சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய ’வேலைக்காரன்’ ஃபகத் ஃபாசில்..!!
சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய ’வேலைக்காரன்’ ஃபகத் ஃபாசில்..!!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான ஃபகத் ஃபாசில் சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

'பெங்களூர் டேஸ்' மலையாள திரைப்படத்தில் நடித்த பிறகு கேரளாவையும் தாண்டி, தமிழகத்திலும் ஃபகத் ஃபாசிலுக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.
சமீபத்தில் வெளியான வேலைக்காரன் படம் மூலம் தமிழில் அறிமுகான அவர், அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

கேரள மாநிலத்தின் வங்கி ஒன்றில் கடன் பெற்று, விலையுயர்ந்த சொகுசு காரை ஃபகத் ஃபாசில் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அந்த கார் புதுசேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக புதுச்சேரியில் வசித்து வருவதாக கூறி போலி ஆவணங்களை தாக்கல் செய்து ஃபகத் ஃபாசில் அந்த சொகுசு காரை வாங்கியதாக கூறப்படுகிறது.

ரூ.20 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான விலையில் கார் வாங்கினால், அதற்கு கேரள மாநிலத்தில் சுமார் 20 சதவீத வரி கட்ட வேண்டும் என்பது விதி.
Recommended Video


இதை தவிர்ப்பதற்காகவே, போலி ஆவணங்களை தாக்கல் செய்து ஃபகத் ஃபாசில் காருக்கான பதிவு சான்றிதழை பெற்றுள்ளார். இது வரி ஏய்ப்பு குற்றமாகும்.

இதுதொடர்பாக திருவனந்தபுரம் போலீசார் ஃபகத் ஃபாசில் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு கேரள மாநிலக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர், கார் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் தனது வாக்குமூலங்களை அளித்தார். அதை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

ரூ. 50 ஆயிரத்திற்கான பிணைப்பத்திரம் மற்றும் இருவர் அளித்த உத்தரவாதங்களின் அடிப்படையில், திருவனந்தபுரம் போலீசார் அளித்த ஜாமினில் ஃபகத் ஃபாசில் வெளியே வந்தார்.

சொகுசு கார் வரி ஏய்ப்பு புகாரில் ஃபகத் ஃபாசிலை தொடர்ந்து, மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது.

தொடர்ந்து, தேசிய விருது வென்ற நடிகரும், கேரள பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் கோபி மீதும் சொசுக் கார் வரி ஏய்ப்பு புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








