இது புதுசா இருக்கே... எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அபராதம் போட்ட போலீஸ்... காரணத்தைக் கேட்டு சிரிக்கும் மக்கள்!
கேரளாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புகை சான்று இல்லை என அபராதம் விதித்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம்.

இன்று இந்தியாவில் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. எலெக்ட்ரிக் வாகனம் என்றால் இந்தியாவில் ஸ்கூட்டர்கள் தான் அதிகமாக விற்பனையாகிறது.

இதற்கு முக்கியமான காரணம் ஓலா, ஏத்தர் ஆகிய நிறுவனங்களின் ஸ்கூட்டர்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்குவது தான் முக்கியமான காரணம். இந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் இந்த வாகனங்கள் எமிஷன் இல்லாமல் இயங்குவது தான்.

இந்நிலையில் மக்களும் இந்த வாகனங்களை வாங்குவதால் பெட்ரோல் செலவு குறையும் என்பதால் இந்த ரக வாகனங்களை விரும்பி வாங்குகின்றனர். மோட்டார் வாகனச் சட்டப்படி ஒரு வாகனம் புகையைக் கக்கினால் மட்டுமே அந்த வாகனத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டுச் சான்று தேவைப்படும்.

இந்நிலையில் மக்களும் இந்த வாகனங்களை வாங்குவதால் பெட்ரோல் செலவு குறையும் என்பதால் இந்த ரக வாகனங்களை விரும்பி வாங்குகின்றனர். மோட்டார் வாகனச் சட்டப்படி ஒரு வாகனம் புகையைக் கக்கினால் மட்டுமே அந்த வாகனத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டுச் சான்று தேவைப்படும்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி கேரள மாநிலத்தில் ஒரு இருசக்கர வாகனத்திற்கு போலீசார் புகை சான்று இல்லை என அபராதம் விதித்த ரசீதும் அந்த வாகனத்தின் நம்பர்பிளேட் புகைப்படமும் சேர்ந்து வைரலாக பரவி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் இருப்பது ஏத்தர் 450எக்ஸ் வாகனமாகும். இது முற்றிலும் எலெக்ட்ரிக்கில் இயங்கும் வாகனம். இந்த வாகனத்திற்குக் கேரள போலீசார் புகை சான்று இல்லை என அபராதம் விதித்துள்ளனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலர் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து கருத்திட்டனர்.

சிலர் இந்த புகைப்படத்தில் மத்தியப் போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரியை டேக் செய்து இந்த வாகனத்திற்குப் புகை சான்று வாங்குவது எப்படி என கிண்டல் கேள்விகளைக் கூட எழுப்பியிருந்தனர். இந்தப் புகைப்படம் வைரலான நிலையில் இந்தச் சம்பவத்திற்குக் கேரள போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

அதன்படி குறிப்பிட்ட வாகனத்தில் வந்தவர் அவரது ஓட்டுநர் உரிமத்தைக் கொண்டு வரவில்லை என்றும், அவர் அசல் அல்லது நகல் என எந்த ஓட்டுநர் உரிமத்தையும் காட்டவில்லை என்றும் அதன் காரணமாகவே அவருக்கு அபராதம் விதிக்க போலீசார் முயன்றுள்ளனர் என்றும்.

ஆனால் மிஷினில் அவர் அபராதம் விதிக்க சட்ட விதியைத் தேர்வு செய்யும் போது தவறாக செய்துவிட்டதாகவும் அதனால் சட்டப்பிரிவு 213(5)(e)-ன் படி ரூ250 அபராதம் விதிக்கப்பட்டுவிட்டதாகவும், விளக்கம் அளித்துள்ளனர். மோட்டார் வாகன சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு வாகனத்தை இயக்குவதற்குக் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் தேவை.

எலெக்ட்ரிக் வாகனமாக இருந்தாலும் அது 25 கி.மீ குறைவான வேகத்தில் இயங்கினால் அந்த வாகனத்தைப் பதிவு செய்யத் தேவையில்லை. அந்த வாகனத்தை இயக்க ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. ஆனால் 25கி.மீ வேகத்திற்கு அதிகமாக இயங்கும் வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்து தான் இயக்க வேண்டும்.

அப்படியாக குறிப்பிட்ட ஸ்கூட்டர் பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டர் என்பதால் இந்த வாகனத்தை இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவை. அதே நேரம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எந்த வித மாசுவையும் வெளியிடாததால் அந்த வாகனத்திற்கு புகை சான்று தேவையில்லை.


Click it and Unblock the Notifications








