ஓடோமீட்டரில் கை வைத்து சிக்கிக்கொண்ட கேரள கார் டீலர்!! அதிரடியாக ரூ.1 லட்சம் அபராதமாக விதிப்பு!

மற்ற மாநிலங்களை காட்டிலும் மோட்டார் வாகன சட்டங்களை கடைப்பிடிப்பதில் கேரளா எப்போதுமே தீவிரமாக இருக்கும் என்பது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். இதற்கு உதாரணமாக, சட்டத்திற்கு புறம்பாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கேரள போலீஸார் எடுத்த சில நடவடிக்கைகளை இதற்கு முன் பார்த்துள்ளோம்.

ஓடோமீட்டரில் கை வைத்து சிக்கிக்கொண்ட கேரள கார் டீலர்!! அதிரடியாக ரூ.1 லட்சம் அபராதமாக விதிப்பு!

அதேபோல் சாலையில் தாறுமாறாக வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதிலும் கேரள போலீஸார் மும்முரமாக இருக்கக்கூடியவர்கள். வாகன ஓட்டிகளை ஒழுங்குப்படுத்தும் அதேசமயம் கார் & பைக் டீலர்களுக்கும் அரசாங்கங்கள் கடிவாளம் இட்டு வருகின்றன.

இந்த வகையில், ஆர்டிஓ அலுவலத்தில் பதிவு செய்யப்படாத காரின் ஓடோமீட்டர் கேபிளில் குளறுபடி செய்த டீலர்ஷிப் மையத்திற்கு மோட்டார் வாகன துறை அதிரடியாக ரூ.1 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது. இது தொடர்பாக மாத்ரூபூமி நியூஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் கீழே காண்கிறீர்கள்.

Image Courtesy: Mathrubhumi News

இந்த வீடியோவின் மூலம் இந்த குறிப்பிட்ட கார் வட்டார வாகன பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படாதது என்பது உறுதியாகிறது. டீலர்ஷிப்பின் அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த காரினை டீலர்கள் கோழிக்கோடில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள வேறொரு டீலர்ஷிப் மையத்திற்கு மாற்ற முயற்சி செய்த போது MVD எனப்படும் மோட்டார் வாகன துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

ஓடோமீட்டரில் கை வைத்து சிக்கிக்கொண்ட கேரள கார் டீலர்!! அதிரடியாக ரூ.1 லட்சம் அபராதமாக விதிப்பு!

மாருதி எர்டிகா எம்பிவி காரான இதில் வர்த்தக பதிவு சான்றிதழை ஓட்டுனர் வைத்திருக்கவில்லை என மோட்டார் வாகன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு டீலர்ஷிப் மையத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு காரை மாற்றும்போது இத்தகைய வர்த்தக பதிவு சான்றிதழ் அவசியமானதாகும்.

இந்த விசாரணைகளுக்கு பின்பே, காரின் ஓடோ மீட்டரை டீலர்கள் மாற்றியமைத்துள்ளனர் என்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த குற்றங்கள் எல்லாம் சேர்த்து மோட்டார் வாகன சட்ட பிரிவு 182ஏ-இன் கீழ் சம்பந்தப்பட்ட டீலருக்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஓடோமீட்டரில் கை வைத்து சிக்கிக்கொண்ட கேரள கார் டீலர்!! அதிரடியாக ரூ.1 லட்சம் அபராதமாக விதிப்பு!

மோட்டார் வாகன சட்டத்தில் இந்த பிரிவு டீலர்களின் விதிமீறல்களை களையெடுப்பதற்கு நடைமுறையில் உள்ளது. அதாவது, தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து வாகனத்தை பெற்றுவருவதில் இருந்து அதனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யும் வரையில் வாகனத்தின் கட்டமைப்பையோ அல்லது பாகங்களையோ டீலர்கள் மாற்றியமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

ஓடோமீட்டரில் கை வைத்து சிக்கிக்கொண்ட கேரள கார் டீலர்!! அதிரடியாக ரூ.1 லட்சம் அபராதமாக விதிப்பு!

இதன்படியே இந்த சம்பவத்தில் டீலர்ஷிப்பின் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்தும் வரையில் இந்த குறிப்பிட்ட எர்டிகா கார் மோட்டார் வாகன துறை அதிகாரிகளிம் கட்டுப்பாட்டில் இருக்கும். கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கும், தலைநகர் திருவனந்தபுரத்திற்கும் இடையே கிட்டத்தட்ட 370கிமீ தொலைவுள்ளது.

இந்த 370கிமீ தூரத்தை கணக்கில் காட்டாமல் மறைப்பதற்காகவே ஓடோமீட்டரின் கேபிளை டீலர்கள் குளறுபடி செய்துள்ளனர். அல்லது இதற்கு முன்பும் இந்த எர்டிகா கார் இவ்வாறு தான் இயக்கப்பட்டு வந்ததா என்பது இனி மேற்கொள்ளப்படும் விசாரணையின் மூலமே தெரிய வரும்.

ஓடோமீட்டரில் கை வைத்து சிக்கிக்கொண்ட கேரள கார் டீலர்!! அதிரடியாக ரூ.1 லட்சம் அபராதமாக விதிப்பு!

அதுமட்டுமில்லாமல் இவர்கள் உண்மையிலேயே திருவனந்தபுரத்தில் உள்ள ஷோரூம் ஒன்றிற்கு தான் காரை கொண்டு சென்று கொண்டிருந்தனரா என்கிற சந்தேகமும் போலீஸாருக்கும் உள்ளது. ஏனெனில் ஓடோமீட்டர் இயக்கத்தில் இல்லை என்பதால் இவர்கள் கூறும் எதையும் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் நம்பும் மனநிலையில் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இவ்வாறான ஓடோமீட்டர் குளறுபடிகளை நாடு முழுவதிலும் ஆங்காங்கே சில டீலர்கள் இன்னமும் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

ஓடோமீட்டரில் கை வைத்து சிக்கிக்கொண்ட கேரள கார் டீலர்!! அதிரடியாக ரூ.1 லட்சம் அபராதமாக விதிப்பு!

ஏனெனில் இவ்வாறான செயல்களின் மூலமாக காரின் மதிப்பையும், ஆயுட்காலத்தையும் அதிகமாக வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க முடியும். அதேநேரம் தங்களது பயன்பாட்டிற்கும் டீலர்களால் அந்த காரை பயன்படுத்தி கொள்ள முடியும். ஓடோமீட்டரை இவ்வாறு வேண்டுமென்றே பழுதாக்கி கொள்வதால் வேறு சில வழிகளிலும் ஆபத்துகள் உள்ளன.

ஓடோமீட்டரில் கை வைத்து சிக்கிக்கொண்ட கேரள கார் டீலர்!! அதிரடியாக ரூ.1 லட்சம் அபராதமாக விதிப்பு!

அதாவது ஓடோமீட்டர் பழுதாகி இருந்தால், வாகனம் எவ்வளவு தூரம் இயங்கி உள்ளது என்பது மட்டுமின்றி, வாகனம் எந்த வேகத்தில் இயங்கி கொண்டிருக்கிறது என்பதையும் ஓட்டுனரால் அறிய முடியாது. இது விபத்தில் கொண்டு சென்று முடிக்க அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் சில கார்களில் (குறிப்பாக தற்கால மாடர்ன் கார்களில்) ஓடோமீட்டர் பழுதானது ஸ்டேரிங் சக்கரத்தின் செயல்பாட்டிற்கும் பிரச்சனையாக அமைந்துவிடுகிறது. இதனால் இவ்வாறான அதிகப்படியான அபராதங்கள் கட்டாயமாகுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala MVD fines dealer Rs. 1 lakh for disconnecting odometer of unregistered car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X