யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

நள்ளிரவு நேரத்தில், வெள்ளை நிற ஆடி ஏ4 காரில் வந்த எம்எல்ஏ, டோல்கேட் கட்டணம் செலுத்த மறுத்து, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, தடுப்பு கம்பிகளை உடைத்து எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Arun

நள்ளிரவு நேரத்தில், வெள்ளை நிற ஆடி ஏ4 காரில் வந்த எம்எல்ஏ, டோல்கேட் கட்டணம் செலுத்த மறுத்து, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, தடுப்பு கம்பிகளை உடைத்து எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

கேரள மாநிலத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பி.சி.ஜார்ஜ். இவர் அவ்வப்போது ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம். இம்முறை டோல்கேட் ஒன்றின் தடுப்பு கம்பிகளை உடைத்து (டோல் பேரியர்) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பி.சி.ஜார்ஜ்.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சூர் அருகே உள்ள பல்லியகரா டோல் கேட்டில் இந்த பரபரப்பு சம்பவம் நேற்று இரவு (17ம் தேதி) நடைபெற்றுள்ளது. நேற்று இரவு 11.30 மணியளவில் எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் தனது ஆதரவாளர்களுடன், பல்லியகரா டோல் கேட்டிற்கு வந்துள்ளார்.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

வெள்ளை நிற ஆடி ஏ4 காரில் எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தனர். அப்போது டோல்கேட்டை கடந்து செல்ல வேண்டுமென்றால், பணம் செலுத்த வேண்டும் என எம்எல்ஏ பி.சி.ஜார்ஜிடம், டோல்கேட் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

ஆனால் எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் பணம் செலுத்த மறுத்தார். அத்துடன் மிக கடுமையான வார்த்தைகளால், டோல் கேட் ஊழியர்களை திட்ட தொடங்கினார். அதன்பின்பும் ஆத்திரம் தீராத எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ், தனது காரில் இருந்து இறங்கினார்.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

பின்னர் நேராக சென்று, டோல்கேட் தடுப்பு கம்பியை உடைத்து, தனது கார் செல்ல வழி ஏற்படுத்தினார். அப்போது எம்எல்ஏ பி.சி.ஜார்ஜின் ஆதரவாளர்களும் அவருடன் சேர்ந்து கொண்டு, டோல்கேட் தடுப்பு கம்பியை உடைத்து தள்ளினர்.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

நடந்த சம்பவங்களால் டோல்கேட் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தங்கள் கேபினை விட்டு உடனடியாக வெளியே வந்தனர். ஆனால் எம்எல்ஏவை நோக்கி அவர்கள் எதுவும் சொல்லவில்லை. பின்னர் காருக்கு திரும்பிய எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ், அங்கிருந்து சென்று விட்டார்.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், டோல்கேட் தடுப்பு கம்பியை உடைக்கும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாக பரவி வருகின்றன. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பணம் செலுத்த முடியாது என எம்எல்ஏ மறுத்தும் கூட டோல்கேட் ஊழியர்கள் விடவில்லை. பணம் கட்டிவிட்டுதான் செல்ல வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி கொண்டே இருந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், எம்எல்ஏ எல்லை மீறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் பணம் செலுத்தி விட்டு செல்வதற்காக சில சமயங்களில், குறிப்பாக வார விடுமுறை அல்லது பண்டிகை கால விடுமுறை நிறைவடையும் தருணங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

அந்த சமயங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். அதிலும் முக்கிய நகரங்களை ஒட்டியுள்ள டோல்கேட்களில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதன் காரணமாக நெடுஞ்சாலைகள் வழியாக பயணம் செய்பவர்களுக்கு பெரும் காலதாமதம் ஏற்படுகிறது.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

குறைவான நேரத்தில் விரைவாக பயணிக்க வேண்டும் என்பதற்காகதான், மக்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அப்படி மிச்சம் பிடிக்கப்பட்ட நேரத்தில் பெரும்பகுதியை, டோல்கேட்டில் பணம் செலுத்துவதற்காக காத்திருப்பதன் மூலமாக மக்கள் இழந்து விடுகின்றனர்.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

நெடுஞ்சாலைகளின் தரத்தை பராமரிப்பது, பயணம் செல்லும் வழியில் கழிப்பிடம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வசதிகளை வழங்குவது போன்றவற்றுக்காகதான் ஒப்பந்ததாரர்களால் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

ஆனால் இந்தியாவில் உள்ள பல்வேறு டோல்கேட்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல், மிக அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், டோல்கேட்களுக்கு எதிரான மனநிலைதான் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

எனவே டோல்கேட்களை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவ்வப்போது நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று கொண்டுதான் உள்ளன. எனினும் இந்திய சாலைகளில் இருந்து டோல்கேட்கள் அகற்றப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தெரிவித்தார்.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

பொதுமக்கள் அனைவரும் டோல் டேக்ஸ் செலுத்த வேண்டும் என்றாலும், ஒரு சிலருக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தலைவர், இந்திய பிரதமர், இந்தியாவின் தலைமை நீதிபதி மற்றும் சில உயரதிகாரிகள் உள்ளிட்டோர் எவ்வித தடையும் இன்றி டோல்கேட்டை கடக்கலாம்.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

ஆனால் விலக்கு பெறும் பட்டியலில் இடம்பெறாத சில அரசியல்வாதிகள் மற்றும் அப்படிப்பட்ட அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர்கள், டோல்கேட்களில் பணம் செலுத்த மறுத்து, ஊழியர்களுடன் மோதல் போக்கில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டேதான் உள்ளன.

யாரிடம் கேட்கிறாய் வரி? கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..

இதனிடையே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய கார்களுக்கும் பாஸ்ட் டேக் கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலமாக அந்த கார்கள், டோல்கேட்களில் காத்திருக்கும் நேரம் கணிசமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Times Now

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala MLA Breaks Toll barrier along with His Aides. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X