முதியவரின் கார் இரசனை வேற ரகம்! சாலையில் போறவங்க எல்லாம் வாயடைச்சி நிற்க போறாங்க
பிஒய்டி (BYD), சீனாவை சேர்ந்த எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். சீனாவை தாண்டி சில வெளிநாடுகளிலும் தனது எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம், இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் இருந்து தனது கார்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது. 2021இல் அரசாங்க அதிகாரிகள் உள்பட சிலருக்கு மட்டுமே பிஒய்டி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. அதற்கடுத்து 2022இல் அட்டோ 3 (Atto 3) கார் மூலமாக தனது எலக்ட்ரிக் கார்களை பிஒய்டி நிறுவனம் பொது விற்பனைக்கு கொண்டுவந்தது.
அதன்பின் 2023ஆம் ஆண்டில் தனது 3வது எலக்ட்ரிக் காரை 'சீல்' (Seal) என்கிற பெயரில் பிஒய்டி அறிமுகம் செய்தது. சீல் என்பதற்கு தமிழில் நீர் நாய் என்று அர்த்தம் ஆகும். மற்ற இரு பிஒய்டி எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் சீல் எலக்ட்ரிக் காரின் விலை சற்று அதிகமாக இருந்ததினாலேயே இந்தியாவில் நிறைய பேரால் இந்த காரை வாங்க முடியவில்லை.

2023ஆம் ஆண்டிலேயே பிஒய்டி சீல் அறிமுகம் செய்யப்பட்டாலும், தற்போதுவரையிலும் நிறைய பேருக்கு இப்படியொரு விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் விற்பனையில் இருப்பதே தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலையில், கேரளா (Kerala)-இல் வயதான முதியவர் ஒருவர் தேடிப்பிடித்து பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார். மனைவி உடன் ஷோரூமுக்கு சென்று காரை அவர் டெலிவிரி பெறும் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கேரளாவின் கொச்சி (Kochi)-க்கு அருகே உள்ள திரிபுனித்துரா என்கிற பகுதியை சேர்ந்தவரான இவரது பெயர், சுப்பிரமணிய ஐயர் கிருஷ்ணன் (Subrahmanya Iyer Krishnan) ஆகும். கொச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேட்ரிங் (Catering) எனப்படும் உணவு பரிமாறும் தொழிலை செய்து அதன் மூலம் பணக்காரராக மாறியவராக இந்த முதியவர் விளங்குகிறார்.

இதன் மூலமாகவே சில விலையுயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கும் சுப்பிரமணிய ஐயர் கிருஷ்ணன் இந்தியாவிலேயே பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரை வாங்கிய வயதான மனிதராக அறியப்படுகிறார். இந்தியாவில் சீல் எலக்ட்ரிக் கார் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. டைனாமிக், பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என்பன அவை ஆகும்.
இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.41 லட்சத்தில் இருந்து ரூ.53 லட்சம் வரையில் உள்ளன. இதில், சுப்பிரமணிய ஐயர் கிருஷ்ணன் வாங்கியிருப்பது சீல் இவி எலக்ட்ரிக் காரின் விலையுயர்ந்த பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் ஆகும். பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரில் முழுவதும் கண்ணாடியிலான ரூஃப், பறித்து இழுக்கக்கூடிய வகையிலான கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

19-இன்ச் அலாய் சக்கரங்கள் உடன் உருவாக்கப்படும் சீல் எலக்ட்ரிக் காரை ஆர்டிக் நீலம், அரோரா வெள்ளை, அட்லாண்டிஸ் கிரே மற்றும் காஸ்மோஸ் கருப்பு உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம். அதேபோல், பேட்டரி ஆப்ஷன்களும் 61.44kWh மற்றும் 82.56kWh என இரு விதமான திறன்களில் வழங்கப்படுகின்றன. பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்டில் 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாடுகளில் டெஸ்லா (Tesla)-இன் மாடல் 3 (Model 3) என்கிற பிரபலமான எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக விளங்கும் எலக்ட்ரிக் காரை தான் இந்த கேரள முதியவர் வாங்கியுள்ளார். இதனால், இந்த காரை வெளியே கொண்டு சென்றால் யாராக இருந்தாலும் கொஞ்ச நேரத்துக்கு ஆச்சிரியமாக தான் பார்ப்பார்கள்.


Click it and Unblock the Notifications









