ரூ.4.2 கோடியில் காரை வாங்கிட்டு சாதாரணமா நிற்கும் இவர் இவ்வளவு பெரிய ஆளா!! மாநிலத்தில் யாரிடமும் இல்லாத கார்..

கேரளாவின் முதல் ஃபெராரி ரோமா (Ferrari Roma) காரை சிந்தைட் இன்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர் வாங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக இருப்பவர் யார்? அவர் வாங்கியுள்ள ஃபெராரி கார் எந்த அளவிற்கு சிறப்பானது என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கேரளாவில் பெரும்பாலான மக்கள் ஆட்டோமொபைல் பிரியர்களாக உள்ளனர். அதாவது, வாகனங்களை ஓட்டுவதில் கேரள மக்கள் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல், அரிதான பழமையான கார் & பைக்குகளையும் கேரளாவில் இப்போதும் பரவலாக பார்க்க முடியும். அத்துடன், புதுமையான வாகனங்களை வாங்குவதையும் கேரள மக்கள் விரும்புகின்றனர்.

viju jacob buys ferrari roma

இதன் காரணமாகவே, அளவில் சிறியதான மினி கார்களை கேரளாவில் அதிகளவில் காண முடியும். கேரள சினிமா நட்சத்திரங்களிடம் ஏகப்பட்ட சொகுசு கார்களும், அதிவேகமான ஸ்போர்ட்ஸ் கார்களும் உள்ளன. ஆனால், ஃபெராரியின் ரோமா காரை கேரளாவில் முதல் கஸ்டமர் இப்போதுதான் வாங்கியுள்ளார். அந்த கஸ்டமர் வேறு யாரும் இல்லை, பிரபல சிந்தைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார்.

சிந்தைட் இன்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனராக இருக்கும் விஜு ஜேக்கப் ரூ.4.2 கோடி மதிப்பில் ஃபெராரி ரோமா காரை வாங்கியுள்ளார். இந்த ஃபெராரி காரை கேரளாவில் வாங்கிய முதல் கஸ்டமர் விஜு ஜேக்கப் என கூறப்படுகிறது. சில்வர் நிறத்திலான ஃபெராரி ரோமா காரை இவர் தனது குடும்பத்துடன் சென்று டெலிவிரி எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

கேரளாவில் கொலஞ்சேரி என்கிற கிராமத்தில் பிறந்து இன்று ஃபெராரி காரை வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ள விஜு ஜேக்கப்பின் பயணம் 1972ஆம் ஆண்டு வெறும் 10 பணியாளர்களுடன் துவங்கியது. ஆனால், இன்றோ சுமார் ரூ.3,100 கோடிக்கு சொந்தக்காரராக விஜு ஜேக்கப் உள்ளார். உணவு பொருட்கள், மருத்துவம், ரியல் எஸ்டேட் மற்றும் பவர் ஜென்ரேஷன் என இவர் கால்பதிக்காத துறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தகைய கேரள மல்டி மில்லியனர் வாங்கியிருக்கும் ஃபெராரி ரோமா கார் இந்தியாவில் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. மெர்சிடிஸ்-மேபக், ஜி-வேகன், பிஎம்டபிள்யூ கார்கள் என இந்த ஃபெராரி காருக்கு விற்பனையில் போட்டியாக சில கார்கள் இருந்தாலும், ஃபெராரி ரோமா மட்டும் தனித்து தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த ஃபெராரி காரின் தோற்றம் ஆகும்.

viju jacob buys ferrari roma

ஃபெராரி ரோமா ஆனது 3 கதவுகளை மட்டுமே கொண்ட கூபே ரக கார் ஆகும். வேகமாக செல்வதற்காக இந்த காரில் லோ-ட்ராக் ரியர் ஸ்பாய்லர் வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப அடாப்டிவ் ஆகக்கூடிய எல்இடி ஹெட்லேம்ப்களை எல்இடி டி.ஆர்.எல்-கள் உடன் பெறும் இந்த ஃபெராரி காரின் உள்ளே 16 இன்ச்சில் வளைவான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது.

ஃபெராரி ரோமா காரில் 3.9 லிட்டர் டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 612 பிஎச்பி மற்றும் 760 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்படுகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.4 வினாடிகளிலும், 200kmph வேகத்தை 9.3 வினாடிகளிலும் எட்டிவிடக்கூடிய ஃபெராரி ரோமா காரின் டாப்-ஸ்பீடு 320kmph ஆகும்.

viju jacob buys ferrari roma

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபெராரி கார்கள் என்றாலே நம் மனதில் சிவப்பு நிறம் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், ஃபெராரி ரோமா காரை சில்வர் நிறத்தில் விஜு ஜேக்கப் வாங்கியிருப்பது, கார்கள் மீதான அவரது ஆர்வத்தை காட்டுகிறது. மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ கார்கள் இருப்பினும், ஃபெராரி காரை வாங்குவது நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். ஆனால், விஜு ஜேக்கப் போன்ற செல்வந்தர்கள் அந்த கனவை எளிதாக நிஜமாக்குகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, May 20, 2024, 22:01 [IST]
English summary
Kerala multi millionaire viju jacob buys ferrari roma check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X