போலீஸாரையும் விட்டு வைக்கல... ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை யாருக்குதாங்க பிடிக்காது? கேரளாவில் நடந்துள்ள சம்பவம்!!
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சமீப காலங்களில் நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பலத்தரப்பட்ட மக்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்த போதிலும், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று சாலையில் சென்றால் நமது தலை தானாக திரும்பி, அதனை பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை.
அந்த அளவிற்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கிரேஸ் உருவாகி உள்ளது. அதிலிலும் ஓலா பெயரின் பிரபலம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கூடுதல் கவனத்தை பெற்று தந்துள்ளது. இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், கேரளாவில் வாகன சோதனையின் போது போலீஸார் அவ்வழியாக சென்ற ஓலா ஸ்கூட்டர் ரைடரை நிறுத்தி அவரது ஸ்கூட்டரில் அமர்ந்து சோதனை செய்துவது போல் தங்களது ஆசைகளையும் தீர்த்து கொண்டுள்ளனர். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.
ஆர்வி மீடியா என்ற ஃபேஸ்புக் க்ரூப்பில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ ஆனது ஒரு ஓலா ஸ்கூட்டர் ரைடரின் வி-லாக் ஆகும். அதாவது கர்நாடகா மாநிலத்தின் மைசூரில் இருந்து கேரளா கோழிக்கோடு வரையிலான தனது பயணத்தை அவர் செல்போனில் காட்சிப்படுத்தியவாறு வந்துள்ளார். அப்போதுதான் இடையில் வாகன சோதனையில் இருந்த போலீஸார் இவரையும் மடக்கி நிறுத்தி, ஸ்கூட்டரில் ஆசையாக அமர்ந்து சோதனை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஓலாவின் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்வதிலேயே விலைமிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவாகும். இந்த வீடியோவை காட்சிப்படுத்தியுள்ள ரைடர், கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு முடிந்தவரையில் நெடுஞ்சாலையிலேயே பயணித்து வந்துள்ளார். ஏனெனில் நெடுஞ்சாலைகளிலேயே மைலேஜை அதிகமாக பெற முடியும் என்பது எவரொருவருக்கும் தெரிந்த விஷயமே.

இருப்பினும், ஒரு கட்டத்தில் கர்நாடகாவில் உள்ள பாண்டிபுர் தேசிய பூங்காவை கடக்க வேண்டிய சூழல் இந்த குறிப்பிட்ட எஸ்1 ப்ரோ ரைடருக்கு ஏற்பட்டுள்ளது. இருபக்கமும் நீளமான மரங்கள் நிறைந்த இந்த பகுதியின் சாலையில் விலங்குகள் நடமாட்டமும் உள்ளது. ஆனால் இந்த ரைடருக்கு மானை தவிர வேறு விலங்குகள் எதையும் பார்ப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை. இந்த தேசிய பூங்காவை தாண்டியவுடன் கேரள செக் போஸ்ட் உள்ளது.
செக் போஸ்ட்டை கடந்து சில கிமீ தூரம் பயணித்து கொண்டிருந்த பொழுது இடையில் இந்த ரைடரை கேரள போலீஸார் வாகன சோதனைக்காக நிறுத்தியுள்ளனர். கேரள மாநிலத்தில் ஸ்கூட்டரில் கேமிராவை பொருத்துவது சட்டத்திற்கு புறம்பானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் மைசூரில் இருந்து வந்துள்ள இந்த ரைடர் அதனை மறந்து, தனது எஸ்1 ஸ்கூட்டரில் கோ பிரோ கேமிராவை பொருத்தி இருந்துள்ளார். இதனை போலீஸார் பார்த்து கேள்வி கேட்பார்களோ என அவர் பயப்படுவதை வீடியோவில் அறிய முடிகிறது.

ஆனால் போலீஸார் அதனை பற்றி எல்லாம் சோதித்ததாக தெரியவில்லை. அவர்களது முதல் கவனம், ஓட்டுனர் மது அருந்தி உள்ளாரா அல்லது மது உள்பட தடை செய்யப்பட்ட பொருட்களை ஏதேனும் கர்நாடகாவில் இருந்து கொண்டுவருகிறாரா என ஸ்கூட்டரில் சோதனை செய்வதிலேயே இருந்தது. அதன்பின் அங்கிருந்த போலீஸாருள் ஒருவர் இந்த ரைடரை பற்றியும், அவரது பயணம் பற்றியும் கேட்கிறார். இந்த விசாரணையின் மூலம் இந்த நபர் மைசூருவில் இருந்து கோழிக்கோடு செல்வதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.
ஆனால் அதன்பின்பே போலீஸாருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. அதாவது, இவ்வாறான நீண்டத்தூர பயணங்களை எவ்வாறு இந்த நபர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றில் மேற்கொண்டுள்ளார் என்று. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் ஸ்கூட்டர் எவ்வளவு ரேஞ்சை வழங்குகிறது? எனவும் போலீஸார் கேட்டனர். இந்த கேள்விக்கு அந்த நபர், முழுவதும் சார்ஜ் நிரப்பிய பின்னர் தான் இதுவரையில் 150கிமீ தொலைவிற்கு பயணம் செய்து உள்ளதாக கூறியதும் போலீஸார் இன்னும் அதிர்ச்சியில் மூழ்கினர்.


Click it and Unblock the Notifications








