கேரள மாடல் ரேஷ்மி நாயருக்கு கணவர் அளித்த மிகப்பெரிய பரிசு!! திருமண நாளை மறக்கவே மாட்டார்...

ஆட்டோமொபைல் வாகனங்களுடன் மிகவும் நெருக்கம் காட்டும் மாநிலத்தவர்கள் என்றால், அது கேரளாவை சேர்ந்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைக்குகளை மாடிஃபை செய்து பயன்படுத்துவது, பழமையான கார்களை ரீ-ஸ்டோர் செய்து பயன்படுத்துவது என மலையாளிகள் பொதுவாகவே தங்களை வாகனங்கள் விஷயத்தில் மற்றவர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்டவே விரும்புவர்.

அதிலிலும், வசதி படைத்தவர்கள் தங்களது கேரேஜில் ஏற்கனவே ஏகப்பட்ட சொகுசு கார்கள் இருப்பினும் புதியது புதியதாக மேலும் சில லக்சரி கார்களை வாங்கி போடுவர். அப்படித்தான், கேரளாவில் பெண்கள் உரிமை ஆர்வலரும், ஆபாச படங்கள் மூலமாக பிரபலமானவருமான ரேஷ்மி ஆர் நாயர் புதியதாக மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை வாங்கியுள்ளார். முற்றிலும் பளபளக்கும் கருப்பு நிறத்தில் ஸ்கார்பியோ என் காரை திருமண நாளை முன்னிட்டு கணவருடன் டெலிவிரி எடுக்கும் படங்களை ரேஷ்மி நாயர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கேரள மாடல் ராஷ்மி நாயருக்கு கணவர் அளித்த மிகப்பெரிய பரிசு!!

பொதுவாகவே, ரேஷ்மியின் சமூக வலைத்தள பதிவுகளுக்கு லைக்ஸ் & கமெண்ட்ஸ் அள்ளும். அதேபோல இந்த ஃபேஸ்புக் பதிவிற்கும் நெட்டிசன்கள் தங்களது லைக்ஸையும், கமெண்ட்ஸையும் அள்ளி தெறிக்கவிட்டுள்ளனர். ஆபாச படங்களில் நடித்தாலும் வசதிமிக்கவராக விளங்கும் ரேஷ்மி நாயரிடம் ஏற்கனவே மஹிந்திரா நிறுவனத்தின் இரு எக்ஸ்யூவி500 எஸ்யூவி கார்கள் உள்ளன. இவை இரண்ரையும் பல்வேறு ஆக்ஸஸரீகள் மூலம் கஸ்டமைஸ்ட் செய்து ரேஷ்மி நாயர் பயன்படுத்தி வருகிறார்.

கேரள மாடல் ரேஷ்மி நாயருக்கு கணவர் அளித்த மிகப்பெரிய பரிசு!!

இவை மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ கார் ஒன்றும் ரேஷ்மியின் குடும்பத்தில் உள்ளது. இவற்றுடன் தற்போது புதியதாக ஸ்கார்பியோ-என் காரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்கார்பியோ-என் காரை பொறுத்தவரையில், இது மஹிந்திரா நிறுவனத்தின் புத்தம் புதிய காராகும். பிரபலமான ஸ்கார்பியோ கார்கள் வரிசையில் புதிய தலைமுறை மாடலாக கடந்த 2022 ஜூன் மாத இறுதியில் ஸ்கார்பியோ-என் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. தோற்றத்தை பொறுத்தவரையில், ஸ்கார்பியோ கார்களுக்கே உண்டான பெட்டகம் வடிவிலான தோற்றம் புதிய ஸ்கார்பியோ-என் காரில் முற்றிலுமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிராண்டின் புதிய லோகோவையும் ஸ்கார்பியோ-என் காரில் மஹிந்திரா பொருத்துகிறது. பட்டாம்பூச்சி டிசைனிலான இந்த புதிய லோகோ ஆனது முதல்முறையாக எக்ஸ்யூவி700 காரில் அறிமுகப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. ஸ்கார்பியோ-என் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11.99 லட்சத்தில் இருந்து ரூ.23.90 லட்சம் வரையில் உள்ளன. இது வரும் மாதங்களில் அதிகரிக்கப்படலாம். மஹிந்திராவின் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரை 6 அல்லது 7 இருக்கை தேர்வுகளில் வாங்க முடியும்.

இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8எல் என்பன ஸ்கார்பியோ-என் காரின் வேரியண்ட்களாகும். இதில் எந்த வேரியண்ட்டில், எந்த இருக்கை தேர்வில் ரேஷ்மி நாயர் டெலிவிரி பெற்றுள்ளார் என்பதை உறுதியாக கூற இயவில்லை. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ஸ்கார்பியோ-என் காரை ரூ.21,000 என்ற டோக்கன் தொகையில் முன்பதிவு செய்யலாம். இந்த காரின் நீளம் ஆனது 4,662மிமீ, அகலம் 1,917மிமீ மற்றும் உயரம் 1,857மிமீ ஆகும்.

முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது 2,750மிமீ ஆக உள்ளது. எரிபொருள் நிரப்பும் டேங்கின் கொள்ளளவு ஆனது 57 லிட்டர்களாக உள்ளது. டஸலிங் சில்வர், அடர் ஃபோரெஸ்ட், கிராண்ட் கன்யான், எவரெஸ்ட் வெள்ளை, நபோலி கருப்பு, சிவப்பு ரேஞ் மற்றும் ராயல் கோல்டு என்ற நிறங்களில் ஒன்றில் ஸ்கார்பியோ-என் காரை வாங்கலாம். இந்த எஸ்யூவி காரை மொத்தம் 2 விதமான என்ஜின் தேர்வுகளில் மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது.

2.0 லிட்டர் எம் ஸ்டாலியோன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம் ஹாவ்க் டீசல் என்பன அந்த இரு என்ஜின் தேர்வுகளாகும். இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 197 எச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும், டீசல் என்ஜின் 173 எச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாகவும் உள்ளன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என்ற 2 கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Article Published On: Thursday, December 22, 2022, 16:51 [IST]
English summary
Kerala model reshmi nair buys new mahindra scorpio n car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+