30 லட்ச ரூபாய் காருடன் நிற்கும் இந்த நடிகை யாரென்று தெரிகிறதா? இந்த திருமண நாளை மறக்கவே மாட்டார்!!
ரேஷ்மி ஆர் நாயர் (Resmi R Nair), சிலருக்கு இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போன்று இருக்கலாம். கேரளாவை சேர்ந்தவரான இவர் தனது ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக இந்திய அளவில் பிரபலமானவராக விளங்குகிறார். அதேநேரம், அவ்வப்போது புது, புது கார்களை வாங்குவதையும் ரேஷ்மி நாயர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த வகையில், புதியதாக ஒரு டொயோட்டா (Toyota) வாகனத்தை இவர் வாங்கியுள்ளார். ரேஷ்மி ஆர் நாயரை பற்றியும், அவர் புதியதாக வாங்கியுள்ள டொயோட்டா வாகனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த காலங்களில் இருந்து ஆபாச காட்சிகள் மூலமாக மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றவர்கள் பலர் உள்ளனர். அத்தகையவர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டுமென்றால், சொல்லிக் கொண்டே போகலாம். சமீப காலமாக அந்த வரிசையில் இணைந்திருப்பவர் தான், ரேஷ்மி ஆர் நாயர் ஆவார்.

கேரளாவில் பெண்கள் உரிமை ஆர்வலராக ஆரம்பித்த ரேஷ்மி நாயரின் வாழ்க்கை தற்போது ஆபாச காட்சிகளில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இதனாலேயே இவரது சமூக வலைத்தள பதிவுகளுக்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிவது வழக்கம். அந்த வகையில், டொயோட்டா கார் ஒன்றை டெலிவிரி பெறுவது தொடர்பான இவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கும் லைக்குகள் குவிந்து வருகின்றன.
இந்த பதிவுகளில், டொயோட்டா ஷோரூமில் கணவர் ராகுல் பசுபாலன் உடன் ரேஷ்மி நாயர் புதியதாக ஹிலுக்ஸ் (Hilux) என்கிற பிக்-அப் டிரக் வாகனம் ஒன்றை டெலிவிரி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு இன்ஸ்டா பதிவில், ரேஷ்மி நாயர் ஷோரூமுக்குள் செல்வதில் இருந்து, டெலிவிரிக்காக கணவருடன் காத்திருப்பது, பின்னர் புத்தம் புதிய ஹிலுக்ஸ் வாகனத்தை டெலிவிரி பெறுவது என அனைத்து காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

டெலிவிரி பெற்ற பின் வாகனத்தை ஷோரூமிற்குள் இருந்து ரேஷ்மி நாயர் தான் வெளியே கொண்டுவந்தார். ஆனால், அதன்பின் வாகனத்தை அவரது கணவர் ராகுல் பசுபாலன் ஓட்டி செல்லும் காட்சிகளை வீடியோவில் பார்க்க முடிகிறது. சிவப்பு நிறத்திலான டொயோட்டா ஹிலுக்ஸ் பிக்-அப் டிரக் வாகனத்தை இந்த தம்பதியினர் வாங்கியுள்ளனர். தற்போது இந்த வாகனத்தை இவர்கள் வாங்குவதற்கு காரணம், இன்று (டிசம்பர் 3) இவர்களது திருமண நாள் ஆகும்.
ஒவ்வொரு வருடமும் திருமண நாள் அன்று எதாவது ஒரு புதிய பொருளை வாங்குவதை ரேஷ்மி நாயர்- ராகுல் பசுபாலன் தம்பதியினர் வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டில் இதேபோன்று திருமண நாளை முன்னிட்டு இவர்கள் புத்தம் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை வாங்கி இருந்தனர். அந்த மஹிந்திரா காரை வாங்குவதற்கு முன்னரே இந்த தம்பதியிடம் ஏற்கனவே இரு மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார்கள் இருந்தன.
அந்த இரு எக்ஸ்யூவி500 கார்களையும் பல்வேறு ஆக்ஸஸரீகள் உடன் கஸ்டமைஸ் செய்து இந்த தம்பதி பயன்படுத்தி வருவதாக அப்போது நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் தெரிவித்து இருந்தோம். இந்த கார்கள் மட்டுமின்றி, சிவப்பு நிறத்திலான பிஎம்டபிள்யூ கார் ஒன்றும் இவர்களிடம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது டொயோட்டா ஹிலுக்ஸ் பிக்-அப் டிரக் வாகனமும் இவர்களது கேரேஜில் இணைந்துள்ளது.
ஹிலுக்ஸ் பிக்-அப் டிரக் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.30.40 லட்சத்தில் இருந்து ரூ.37.90 லட்சம் வரையில் உள்ளன. ஸ்டாண்டர்ட், ஹை என 2 விதமான வேரியண்ட்களில் ஹிலுக்ஸ் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஹை வேரியண்ட் மட்டுமே ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. ரேஷ்மி நாயர் வாங்கியிருக்கும் எமோஷ்னல் சிவப்பு நிறத்தில் மட்டுமின்றி, கிரே மெட்டாலிக், சில்வர் மெட்டாலிக், வெள்ளை பேர்ல் க்ரிஸ்டல் ஷைன் கலர் ஆப்ஷன்களிலும் ஹிலுக்ஸ் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறப்பட்டுள்ளவை டொயோட்டா ஹிலுக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும். இவ்வளவு விலைமிக்க டொயோட்டா வாகனத்தை தான் ரேஷ்மி ஆர் நாயர் வாங்கியுள்ளார். கேரளா போன்ற ஏற்ற, இறக்கங்களை அதிகம் கொண்ட மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு ஹிலுக்ஸ் போன்ற பிக்-அப் டிரக் வாகனங்கள் மிகவும் ஏற்றவை ஆகும்.


Click it and Unblock the Notifications








