சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து

By Balasubramanian

கேரளாவில் உள்ள தனியார் பஸ்சில் இளைஞர்களை கவர ஆபாச பட நடிகர் நடிகைகளான சன்னிலியோன், மியா கலிஃபா, ஜானி சிம்ஸ் உள்ளிட்டவர்களின் படங்களை வரைந்துள்ளனர். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து

கேரள மாநிலத்தில் உள்ள உள்ள வர்க்கலா பகுதியை சேர்ந்த சிக்கூஸ் டிராவஸ் என்ற நிறுவனம் டூரிஸ்ட்களுக்காக பஸ்களை நடத்தி வருகிறது.

சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து

இந்நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களை வித்தியாசமான முறையில் கவர முடிவு செய்தது. அந்த வகையில் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ், பைரியேட்ஸ் ஆப் தி கரீபியன் ஆகிய ஹாலிவுட் படங்களின் வரும் கதாபாத்திரங்களை வைத்து தங்கள் பஸ்சிற்கு டிசைன் செய்தனர்.

சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து

எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக சன்னிலியோன், மியாகலிஃபா, ஜானி சின்ஸ், கோர்ட்னே கேன், ஜோர்டி எல் நிலானி போன்ற வெளிநாட்டு அபாச பட நடிகர்களின் படங்களை கொண்டு டிசைன் செய்துள்ளனர்.

சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து

மேலே குறிப்பிட்ட ஆபாச பட நடிகர்கள் இந்தியாவில் மிகப்பிரபலமானவர்கள். இணையதளங்களில் இருக்கும் இளைஞர்கள் இவர்கள் குறித்து அடிக்கடி பேசி வருகின்றனர். ஆண்கள் பெண்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் இவர்களின் முகங்கள் பிரபலம் என்பதால் இவர்களின் படங்களை பயன்படுத்தி இளைஞர்களை கவர பஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து

இது குறித்து அந்த பஸ் கம்பெனி ஓனர் ஷிரினிடம் பேசும் போது :" எங்கள் பஸ்சில் வரும் இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் பலர் டூர் செல்லும் போது பஸ்சிற்கு முன்பும் பின்பும் சன்னி லியோன் புகைப்படத்துடன் கூடி பேனரை அடிக்கடி வைத்து பயணம் செய்கிறார்கள்.

சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து

இதன் மூலமே பஸ்சிஸ் அவர்களின் மத்தியில் இவர்கள் எவ்வளவு பிரபலம் என்பது எங்களுக்கு தெரியவந்தது. இதனால் இவர்களின் படங்களை பஸ்களில் வரைந்து இளைஞர்களை கவர முடிவு செய்தோம்.

சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து

இது மட்டும் அல்லாமல் இளைஞர்கள் மத்தியில் வேறு சில பிரபலங்களாக இருக்ககூடிய ஹலிவுட் பட கதாபாத்திரங்களான அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட பட கதாபாத்திரங்களையும், இதில் வரைய முடிவு செய்தோம்.

சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து

இதை பெயிண்ட் செய்ய சுமார் 2.6 லட்ச ரூபாய் செலவானது. கலைஞர்கள் இந்த வேலையை முடிக்க சுமார் 20 நாட்கள் எடுத்து கொண்டார்கள். நாங்கள் எதிர்பார்த்தது போலவே படங்கள்வந்துள்ளது.

கேரளாவில் தனியார் பஸ்களுக்கு என எந்த வித கலர் விதிகளும் கிடையாது. எப்படி வேண்டுமானாலும் பெயிண்ட் செய்து கொள்ளலாம். மேலும் நாங்கள் வரைந்துள்ள ஓவியம் எந்த வகையிலும் வக்கிரத்தை தூண்டும் வகையிலோ, ஆபாசமாகவோ இல்லை. ஆபாச படங்களில் நடித்த நடிகர், நடிகைகளின் படங்களின் முகங்களை மட்டும் அவர்கள் கன்னியமாக எடுத்த படங்களை கொண்டு வரைந்துள்ளோம்

சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து

அது மட்டும் இல்லாமல் பஸ் உட் கட்டமைப்பையும் இளைஞர்கள் குதுகலத்துடன் பயணிக்க பார்ட்டி ஹால், பப்களில் உள்ளது போல லைட்களை வடிவமைத்துள்ளோம். இதன் மூலம் பயணிகள் பயணத்தின் போதே கொண்டாட்டங்களை மேற்கொள்ளலாம். மேலும் இசைகளுக்கு டி.ஜே செட்டும் அமைக்கப்பட்டுள்ளது " என கூறினார்.

சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து

இவர்கள் பஸ்ஸில் வரைந்த இந்த படத்தை வரைந்துள்ள சம்பவம் திருவனந்தபுரம்- வர்க்கலா இடையே பஸ் பயணித்த போது பொதுமக்களிள் ஒருவர் எடுத்து அதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அதன் பின் அந்த புகைப்படம் இணைதளத்தில் வைரலாக பரவியது. பலர் இது குறித்து ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் முன்வைத்து இணையத்தில் பெரும் விவாத்தையே ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலர் இந்த படத்தை ஆபாச பட நடிகர்களான ஜானி சின்ஸ், சன்னி லியோன், மியா கலிஃபா, அபாச படங்களை எடுக்கும் தயாரிப்பு நிறுவனமான பிரேஸர்ஸ் ஆகியவற்றை டுவிட்டரில் டேக் செய்து பதிவிட்டனர்.

அதற்கு ஆபாச படங்களை இயக்கும் கெய்ரன் லீ என்பவர் இந்த காட்சி தன்னை ஈர்ப்பதாகடுவிட்டர்பதில் அளித்திருந்தார். அபாச நடிகர் ஜானி சின்ஸ் இதற்கு " ஹாஹா இந்த பஸ் அமெரிக்காவில் ஓடினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்... நன்றாக உள்ளது" என பதிவிட்டிருந்தார்.

இந்த படத்தை வரைந்த திரிச்சூரை சேர்ந்த ரித்தீஸ் என்பவர் கூறியதாவது :"ஏர் பிரஷ் மூலம் பல்வேறு பிரபலங்களின் புகைப்படங்களை கொண்டு பஸ்களின் படம் வரைந்துள்ளேன். ஏன் சில சினிமா நடிகர்களின் படங்களை கூட வரைந்துள்ளேன். ஆனால் இது புதிய விதமாக உள்ளது. அவர்கள் சொல்லும் போது ஒரு முறை யோசித்தேன். பின்பு அவர்கள் காண்பித்த டிசைனில் ஆபாசம் இல்லாததால் ஒப்பு கொண்டேன்" என கூறினார்.

சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து

பஸ்சிஸ் ஆபாச நடிகர் நடிகைகளில் படங்கள் வரைந்துள்ளது. தற்போது இணையதளங்கில் வைரலாக பரவி வருவதால் இனி இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இந்த கலாச்சாரம் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபாசம் இல்லாமல் மற்றவர்கள் கண்களை உறுத்தாதவறை இதற்கு எந்த பிரச்னையும் வராது என்றே கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

01. பெரிய அண்ணனுக்கு பயந்து மோடி எடுத்த விபரீத முடிவு.. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வதன் பகீர் காரணம்..

02. 2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

03. பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

04. ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

05. வெறும் 12 ஆயிரம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விற்பனைக்கு கொண்டு வர கல்லூரி மாணவர்கள் தீவிரம்..

Most Read Articles

Tamil
English summary
kerala private bus painted with sunny leone, mia khalifa images to attaract youths. Read in Tamil
Story first published: Wednesday, July 11, 2018, 18:08 [IST]
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more