி வீட்டை அழகாகக் காண்பிக்கும் விதமாக பயன்படுத்தி இருக்கின்றார். பொதுவாக வீடுகளை அழகாகக் காண்பிக்க மரம், செடி மற்றும் சிற்பங்களைக் கொண்டே அலங்கரிப்பர். அல்லது, வேறு ஏதேனும் கலைநயம் கொண்ட அலங்காரப் பொருட்களைக் கொண்டு அழகுப்படுத்துவர். ஆனால், இந்த இளைஞர் சற்றே வித்தியாசமாக பழைய வாகனங்களை வாங்கி, அவற்றை பிரத்யேகமாக தயார் செய்து தன்னுடைய வீட்டை அழகுப்படுத்தி இருக்கின்றார்.

மிக முக்கியமாக காரின் முன் பக்கத்தை வெட்டி எடுத்து அதில் இருக்கையை தயார் செய் இருக்கின்றனர். இந்த நிகழ்வு கேரளாவிலேயே அரங்கேறியிருக்கின்றது. இருக்கையாக தயார் செய்யப்பட்டு இருப்பது ஹிந்துஸ்தான் அம்பாசடர் (Hindustan Ambassador) காரை போல தெரிகின்றது. இதைமட்டுமல்ல மோட்டார்சைக்கிளையும் இதுபோலவே அவர் பயன்படுத்தி இருக்கின்றார்.

Kerala man upcycles parts for home decor

இருக்கை மற்றும் அழகு பொருட்களாக வாகனங்களையும், வாகனங்களின் பாகங்களையும் அவர் பயன்படுத்தவில்லை. லெட்டர் பாக்ஸாகவும் அவர் வாகனத்தின் பாகத்தைப் பயன்படுத்தி இருக்கின்றார். யமஹா ஆர்எக்ஸ் 100 (Yamaha RX100) பைக் மடாலின் ஃப்யூவல் டேங்கையே அவர் லெட்டர் பாக்ஸாக பயன்படுத்தி இருக்கின்றார்.

தொடர்ந்து, பழைய பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஸ்கூட்டரின் தலை பகுதியை வீட்டின் சுவர் மேல் பக்கத்தில் பயன்படுத்தி இருக்கின்றார். அன்றைய கால வீடுகளின் வாயில் பகுதியில் மான் தலை அல்லது சிங்கம் தலை போன்றவற்றை பயன்படுத்தி இருப்பர். இதைப் போலவே டூ-வீலரின் முன் பக்கத்தை இவர் பயன்படுத்தி இருக்கின்றார்.

இதற்கு அடுத்தபடியாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரின் பிரஷ்ஷர் பிளேட்டை கடிகாரமாகுவம், கண்ணாடி டேபிளை தாங்கக் கூடியதாக ஆர்எக்ஸ் 100 பைக்கின் எஞ்சினையும் அவர் பயன்படுத்தி இருக்கின்றார். தன்னுடைய மற்றவர்களின் வீடுகளில் இருந்து தனித்துவமான காண்பிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே அவர் இந்த மாதிரியான வேலையைப் பார்த்திருக்கின்றார்.

இவற்றைத் தொடர்ந்து, வீட்டின் கதவுகளின் கை பிடிகளில் பழைய டூல்ஸ்களை அவர் பயன்படுத்தி இருக்கின்றார். இதேபோல், பெட்ரூம் மற்றும் லிவிங் ரூம் உள்ளிட்டவற்றிலும் வாகனங்களின் பாகம் மற்றும் டூல்ஸ் போன்றவற்றைக் கொண்டு அவர் அழகுப்படுத்தி இருக்கின்றார். இவை அனைத்தையும் செய்த அந்த இளைஞரின் பெயர் விஜேஷ் என கூறப்படுகின்றது.

Car and bike upcycles for home decor

இவருக்கு தனக்கு சொந்தமான மற்றுமொரு பழைய பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை லிவிங் ஏரியாவில் அழகிற்கா நிறுத்தி வைத்திருக்கின்றார். பயன்படுத்தப்பட்டு இருக்கும் பாகங்களுக்கு சொந்தக்கார வாகனங்கள் அனைத்தும் பதிவு காலாவதியானவை என கூறப்படுகின்றது. இதனாலேயே அவற்றிற்கு மறு அவதாரம் விதமாக வீட்டு அழகு பொருட்களாக விஜேஷ் பயன்படுத்தி இருக்கின்றார்.

இந்தியாவில் இதுமாதிரியான விநோத சம்பவங்கள் இதற்கு முன்னதாகவும் அரங்கேறி இருக்கின்றன. குறிப்பாக, சில பணகாரர்கள் தங்களின் முதல் அல்லது பிரியமான கார்களை லிவிங் ஹாலை அலங்கரிக்கும் விதமாக அவர்கள் பயன்படுத்தி இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இதுமட்டுமில்லைங்க, சிலர் தங்களுக்கு பிடித்தமான வாகனங்களின் உருவத்தில் வாட்டர் டேங்க்கை வீட்டின் மொட்ட மாடியில் உருவாக்கி இருப்பதையும் நாம் முன்னதாக பார்த்திருக்கின்றோம். அந்த வரிசையில் கேரளாவில் அரங்கேறி இருக்கும் இந்த நிகழ்வு முற்றிலும் தனித்துவமானது ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களில் குட்டி வீடு, பொம்மை போன்ற பொருட்களை வைத்து அழகுப்படுத்தி இருப்பதையே நாம் இதற்கு முன்னதாக பார்த்திருப்போம். ஆனால், இதுவே வாகனங்களை துண்டு துண்டுகளாகப் பயன்படுத்தி வீட்டை அலங்கரித்திருப்பது முதல் முறையாகும். ஆகையால், இந்த வீடு முற்றிலும் தனித்துவமான ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, January 20, 2025, 23:53 [IST]
English summary
Kerala man transforms his newly built home with innovative decor made from upcycled car bike parts
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X