அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க, அதிநவீன உபகரணங்களை மோட்டார் வாகன துறை அதிகாரிகள் களமிறக்கியுள்ளனர்.

அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க

போக்குவரத்து விதிமுறைகளை மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்துவதில், கேரள மாநிலத்தின் மோட்டார் வாகன துறை புகழ்பெற்று விளங்குகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது, கேரளாவின் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கும்.

அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க

இந்த வரிசையில், விதிகளை இன்னும் சிறப்பாக அமல்படுத்துவதற்காக, கேரள மோட்டார் வாகன துறை தற்போது புதிய உபகரணங்களை வாங்கியுள்ளது. ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் ஹாரன் ஆகியவற்றின் ஒலி அளவை கணக்கிடுவது உள்ளிட்ட பணிகளுக்காக, இந்த உபகரணங்களை வாங்கவுள்ளதாக கடந்த ஆண்டே மோட்டார் வாகன துறை அறிவித்திருந்தது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க

இதன்படி தற்போது புதிய உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. மோட்டார் வாகன துறை அதிகாரிகளின் அலுவல் ரீதியிலான வாகனங்களில் தற்போது இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது புதிதாக வாங்கப்பட்டுள்ள உபகரணங்களை, மோட்டார் வாகன துறை அதிகாரி ஒருவர் பத்திரிக்கையாளர்களிடம் காட்டி செயல் விளக்கம் அளித்தார்.

அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க

அந்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது. அவர் முதலில் காட்டிய உபகரணம் லக்ஸ் மீட்டர் (Lux Meter) ஆகும். இது ஒளியின் தீவிரத்தை அளவிடும் கருவியாகும். இந்தியாவில் ஆஃப்டர் மார்க்கெட் ஹெட்லேம்ப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வாகனத்தில் இருக்கும் ஹெட்லேம்ப் ஹோல்டர்களில் அதிதீவிரமான விளக்குகளை பலர் பொருத்தி கொள்கின்றனர்.

அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க

ஆனால் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிக பிரகாசத்தை விளக்கு கொண்டுள்ளதா? என்பதை கண்டறிய லக்ஸ் மீட்டர்கள் பயன்படும். அதிக பிரகாசம் கொண்ட விளக்குகள், எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை கூச செய்து, விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க

மோட்டார் வாகன துறை அதிகாரி காட்டிய இரண்டாவது உபகரணம் சவுண்டு மீட்டர் (Sound Meter) ஆகும். இது ஒலியின் அளவை, டெசிபல்களில் கணக்கிடும். எனவே ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பொருத்தி கொண்டு ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் நபர்களுக்கு, இந்த உபகரணத்தில் வரும் அளவீட்டை அடிப்படையாக வைத்து, அதிகாரிகளால் அபராதம் விதிக்க முடியும்.

அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க

அதிக சப்தம் வர வேண்டும் என்பதற்காக, ஒரு சிலர் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை வாகனங்களில் பொருத்தி கொள்கின்றனர். இன்னும் சிலர் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் சைலென்சரிலேயே, அதிக சப்தம் வரும் வகையில், மாற்றங்களை செய்து கொள்கின்றனர். அதனையும் இந்த உபகரணம் எளிதாகவே கண்டுபிடித்து விடும்.

அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க

இதே உபகரணம் மூலமாக ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் ஹாரன்கள் எழுப்பும் ஒலி அளவையும் கணக்கிட முடியும். சட்டத்தால் தடை விதிக்கப்பட்ட ஏர் ஹாரன்கள் அல்லது பிரஷர் ஹாரன்களை பலர் விதிமுறையை மீறி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இன்னும் ஒரு சில உபகரணங்களையும் மோட்டார் வாகன துறை தற்போது புதிதாக வாங்கியுள்ளது.

அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க

அதிநவீன ஆல்கஹால் மீட்டரை அந்த அதிகாரி காட்டுவதையும், இந்த காணொளியில் நாம் காண முடியும். விதிமுறையை மீறிய நபரை, பைப் வழியாக சுவாசிக்க வைத்து சோதனை நடைபெறும்போது, அவரின் புகைப்படத்தையும் இந்த உபகரணம் எடுத்து விடும். இந்த உபகரணங்களின் வருகையால், வரும் மாதங்களில் வழங்கப்படும் அபராத ரசீதுகளின் எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது.

ஆனால் நாளடைவில் விதிமுறை மீறல்கள் படிப்படியாக கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் நம்புகின்றனர். இந்தியாவில் இந்த அளவிற்கு அதிநவீன இயந்திரங்களை கொண்டு வாகன தணிக்கையை நடத்தும் அரசு அமைப்பு அனேகமாக கேரளாவின் மோட்டார் வாகன துறையாகதான் இருக்கும். வேறு எந்த அரசு அமைப்பிடமாவது, இந்த அளவிற்கு அதிநவீன உபகரணங்கள் இருக்குமா? என்பது சந்தேகமே.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Motor Vehicle Department Gets High-tech Devices To Check & Book Violators. Read in Tamil
Story first published: Tuesday, October 20, 2020, 20:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X